search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moeen Ali"

    இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி அடில் ரஷித், மொயீன் அலி சாதனைப் படைத்துள்ளனர் #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்டெக் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ஒரு கட்டத்தில் 6.3 ஓவரில் 60 ரன்கள் என்றிருந்த நிலையில், மொயீன் அலியின் சுழல் பந்தில் சிக்சி 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. மொயீன் அலி 46 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.



    இந்த தொடரில் இருவரும் தலா 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன் ஸ்வான் 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 11 விக்கெட்டுக்களும், 2013-ல் ட்ரெட்வெல் இந்தியாவிற்கு எதிராக 11 விக்கெடடுக்கள் வீழ்த்தியதுமே சாதனையாக இருந்தது.
    மொயீன் அலியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.



    இந்த ஜோடி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை மொயீன் அலி பிரித்தார். 7-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஆரோன் பிஞ்ச் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 5-வது பந்தில் டக்அவுட் ஆனார்.



    அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் 8 ரன்னி்ல் மொயீன் அலி பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேற, ஆஸ்திரேலியா தடம்புரள ஆரம்பித்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தன் பங்கிற்கு 56 ரன்கள் சேர்த்தார். கேரி 44 ரன்களும், ஆர்கி ஷார்ட் அவுட்டாகாமல் 47 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலியா 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது.
    லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 214 ரன்னில் சுருண்டது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஆரோன் பிஞ்ச் 19 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் 24 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 22 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 64 பந்தில் 62 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர் 62 பந்தில் 40 ரன்களும் அடித்தனர். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடியதால் ஆஸ்திரேலியா 47 ஓவரில் 214 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் சேய்து வருகிறது.
    ஐபிஎல் தொடரில் விளையாடுவது சிறந்த ஒருநாள் வீரராக உருவாக உதவும் என மொயீன் அலி தெரிவித்துள்ளார். #IPL2018 #RCBvSRH
    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டி வில்லியர்ஸ் (69), மொயீன் அலி (65) கொலின் டி கிராண்ட்ஹோம் (40), சர்பராஸ் கான் (22) ஆகியோரின் ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

    பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி வந்தது. ஆனால், டிம் சவுத்தி, முகமது சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேன் வில்லியம்சன் 42 பந்தில் 81 ரன்களும், மணிஷ் பாண்டே 38 பந்தில் 62 ரன்களும் சேர்த்தனர்.



    மொயீன் அலி 65 ரன்களை 34 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் குவித்தார். ஆஷஸ் தொடரில் மோசமாக விளையாடியதன் காரணமாக மொயீன் அலி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முக்கியமான ஆட்டத்தில் 65 ரன்கள் குவித்த மொயீன் அலி, ஐபிஎல் தொடரில் விளையாடுவது ஒருநாள் நாள் போட்டியில் சிறந்த வீரராக உருவாக உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘நான் என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆர்சிபிக்கும், இங்கிலாந்து அணிக்கும் வருங்காலத்தில் விளையாடுவேன். இந்த ஐபிஎல் போட்டியில் விளயைாடுவது உண்மையிலேயே சிறந்த ஒருநாள் போட்டி வீரராக உருவாக உதவும். மேலும் என்னுடைய ஆட்ட முன்னேற்றத்திற்கு உதவும்’’ என்றார்.
    டி வில்லியர்ஸ், மொயீன் அலி அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #RCBvSRH
    ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பார்தீவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பார்தீவ் பட்டேல் 1 ரன்னிலும், விராட் கோலி 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எதிர்முனையில் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், விராட் கொலி அவுட்டாகும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4.5 ஓவரில் 38 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து டி வில்லியர்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். இதனால் ரன்ரேட் சராசரியாக 10-ஐ தொட்டது. 12-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டி வில்லியர்ஸ் 32 பந்தில் அரைசதம் அடித்தார்.

    மறுமுனையில் விளையாடிய மொயீன் அலி 13-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி 25 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியால் 13-வது ஓவரில் 18 ரன்களும், 14-வது ஓவரில் 14 ரன்களும் குவித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ஓவரில் முடிவில் 144 ரன்கள் குவித்திருந்தது.

    இன்னும் 6 ஓவர் இருந்ததால் ஸ்கோர் 225 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 15-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவர் ராயல் சேலஞ்சர்ஸ்க்கு பேரிடியாக அமைந்தது. 2-வது பந்தில் டி வில்லியர்ஸும், 4-வது பந்தில் மொயீன் அலியும் ஆட்டமிழந்தனர்.



    டி வில்லியர்ஸ் 36 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்களும், மொயீன் அலி 34 பந்தில் 2 பண்டரி, 6 சிக்சருடன் 65 ரன்களும் குவித்தனர். இருவரும் ஆட்டமிழக்கும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14.4 ஓவரில் 149 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது.

    ஆனால் கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 17 பந்தில் ஒரு பவண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்களும், சர்பராஸ் கான் 8 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்களும் குவிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபத்திற்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
    ×