என் மலர்

  மொபைல்ஸ்

  8ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புது ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்
  X

  8ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புது ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
  • புதிய ஒப்போ A77s ஸ்மா்ர்ட்போன் 5 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர்ஒஎஸ் 12.1 கொண்டிருக்கிறது.

  ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய A77s ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. புதிய ஒப்போ A77s ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் LCD HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 8 ஜிபி ரேம், 5 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி, ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஒஎஸ் 12.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

  இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 8MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சன்செட் ஆரஞ்சு நிற வெர்ஷன் பின்புறம் லெதர் போன்ற பேக் கொண்டிருக்கிறது. இதில் ஸ்டாரி பிளாக் மற்றும் மேட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ A77s ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

  ஒப்போ A77s அம்சங்கள்:

  6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

  பாண்டா கிளாஸ் பாதுகாப்பு

  ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

  அட்ரினோ 610 GPU

  8 ஜிபி ரேம், 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்

  128 ஜிபி மெமரி

  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

  ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஒஎஸ் 12.1

  டூயல் சிம் ஸ்லாட்

  50MP பிரைமரி கேமரா

  2MP மோனோக்ரோம் கேமரா

  8MP செல்பி கேமரா

  பக்கவாட்டில் கைரேகை சென்சார்

  3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

  டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

  யுஎஸ்பி டைப் சி

  5000 எம்ஏஹெச் பேட்டரி

  33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

  விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

  ஒப்போ A77s ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நாளை (அக்டோபர் 07) முதல் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

  Next Story
  ×