search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oppo"

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை பிரிவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய A17K ஸ்மார்ட்போனினை சத்தமின்றி அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ஒப்போ A17 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது A17K அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.56 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 4ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ A17K அம்சங்கள்:

    6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்

    IMG பவர் VR GE8320 GPU

    3 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர்ஒஎஸ் 12.1

    8MP பிரைமரி கேமரா

    5MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஒப்போ A17K ஸ்மார்ட்போன் நேவி புளூ மற்றும் கோல்டு நிறங்களில் என இரண்டு விதமான கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒப்போ A17K விற்பனை ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ரெனோ 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனிற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் ரெனோ 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது ரெனோ 8 ப்ரோ 5ஜி மாடலின் லிமிடெட் எடிஷன் வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி ஹவுஸ் ஆப் தி டிராகன் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    புதிய லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனிற்கான டீசரில் ஸ்மார்ட்போன் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் லோகோ இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் வித்தியாசமாக பெட்டியில் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    லிமிடெட் எடிஷன் மாடல் என்பதால் ஸ்மார்ட்போனுடன் மேலும் சில பொருட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். புது லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனிற்கான டீசர் ஒப்போ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    • ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • விலை குறைப்பு ஒப்போ ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தேர்வு செய்யப்பட்ட தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. அதன்படி ஒப்போ F21 ப்ரோ, ஒப்போ ஏ55 மற்றும் ஒப்போ ஏ77 போன்ற மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறைக்கப்பட்ட புது விலை ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

    அதன்படி ஒப்போ F21 ப்ரோ மற்றும் ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் ரூ. 15 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒப்போ F21 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் தற்போது ரூ. 21 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

    ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் ரூ. 14 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. இதே போன்று ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 15 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ55 மாடலில் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ஒப்போ F21 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 64MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது சென்சார், 2MP மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    • ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் எந்தெந்த மாடல்களில் ஏர்டெல் 5ஜி கனெக்டிவிட்டி கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
    • இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுக்க எட்டு நகரங்களில் 5ஜி கனெக்டிவிட்டியை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. 5ஜி சேவை வெளியீட்டை தொடர்ந்து எந்தெந்த மாடல்களில் ஏர்டெல் 5ஜி சேவைகளை பயன்படுத்த முடியும் என்ற பட்டியலையும் ஏர்டெல் வெளியிட்டு உள்ளது.

    ஏர்டெல் மட்டுமின்றி ஒப்போ நிறுவனமும் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் அனைத்து 5ஜி மாடல்களிலும் 5ஜி கனெக்டிவிட்டியை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரனாசி நகரங்களில் வசிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள நெட்வொர்க் செட்டிங்ஸ்-ஐ ஏர்டெல் 5ஜி-க்கு மாற்றிக் கொண்டு அதிவேக 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.

    ஒப்போ நிறுவனம் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்வில் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி எக்ஸ்பீரியன்ஸ் அனுபவத்தை ஒப்போ வழங்கியது. இது தவிர முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் மேற்கொண்ட சோதனையில் 1Gbps வரையிலான இணைய வேகத்தை ஒப்போ சாதனங்கள் பதிவு செய்தன.

    • ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • புதிய ஒப்போ A77s ஸ்மா்ர்ட்போன் 5 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர்ஒஎஸ் 12.1 கொண்டிருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய A77s ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. புதிய ஒப்போ A77s ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் LCD HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 8 ஜிபி ரேம், 5 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி, ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஒஎஸ் 12.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 8MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சன்செட் ஆரஞ்சு நிற வெர்ஷன் பின்புறம் லெதர் போன்ற பேக் கொண்டிருக்கிறது. இதில் ஸ்டாரி பிளாக் மற்றும் மேட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ A77s ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ஒப்போ A77s அம்சங்கள்:

    6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    பாண்டா கிளாஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

    அட்ரினோ 610 GPU

    8 ஜிபி ரேம், 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஒஎஸ் 12.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP மோனோக்ரோம் கேமரா

