search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysterious persons"

    • கடலூர் அருகே டிராக்டர் பெட்டி திருடப்பட்டது.
    • குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் கயல் வேந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி கீழூரை சேர்ந்தவர் கயல் வேந்தன் (வயது 38). இவர் குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தம் அருகே தனக்கு சொந்தமான டிராக்டர் பெட்டியை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று தனது டிராக்டர் பெட்டியை கொண்டு வருவதற்கு செல்லும்போது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் பெட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு 2 லட்சம் ஆகும். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் கயல் வேந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோட்டமிட்டு 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர்.
    • திடீரென மர்ம நபர்கள் பெண் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சி கோட்டை சாலை பாத்திமா நகரை சேர்ந்தவர் பெலிக்ஸ். இவரது மனைவி சாலெட்மேரி (வயது 63 ). இவர் பகலில் கடைக்கு சென்று விட்டு ஷேர் ஆட்டோவில் பாத்திமா நகருக்கு வந்தார்.

    பின்னர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்டு 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தும், மற்றொருவர் தொப்பி அணிந்தும் காணப்பட்டனர்.

    வீட்டுக்கு நடந்து வந்த பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்புவீட்டின் அருகே உள்ள வளைவில் சாலெட்மேரி திரும்பி வந்தபோது திடீரென மர்ம நபர்கள் சாலெட்மேரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த சாலெட்மேரி திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் இரண்டு மர்ம நபர்கள் சாலெட் மேரியின் கழுத்தில் இருந்த செயினை அறுத்துக் கொண்டு ஓடிய காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.

    அந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகளின் அடிப்படை குறைகள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அரசு துறை அதிகாரி களால் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் விவசாயிகளின் அடிப்படை குறைகள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அரசு துறை அதிகாரி களால் வழங்கப்பட்டது.மேலும் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு தொடர்பாக கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    வரும் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளாண் துறை தொடர்பான அனைத்து கட்டிட ங்களும் திறக்கப்படும். விவ சாயிகளுக்கு தேவையான நவீன பயிற்சிகள் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் . விவசாயி களுக்கு தேவையான இடு பொருட்கள் மற்றும் யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிகள் தொடர்பான கோரிக்கை களை முன்வைத்து பேசினர்.அப்போது பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரும்படையார் என்பவர், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதியான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தவறான செயல்கள் அங்கு நடைபெற்று வருவதாகம் கூறினார்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய வைரக்கல் மற்றும் சந்தன மரங்களை கடத்தும் முயற்சி நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெப் காமிரா பதிவுகளை தேசியப் புலிகள் காப்பகத்திற்கு கொடுக்கும்போது அதில் பதிவு செய்யப்பட்ட பல காட்சிகளை வனத்துறை அதிகாரிகள் அழித்துவிட்டு கொடுப்பதால் அங்கு தவறான செயல்கள் நடை பெறுவது உறுதியாகிறது என குற்றம் சாட்டினார்.

    மாவட்ட கலெக்டர் விஷ்ணு மர்மநபர்களின் நட மாட்டத்தை கண்காணித்து வனத்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார் மேலும் வனப்பகுதிக்குள் பதிவு செய்யக்கூடிய வெப் காமிரா காட்சிகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் ஒளிபரப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    • இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.
    • வாகனத்தின் இருக்கையை திறந்து உள்ளே வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருடு போனது தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வடக்கு மட வளாகத்தை சேர்ந்தவர் ராகேஷ் குமார் (28).

    இவர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகை அடகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று சீர்காழி பிடாரி வடக்கு வீதி உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகன இருக்கையின் கீழ் வைத்து கொண்டு புறப்பட்டு வந்துள்ளார்.

    அப்பொழுது சிறிது தூரத்தில் உள்ள மருந்தகம் அருகே உள்ள கடையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

    வெளியில் வந்து பார்த்தபோது வாகனத்தின் இருக்கை திறந்து உள்ளே வைத்திருந்த ரூபாய் இரண்டு லட்சம் திருட்டு போனது தெரிய வந்தது.

    இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் ராகேஷ் குமார் புகார் அளித்தார்.

    போலீசார் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்த வந்த பணத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பிரதான சாலையில் துணிகரமாக திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சண்முகப்பிரியா கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு சென்றனர்.
    • படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சீர்காழி:

    மணல்மேடு ஆத்தூர் கேசிங்கன் ஜி.என். நகரை சேர்ந்தவர் ராஜராஜன். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 36).இவர் வக்கிர மாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் சண்முகப்பிரியா கொள்ளிடத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    வைத்தீஸ்வரன் கோவில் அருகே அட்டகுளம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சண்முகப்பிரியா கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு சென்றனர்.

    அப்போது ஸ்கூட்டரில் இருந்து தடுமாறி சண்முகப்பிரியா கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, புலி, யானை, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை தாவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    • செங்கல்தேரி வனப்பகுதி புலிகள் காப்பகத்தின் உள்மைய பகுதி என்றும், பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட வனப்பகுதி என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, புலி, யானை, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை தாவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இங்குள்ள செங்கல்தேரி வனப்பகுதி புலிகள் காப்பகத்தின் உள்மைய பகுதி என்றும், பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட வனப்பகுதி என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய புலிகள் ஆணையத்தில் நேரடி கண்காணிப்பில் செங்கல்தேரி வனப்பகுதி இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் செங்கல்தேரிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கும் அனுமதி கிடையாது. வனத்துறை ஊழியர்கள் மட்டுமே ரோந்து செல்வது வழக்கம்.

    அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க செங்கல்தேரியில் தானியங்கி காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட செங்கல்தேரி வனப்பகுதியில் அந்நியர்கள் நடமாட்டம் இருப்பதாக மலையடிவார பகுதி கிராமமக்கள் பெருமளவில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    செங்கல்தேரி வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடும். மேலும் அப்பகுதியில் வைரக்கற்களும் உள்ளன.

    எனவே வைரக்கற்களை கொள்ளையடிக்கவோ அல்லது யானை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வன வளங்களை திருடும் முயற்சியில் அக்கும்பல் நடமாடுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை வனத்துறையினர் மறுத்து வந்தனர்.

    இதனிடையே தடை செய்யப்பட்ட செங்கல்தேரி வனப்பகுதியில் அந்நியர் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியுள்ளது. படத்தில் உள்ளவர்களை பார்க்கும் போது அவர்கள் வனத்துறை ஊழியர்களோ, ஆராய்ச்சியாளர்களோ இல்லை என்பது தெரிகிறது.

    அந்த கும்பல் இரவு நேரங்களிலும் வனப்பகுதியில் தங்கியுள்ள படங்களையும் வெளியிட்டுள்ளது. இரவில் அங்கு தங்க வேண்டியதன் மர்மம் என்ன? என்பது தெரியவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கல்தேரி செல்லும் பாதையில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது இன்று வரை அடையாளம் காணப்படவில்லை.

    இதுகுறித்து களக்காடு கோவில்பத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரத்னகுமார் கூறுகையில், இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். களக்காடு மலையில் உள்ள வன வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் போராடி வரும் நிலையில் வனத்துறையினர் அதனை அழிக்கும் முயற்சியில் இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடுவது உள்ளூர் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

    ×