search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Local Holiday"

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 23-ந் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-வது நாளான இன்று தேரோட்டம் நடந்தது. 5 தேர்கள் பவனி வந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தேரோட்டத்திற்கு வருவார்கள் என்பதால் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

    அதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அரசின் ஆளுமைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    அதேபோல தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 23-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்து உள்ளார். #KarthigaiDeepam #ArunachaleswararTemple

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு நவம்பர் 13-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு அடுத்த மாதம்(நவம்பர்) 13-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ ‍-மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது.

    இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல. எனவே மாவட்டத்தில் உள்ள கருவூலகங்களும், சார்நிலை கருவூலகங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக டிசம்பர் 8-ந்தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது.

    தேரோட்ட விழாவில் விருதுநகர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

    இந்த விடுமுறையை ஈடுபட்டும் வகையில் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. 13-ந்தேதி அன்று மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்பு நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டி உள்ளது. இதையொட்டி கூடலூரில் நாளை வாசனை திரவிய கண்காட்சி தொடங்குகிறது. 12-ந் தேதி ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடக்கிறது.

    வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    இந்நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்பு நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.18-ந் தேதிக்கான வேலை நாளை ஈடு செய்ய வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilnews
    ×