என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடகு கடை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் திருட்டு
- இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.
- வாகனத்தின் இருக்கையை திறந்து உள்ளே வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருடு போனது தெரியவந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வடக்கு மட வளாகத்தை சேர்ந்தவர் ராகேஷ் குமார் (28).
இவர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகை அடகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று சீர்காழி பிடாரி வடக்கு வீதி உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகன இருக்கையின் கீழ் வைத்து கொண்டு புறப்பட்டு வந்துள்ளார்.
அப்பொழுது சிறிது தூரத்தில் உள்ள மருந்தகம் அருகே உள்ள கடையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.
வெளியில் வந்து பார்த்தபோது வாகனத்தின் இருக்கை திறந்து உள்ளே வைத்திருந்த ரூபாய் இரண்டு லட்சம் திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் ராகேஷ் குமார் புகார் அளித்தார்.
போலீசார் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்த வந்த பணத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பிரதான சாலையில் துணிகரமாக திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