    8MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒப்போ A77s ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நாளை (அக்டோபர் 07) முதல் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • ஒப்போ A17 ஸ்மார்ட்போன் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதி கொண்டிருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய A17 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒப்போ A17 ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ ஸ்கிரீன், 5MP செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பின்புற பேனலில் ஒற்றை பௌக்ஸ் லெதர் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. IPX4 சான்று பெற்று இருக்கும் ஒப்போ A17 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    ஒப்போ A17 அம்சங்கள்:

    6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர்

    IMG PowerVR GE8320 GPU

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஒஎஸ் 12.1

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் சென்சார்

    5MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஒப்போ A17 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது. 

    • ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய F21s ப்ரோ சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
    • F21s சீரிசில் இரண்டு மாடல்கள் அறிமுகமாகி இருக்கும் நிலையில், இவை ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் புதிய F21s ப்ரோ சீரிசில் F21s ப்ரோ மற்றும் F21s ப்ரோ 5ஜி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், இவை டான்லைட் கோல்டு மற்றும் ஸ்டார்லைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றுடன் ஒப்போ நிறுவனத்தின் குளோ டிசைன் கொண்டிருக்கிறது.

    ஒப்போ F21s ப்ரோ அம்சங்கள்:

    6.43 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

    அட்ரினோ 610 GPU

    8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஒஎஸ் 12.1

    டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா

    2MP மைக்ரோஸ்கோப் கேமரா

    32MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    4500 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்


    ஒப்போ F21s ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.43 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 60Hz AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒஎஸ் 12

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா

    2MP மோனோக்ரோம் கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    4500 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒப்போ F21s ப்ரோ மற்றும் F21s ப்ரோ 5ஜி மாடல்கள் டான்லைட் கோல்டு மற்றும் ஸ்டார்லைட் பிளாக் நிறங்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 22 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 25 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் ஒப்போ ஸ்டோர், அமேசான் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் செப்டம்பர் 19ஆம் தேதி கிடைக்கிறது.

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய A57e ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. முன்னதாக ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒப்போ A57e மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    இதில் 6.56 இன்ச் HD+IPS LCD பேனல், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP மோனோக்ரோம் கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டச்ராய்டு 12 சார்ந்த கலர் ஓஎஸ் 12.1 கொண்டிருக்கிறது.


    ஒப்போ A57e அம்சங்கள்:

    6.56 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர்

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓஎஸ் 12.1

    13MP பிரைமரி கேமரா

    2MP மோனோக்ரோம் கேமரா

    8MP செல்பி கேமரா

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    கைரேகை சென்சார்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஒப்போ A57e ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

    • ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கலர்ஓஎஸ் 13 ஆண்ட்ராய்டு 13-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • புது கலர்ஓஎஸ் 13 அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 சார்ந்து உருவாக்கப்பட்ட கலர்ஓஎஸ் 13-ஐ தனது ஸ்மார்ட்போன்களுக்காக அறிவித்து இருக்கிறது. கலரோஒஎஸ் 13 மற்றும் ஆக்சிஜன்ஒஎஸ் 13 ஒரே மாதிரியே காட்சியளிக்கின்றன. எனினும், இரு ஒஎஸ்களின் அம்சங்களில் எந்த அளவுக்கு மாற்றங்கள் இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

    தண்ணீரின் திரவத் தன்மையை சார்ந்து கலர்ஒஎஸ் 13 டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய அக்வாமார்பிக் டிசைன் உள்ளது. ஆக்சிஜன்ஒஎஸ் 13 தண்ணீர் மற்றும் இயற்கை சார்ந்து டிசைன் செய்யப்பட்டு இருந்தது. புதிய தீம் நிறங்கள் கடற்பரப்பில் சூரிய உதயம் மற்றும் மறைவின் போது ஏற்படும் நிற மாற்றங்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளன. கலர்ஒஎஸ் 13-இல் கார்டு ஸ்டைல் லே-அவுட் உள்ளது.


    இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி உள்ளது. இதற்காக ஹோம்லேண்ட் பெயரில் புகைப்படங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அனிமேஷன்கள் வெப்பநிலையை பொருத்து தானாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பயனர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்க ஏதுவாக டைனமிக் கம்ப்யுடிங் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒரே ஆண்டில் ஒப்போ நிறுவனத்தின் 33 ஸ்மார்ட்போன்களுக்கு கலர்ஒஎஸ் 13-ஐ முதற்கட்டமாக வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதன் மூலம் 60 நாடுகளில் சுமார் 160 மில்லியன் பயனர்கள் புது ஒஎஸ்-ஐ பயன்படுத்த முடியும். கலர்ஒஎஸ் வரலாற்றில் இது மிகப் பெரிய அப்டேட் திட்டம் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. 2023 வாக்கில் 20-க்கும் அதிக சாதனங்களில் கலர்ஒஎஸ் 13 வழங்கப்பட இருக்கிறது.

    • ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
    • நோக்கியா நிறுவனத்துடனான காப்புரிமை விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போன்களில் வழங்கி இருக்கும் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கு முறையான உரிமம் வைத்திருக்காத காரணத்தால் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு எதிராக ஜெர்மனி நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வழக்கில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு மூலம் பிரச்சினையை முடித்துக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், இதற்கு இருதரப்பும் உடன்படவில்லை.


    இதை அடுத்து ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களை ஜெர்மனியில் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒப்போ நிறுவன வலைதளத்தில், சாதனம் பற்றிய விவரம் எங்களின் வலைதளத்தில் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து ஒப்போ சாதனங்களை பயன்படுத்தலாமா, அப்டேட் மற்றும் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுமா என்ற கேள்வி ஒப்போவிடம் எழுப்பப்பட்டது.


    இதற்கு பதில் அளித்த ஒப்போ நிறுவனம், ஒப்போ சாதனங்களை எந்த விதமான தடையும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம். நிச்சயம் உங்களுக்கான எதிர்கால அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இயர்போன், சார்ஜர் போன்ற அக்சஸரீக்களை ஒப்போ நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். 

    • ஒப்போ நிறுவனம் மிட் ரேன்ஜ் பிரிவில் புது ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • இதில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஒப்போ A77 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஒப்போ A77 மாடலில் 6.56 இன்ச் IPS LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓ.எஸ். 12.1 கொண்டிருக்கும் ஒப்போ A77 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 33 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2 MP மேக்ரோ / டெப்த் சென்சார், எல்இடி பிளாஷ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.


    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ A77 மாடலில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

    விலை விவரங்கள்:

    ஒப்போ A77 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும்.

    • ஒப்போ என்கோ எக்ஸ் 2 இயர்பட்ஸ் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • 40 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது.

    ஒப்போ நிறுவனம் கடந்த வாரம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அத்துடன் அந்நிறுவனம் அதன் ப்ரீமியம் இயர்பட்ஸையும் லான்ச் செய்திருந்தது. ஒப்போ என்கோ எக்ஸ் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ், ஆப்பிள் ஏர்பாட்ஸை போன்ற டிசனை கொண்டுள்ளது.

    11 எம்.எம் டைனமிக் டிரைவர் மற்றும் 6 எம்.எம் பிளானர் டயபிராம் டிரைவர் ஆகிய டிரைவர்களை கொண்டுள்ளது. மேலும் ப்ளூடூத் 5.2, மல்டிபிள் நாய்ஸ் கேன்சலேசன் லெவல், 3 மைக்ரோபோன்கள், டைப் சி யு.எஸ்.பி போர்ட், வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் என எண்ணற்ற அம்சங்களை கொண்டுள்ளது. 40 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது.


    ஒப்போ என்கோ எக்ஸ் 2 இயர்பட்ஸின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இன்று முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. 

    ×