search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கால்பந்து 2018 - நைஜீரியா அணியை 2-0 என வீழ்த்தியது குரோசியா
    X

    உலகக்கோப்பை கால்பந்து 2018 - நைஜீரியா அணியை 2-0 என வீழ்த்தியது குரோசியா

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #CRONGA

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 12.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள குரோசியா, நைஜீரியா அணிகள் மோதின. 

    இப்போட்டியின், முதல் பாதிநேர ஆட்டத்தின் 32-வது நிமிடம் குரோசியா வீரர் ஒருவர் கோல் அடிக்க முயற்சித்தார். அந்த பந்து நைஜீரியா வீரர் எடிபோவின் காலில் பட்டு சுய கோலாக மாறியது. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடம் குரோசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் குரோசியா வீரர் மோட்ரிச் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இறுதியில், குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இன்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கோஸ்டா ரிக்கா - செர்பியா, ஜெர்மனி - மெக்சிகோ, பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #CRONGA
    Next Story
    ×