search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட இடங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
    X

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட இடங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

    • நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகளின் அடிப்படை குறைகள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அரசு துறை அதிகாரி களால் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் விவசாயிகளின் அடிப்படை குறைகள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அரசு துறை அதிகாரி களால் வழங்கப்பட்டது.மேலும் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு தொடர்பாக கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    வரும் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளாண் துறை தொடர்பான அனைத்து கட்டிட ங்களும் திறக்கப்படும். விவ சாயிகளுக்கு தேவையான நவீன பயிற்சிகள் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் . விவசாயி களுக்கு தேவையான இடு பொருட்கள் மற்றும் யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிகள் தொடர்பான கோரிக்கை களை முன்வைத்து பேசினர்.அப்போது பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரும்படையார் என்பவர், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதியான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தவறான செயல்கள் அங்கு நடைபெற்று வருவதாகம் கூறினார்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய வைரக்கல் மற்றும் சந்தன மரங்களை கடத்தும் முயற்சி நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெப் காமிரா பதிவுகளை தேசியப் புலிகள் காப்பகத்திற்கு கொடுக்கும்போது அதில் பதிவு செய்யப்பட்ட பல காட்சிகளை வனத்துறை அதிகாரிகள் அழித்துவிட்டு கொடுப்பதால் அங்கு தவறான செயல்கள் நடை பெறுவது உறுதியாகிறது என குற்றம் சாட்டினார்.

    மாவட்ட கலெக்டர் விஷ்ணு மர்மநபர்களின் நட மாட்டத்தை கண்காணித்து வனத்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார் மேலும் வனப்பகுதிக்குள் பதிவு செய்யக்கூடிய வெப் காமிரா காட்சிகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் ஒளிபரப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    Next Story
    ×