என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்
குறைந்த விலையில் அறிமுகமான புது ஒப்போ ஸ்மார்ட்போன்
- ஒப்போ நிறுவனத்தின் புதிய A57e ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
ஒப்போ நிறுவனம் குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. முன்னதாக ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒப்போ A57e மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
இதில் 6.56 இன்ச் HD+IPS LCD பேனல், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP மோனோக்ரோம் கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டச்ராய்டு 12 சார்ந்த கலர் ஓஎஸ் 12.1 கொண்டிருக்கிறது.
ஒப்போ A57e அம்சங்கள்:
6.56 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர்
4 ஜிபி ரேம்
64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓஎஸ் 12.1
13MP பிரைமரி கேமரா
2MP மோனோக்ரோம் கேமரா
8MP செல்பி கேமரா
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
3.5 எம்எம் ஆடியோ ஜாக்
கைரேகை சென்சார்
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய ஒப்போ A57e ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.