search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nigeria"

    நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்பினருக்கும் ராணுவத்திற்குமிடையே ஏற்பட்ட சண்டையில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #NigeriaBokoHaramAttack
    லாகோஸ்:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் நைஜீரியாவின் பனி யாட் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளத்தின் மீது போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர். 4 துப்பாக்கி டிரக்குகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து தாக்கினர்.  இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினர் பதில்  தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவம் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து பயங்கரவாதிகளிடம் இருந்த ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை ராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

    முன்னதாக, கடந்த 15ம் தேதி மைதுகுரியில் உள்ள மசூதியின் அருகில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்த அமைப்பைச் சேர்ந்த 3 தற்கொலை படையினர், உட்பட 11 பேர் பலியாகினர்.

    போகோ ஹராம் அமைப்பு ஆப்பரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த அமைப்பு 2009ம் ஆண்டு நைஜீரியாவின் அரசினை எதிர்த்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. #NigeriaBokoHaramAttack

    நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். #NigeriaLassafever
    லாகோஸ்:

    உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல்  கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி, 171 பேரைக் கொன்றது. இந்த நோய் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகிறது.

    நைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது  26.7 சதவிகித இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 60 பேருக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நைஜீரியாவின் 36 மாநிலங்களில் உள்ள ஏழு இடங்களிலும், அபுஜாவின் தலைநகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான  நடவடிக்கைகள் நைஜீரிய சுகாதார அதிகாரிகள்,  உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களுடன் இணைந்து மேற்கொள்கின்றனர்.

    லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். லசா எனும் பெயர் வடக்கு நைஜீரியாவின் லசா நகரத்திலிருந்து வந்ததாகும். இந்நோய் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

    இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துடனும், எலிகளின் தொற்று இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  #NigeriaLassafever 
    நைஜீரியா நாட்டின் தெற்கு பகுதியில் பெட்ரோல் லாரி கவிழ்ந்து, வெடித்து சிதறிய விபத்தில் 20-க்கும் அதிகமானவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #20killed #Nigeria #tankerexplosion #Nigeriatankerexplosion
    நைஜர்:

    நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் உள்ள கிராஸ் ரிவர் மாநிலத்தின் கலாபர்-ஓடும்பானி நெடுஞ்சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிய ஒரு டேங்கர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது.

    வேகமாக சென்ற லாரி ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகிச்சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது. கவிழ்ந்த லாரியில் இருந்து பெட்ரோல் வழிந்தோடுவதை கண்ட அப்பகுதி மக்கள் பாத்திரங்களுடன் ஓடிசென்று பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்தனர்.



    அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென்று தீப்பிழம்பாக வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சைபெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #20killed #Nigeria #tankerexplosion #Nigeriatankerexplosion
    லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 174 பேர் தாங்களாக முன்வந்து சொந்த நாடான நைஜீரியாவுக்கு திரும்பி உள்ளனர். #MigrantsDeported #Libya
    திரிபோலி:

    வறுமை, உள்நாட்டு சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர். இதற்காக ஆபத்தான மத்திய தரைக்கடல் பகுதியில் படகுகளில் பயணிக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். அவர்களை லிபிய பாதுகாப்பு படையினர் மீட்டு தங்கள் பகுதிக்கு கொண்டு வந்து முகாம்களில் தங்க வைக்கின்றனர்.

    அதேபோல் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சிக்கும் நபர்களும் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் நிவாரண முகாம்கள் நிரம்பி வழிந்தன.



    இதையடுத்து, லிபியாவில் சிக்கித் தவிக்கும் சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) செய்தது. இதன்மூலம் பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

    அவ்வகையில் நேற்று நைஜிரியாவைச் சேர்ந்த 174 பேர் லிபியாவில் இருந்து தாயகம் திரும்பியதாக ஐஓஎம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 32 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றிய அறக்கட்டளை நிதி உதவி பெற்று தங்கள் நாடுகளுக்கு திரும்பி உள்ளதாகவும் ஐஓஎம் கூறியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகளை அவர்களின் நாடுகளுக்கு ஐஓஎம் திருப்பி அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. #MigrantsDeported #Libya

    நைஜீரியாவில் இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் பலியாகினர். #Nigeria #CommunalViolence
    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 55 பேர் பலியாகினர்.

    இந்த மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாகாண போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். மேலும் அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த மத மோதல்கள் குறித்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எந்த மதமும் அல்லது கலாசாரமும் வன்முறையை ஆதரிப்பது இல்லை. சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவது அவசியம்” என்று கூறினார்.

