search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் ஆட்டம் ஒருநாள் போட்டியில் சிறந்த வீரராக உருவாக உதவும்- மொயீன் அலி
    X

    ஐபிஎல் ஆட்டம் ஒருநாள் போட்டியில் சிறந்த வீரராக உருவாக உதவும்- மொயீன் அலி

    ஐபிஎல் தொடரில் விளையாடுவது சிறந்த ஒருநாள் வீரராக உருவாக உதவும் என மொயீன் அலி தெரிவித்துள்ளார். #IPL2018 #RCBvSRH
    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டி வில்லியர்ஸ் (69), மொயீன் அலி (65) கொலின் டி கிராண்ட்ஹோம் (40), சர்பராஸ் கான் (22) ஆகியோரின் ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

    பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி வந்தது. ஆனால், டிம் சவுத்தி, முகமது சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேன் வில்லியம்சன் 42 பந்தில் 81 ரன்களும், மணிஷ் பாண்டே 38 பந்தில் 62 ரன்களும் சேர்த்தனர்.



    மொயீன் அலி 65 ரன்களை 34 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் குவித்தார். ஆஷஸ் தொடரில் மோசமாக விளையாடியதன் காரணமாக மொயீன் அலி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முக்கியமான ஆட்டத்தில் 65 ரன்கள் குவித்த மொயீன் அலி, ஐபிஎல் தொடரில் விளையாடுவது ஒருநாள் நாள் போட்டியில் சிறந்த வீரராக உருவாக உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘நான் என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆர்சிபிக்கும், இங்கிலாந்து அணிக்கும் வருங்காலத்தில் விளையாடுவேன். இந்த ஐபிஎல் போட்டியில் விளயைாடுவது உண்மையிலேயே சிறந்த ஒருநாள் போட்டி வீரராக உருவாக உதவும். மேலும் என்னுடைய ஆட்ட முன்னேற்றத்திற்கு உதவும்’’ என்றார்.
    Next Story
    ×