search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal migrants"

    லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 174 பேர் தாங்களாக முன்வந்து சொந்த நாடான நைஜீரியாவுக்கு திரும்பி உள்ளனர். #MigrantsDeported #Libya
    திரிபோலி:

    வறுமை, உள்நாட்டு சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர். இதற்காக ஆபத்தான மத்திய தரைக்கடல் பகுதியில் படகுகளில் பயணிக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். அவர்களை லிபிய பாதுகாப்பு படையினர் மீட்டு தங்கள் பகுதிக்கு கொண்டு வந்து முகாம்களில் தங்க வைக்கின்றனர்.

    அதேபோல் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சிக்கும் நபர்களும் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் நிவாரண முகாம்கள் நிரம்பி வழிந்தன.



    இதையடுத்து, லிபியாவில் சிக்கித் தவிக்கும் சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) செய்தது. இதன்மூலம் பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

    அவ்வகையில் நேற்று நைஜிரியாவைச் சேர்ந்த 174 பேர் லிபியாவில் இருந்து தாயகம் திரும்பியதாக ஐஓஎம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 32 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றிய அறக்கட்டளை நிதி உதவி பெற்று தங்கள் நாடுகளுக்கு திரும்பி உள்ளதாகவும் ஐஓஎம் கூறியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகளை அவர்களின் நாடுகளுக்கு ஐஓஎம் திருப்பி அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. #MigrantsDeported #Libya

    அமெரிக்காவினுள் குழந்தைகளுடன் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைவோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. #IllegalMigrants #Children
    வாஷிங்டன்:

    அண்டை நாடான மெக்சிகோ தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக குடும்பம், குடும்பமாக நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

    இதைத் தடுக்கிற விதத்தில் அவர்கள் மீது கடுமையான கொள்கையை ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் பின்பற்றியது. இப்படி நுழைவோரை கைது செய்து, அவர்களையும், குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்து காவலில் வைத்தது.

    இது அங்கு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பல்வேறு தரப்பினருடன், மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொள்கையை டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் திரும்பப்பெற்றது. இதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து போட்டார்.

    இப்போது அமெரிக்காவினுள் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல், சட்டவிரோதமாக குழந்தைகளுடன் நுழைகிறவர்கள் மீது குற்ற வழக்கு போடுவதையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி விட்டது.

    இதுபற்றி அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையர் கெவின் மெக் அலீனன், டெக்சாஸ்சில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக குடியேறுகிறவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வது கடந்த வாரம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இப்படி குடும்பத்துடன் அமெரிக்காவினுள் நுழைகிறபோது, பெற்றோர்களையும், குழந்தைகளையும் தனியாக பிரிக்கக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறது” என்று கூறினார்.

    அதே நேரத்தில், அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைகிறவர்களை சகித்துக்கொள்ளக்கூடாது என்ற கொள்கை இன்னும் அமலில் இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கக்கூடாது என்று கூறுகிற நிலையில், இரு தரப்பினரையும் சேர்த்து ஒரே இடத்தில் காவல் மையங்களில் வைக்க அமெரிக்க சட்டம் இடம் தரவில்லை என்றும் அவர் கூறினார்.

    பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை தனியாகப் பிரித்தெடுக்காமல், எப்படி பெற்றோர்கள் மீது மட்டும் வழக்கு போடுவது என்பது பற்றி நீதித்துறையும், சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையமும் வழிவகை காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவினுள் குடும்பமாக சட்டவிரோதமாக நுழைகிறபோது, அவர்களை பிரிக்காமல் கோர்ட்டு சம்மன் வழங்கி, அவர்கள் வழியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இருப்பினும் குழந்தைகள் இன்றி தனியாக அமெரிக்காவில் உரிய ஆவணம் இன்றி நுழைந்தால் அவர்கள் கைது செய்யப்படுவது தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்கா வருவோரை வைத்து பராமரிக்க இடம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெளிவுபடுத்தி உள்ளார்.  #IllegalMigrants #Children #Tamilnews 
    ×