    மேலும், “வெவ்வேறு மத நம்பிக்கை உள்ள மக்களிடம் நல்லிணக்கம் இல்லாதவரையில், நமது அன்றாட பணிகளை நாம் செய்து முடிப்பது சாத்தியம் இல்லாமல் போய் விடும். இந்த பிரச்சினையில், மத தலைவர்கள் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும்; வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். #Nigeria #CommunalViolence 
    5000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் சிக்கிய குஜராத் தொழிலதிபர் துபாயில் இருந்து நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. #GujaratPharma #BankFraud #NitinSandesara
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வந்தார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து கம்பெனி இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 



    மேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடக்கியது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. சிபிஐயும் அவரைத் தேடி வருகிறது.

    இதனிடையே நிதின் சந்தேசரா துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் நிதின் சந்தேசரா தற்போது துபாயில் இல்லை என்றும், அவர் தன்  குடும்பத்தினருடன் நைஜீரியா நாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரியாவுடன் கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தமோ பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தமோ இல்லாததால் அங்கிருந்து நிதினை இந்தியாவுக்கு கொண்டு வருவது கடினம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே துபாயில் நிதின் சந்தேசரா கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும், இந்த தகவல் வெளியாவதற்கு முன்பாகவே அவர் நைஜீரியாவுக்கு சென்றுவிட்டதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். #GujaratPharma #BankFraud #NitinSandesara
    அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியா நாட்டில் பெய்த கனமழைக்கு 100 பேர் பலியாகி உள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். #NigeriaFlood
    அபுஜா:

    நைஜீரியா நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நைஜீரியாவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    அங்குள்ள கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது.



    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும் விரைவில் மீட்பு பணிகள் தொடங்கப்படும்.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். #NigeriaFlood
    நைஜீரியாவில் பிணவறையில் இருந்து பெண்ணின் பிணத்தை திருடிய கொள்ளையர்கள் அதனை திரும்ப கொடுக்க வேண்டுமானால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. #Nigeria
    மைதுகுரி:

    நைஜீரியா நாட்டின் பிரைட் வான்ஸி நகரில் உள்ள ஒரு பிணவறையில் இருந்து ஒரு பெண்ணின் பிணம் திடீரென மாயமாகி விட்டது. அதை யாரோ கடத்தி விட்டனர். இதனால் பிணவறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணவறையின் மேலாளருக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது.

    அதில் பேசியவர்கள் பிணம் திரும்ப கிடைக்க வேண்டுமானால் தங்களுக்கு ரூ.10 லட்சம் (5மில்லியன் நைரா) பிணைத் தொகையாக வழங்க வேண்டும் என பேரம் பேசினார்.

    இதற்கிடையே பிணத்தை கடத்தியதாக சுக்வுடி சுக்வு (38). இபே பெதால் லஷாரஸ் (28). ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரும் முன்னாள் குற்றவாளிகள் ஆவர்.

    அவர்களில் சுக்வு 6 ஆண்டுகளும், லஷாரஸ் 14 ஆண்டுகளும் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில்தான் வெளியே வந்தனர். இவர்களில் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்தவர் என பிணவறை மேலாளர் தெரிவித்தார். #Nigeria
    நைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். #Nigeria #BokoHaramAttack
    கனோ:

    நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.

    இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள போர்னோ மாகாணத்தில் நேற்று இரவு போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் இரண்டு கிராமங்களில் புகுந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். #Nigeria #BokoHaramAttack
    நைஜீரியாவில் போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. #Nigeria #BokoHaramAttack
    அபுஜா :

    கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதனால், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போக்கோஹரம் பயங்கரவாதிகளுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.

    இதற்கிடையே, அந்நாட்டின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள ஜாரி எனும் கிராமத்தில் அமைந்துள்ள நைஜீரிய ராணுவ தளத்தின் மீது போக்கோஹரம் பயங்கரவாதிகள் கடந்த வியாழன் அன்று கடும் தாக்குதல் நடத்தினர். 

    பல்வேறு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், நைஜீரியாவில் போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் தெரிவித்தனர். #Nigeria #BokoHaramAttack
    நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் படைவீரர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    அபுஜா:

    நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் சிலர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

    இந்த கொடூர தாக்குதலில் படைவீரர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
    நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nigeria #NigeriaOilTankerfire

    லாகோஸ்:

    நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று மாலை ஒரு எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த லாரியில் இருந்து எண்ணெய் வெளியே கசிய தொடங்கியது. 

    சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. அந்த தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக பரவியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் 5 பேருந்துகள், 2 டிரக்கள் மற்றும் 45 கார்கள் தீக்கிரையாகியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. #Nigeria #NigeriaOilTankerfire
    ×