search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nigeria"

    நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nigeria #NigeriaOilTankerfire

    லாகோஸ்:

    நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று மாலை ஒரு எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த லாரியில் இருந்து எண்ணெய் வெளியே கசிய தொடங்கியது. 

    சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. அந்த தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக பரவியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் 5 பேருந்துகள், 2 டிரக்கள் மற்றும் 45 கார்கள் தீக்கிரையாகியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. #Nigeria #NigeriaOilTankerfire
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் நைஜீரியாவை 2-1 என வீழ்த்திய அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #NGAARG #WorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின. அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில் 
    அர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். 



    அதன்பின், முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 



    அதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.



    அதன்பின் எந்த கோலும் அடிக்கப்படாததால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோசியா அணி ஐஸ்லாந்தை வீழ்த்தியது. இதனால் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது #NGAARG #WorldCup2018 #FIFA2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. #FIFA2018 #Argentina #Messi #Nigeria

    ‘சி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி 2 வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. இந்த பிரிவில் அடுத்த சுற்றை எட்டும் இன்னொரு அணி எது என்பது இன்று இரவு தெரிந்து விடும். 4 புள்ளிகளுடன் உள்ள டென்மார்க் அணி பிரான்சுடன் டிரா செய்தாலே நாக்-அவுட் சுற்றை அடைந்து விடலாம். அதே சமயம் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் பெருவை வீழ்த்த வேண்டும், பிரான்ஸ் அணி, டென்மார்க்கை சாய்க்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் ஆஸ்திரேலியா, டென்மார்க் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் ஒரு அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.

    ‘டி’ பிரிவில் முக்கியமான ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. ஐஸ்லாந்துடன் டிரா கண்டு, குரோஷியாவுடன் படுதோல்வி அடைந்த அர்ஜென்டினா (1 புள்ளி) இன்றைய தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியில் உள்ளது. அப்போது தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும். முதல் இரு ஆட்டங்களிலும் சொதப்பிய அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி இந்த ஆட்டத்திலாவது ஜொலிப்பாரா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தங்கள் அணியை அவர் வெற்றிகரமாக கரைசேர்க்க தவறினால் இத்துடன் அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிந்து போகும் ஆபத்து கூட இருக்கிறது. அதே சமயம் அர்ஜென்டினாவுக்கு ‘ஆப்பு’ வைத்து அடுத்த சுற்றுக்குள் நுழைவதில் நைஜீரியா இளம் படையினரும் கங்கணம் கட்டி நிற்பதால் இந்த ஆட்டத்தில் அனல்பறக்கும் என்று நம்பலாம்.

    ஏற்கனவே 2-வது சுற்றை உறுதி செய்து விட்ட பலம் வாய்ந்த குரோஷியா அணி, கடைசி லீக்கில் ஐஸ்லாந்துடன் மோதுகிறது. இதில் குரோஷியா எளிதில் வெற்றி காணும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒரு வேளை ஐஸ்லாந்து அதிர்ச்சி அளித்தால், அர்ஜென்டினாவுக்கு சிக்கல் உருவாகும். #FIFA2018 #Argentina #Messi #Nigeria
    மத்திய நைஜீரியாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #Nigeria #Violence
    ஜோஸ்:

    நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 86 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். 50-க்கு மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது என முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நைஜீரியாவில் நிலப் பிரச்னை தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் நடப்பது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டில் இதுபோன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. #Nigeria #Violence
    நைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #Nigeria #BokoHaramAttack
    கனோ:

    நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.

    இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள டம்போவா நகரத்தில் நேற்று இரவு போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் இரண்டு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். #Nigeria #BokoHaramAttack
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #CRONGA

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 12.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள குரோசியா, நைஜீரியா அணிகள் மோதின. 

    இப்போட்டியின், முதல் பாதிநேர ஆட்டத்தின் 32-வது நிமிடம் குரோசியா வீரர் ஒருவர் கோல் அடிக்க முயற்சித்தார். அந்த பந்து நைஜீரியா வீரர் எடிபோவின் காலில் பட்டு சுய கோலாக மாறியது. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடம் குரோசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் குரோசியா வீரர் மோட்ரிச் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இறுதியில், குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இன்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கோஸ்டா ரிக்கா - செர்பியா, ஜெர்மனி - மெக்சிகோ, பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #CRONGA
    ×