search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishek ceremony"

    • கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முளைப்பாலிகையிடும் நிகழ்ச்சி நடந்தது.
    • சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    பழமைவாய்ந்த திருப்பூர் நல்லூர் விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் பிப்ரவரி 2ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ராஜகோபுரம், கருவறை விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் கருங்கல் பதித்து பணிகள் நடந்துள்ளன. கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முளைப்பாலிகையிடும் நிகழ்ச்சி நடந்தது.

    கும்பாபிேஷக விழா 29ந் தேதி வாஸ்து சாந்தி, கணபதி வழிபாடுடன் தொடங்குகிறது. 30ந் தேதி முதல் வேள்வி பூஜைகள் நடக்கின்றன. நான்காம் கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, பிப்ரவரி 1ந் தேதி காலை 5:30 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

    பிள்ளையார்பட்டி தலைமை அர்ச்சகர் பிள்ளை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஸ்தானிகம் ராஜாபட்டர் தலைமையிலான குழு, கும்பாபிேஷக பூஜைகளை நடத்த உள்ளது.

    இதேநாளில், நல்லூர் ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீசெல்லாண்டியம்மன், ஸ்ரீபேச்சியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவும் நடைபெற உள்ளது.      

    • குலசேகரன் கோட்டை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா நடந்தது.
    • இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன் கோட்டையில் சிறுமலை ஓடைக்கரையில் 800 ஆண்டு பழமையும், பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 72 அடி உயர ராஜகோபுரம், விநாயகர், முருகன், பிரம்மதேவர், சூரியபகவான், சந்திர பகவான் ஆகியவற்றிற்கும், மீனாட்சி- சுந்தரேசுவரர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பா பிஷேகத்திற்கான கால்கோள் விழா நடந்தது. இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.

    இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

    கடந்த 10-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு வாராகி அம்மனுக்கு 3-ம் கால பூஜை, யாகசாலை பூைஜகள், ஹோமம், தத்வார்வசனை பூைஜ, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன.

    12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அன்னை வாராஹிக்கு 4-ம் கால யாக பூஜையும், காலை 6.30 மணிக்கு யாகசாலை பூைஜகளும், 7 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, கலசம் புறப்படுதல் நிகழ்ச்சிகளு நடந்தன. பின்பு 7.30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பூஜை, தீபாராதனை, தசதானம், தரிசனம், மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரேம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.
    • இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

    சேலம்:

    சேலம் தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.

    இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

    இன்று மாலை 5 மணிக்கு வாராகி அம்மனுக்கு 3-ம் கால பூஜை, யாகசாலை பூைஜகள், ஹோமம், தத்வார்வசனை பூைஜ, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நலம் காக்கும் நாயகி அன்னை வாராஹிக்கு 4-ம் கால யாகம் ஆரம்பம், காலை 6.30 மணிக்கு யாகசாலை பூைஜகள், 7 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, கலசம் புறப்படுதல் நிகழ்ச்சிகளும், 7.30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் பூஜை, தீபாராதனை, தசதானம், தரிசனம், மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரேம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

    • காட்டூர், பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது.
    • நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள தாளங்களுடன் நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் காட்டூர், பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள தாளங்களுடன் நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. லோகானந் சாஸ்திரிகள் குழுவினர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக விழாவை நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கிராம சாந்தி பூஜையுடன் விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து கணபதி பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) யாக சாலை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நாளை (வியாழக்கிழமை) 2-ம் கால யாக பூஜை, சுவாமிகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சான்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கலச ங்கள் யாக சாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.

    அன்று காலை 10 மணிக்கு மகா அபிஷே கமும், கோதரிசனமும், தச தரிசனமும், மகாதீப ஆராதனையும் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடை பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
    • விநாயகர், மகா மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

    அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் விநாயகர், மகா மாரியம்மன் கோவிலின் கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    விநாயகர், மகா மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர், மகா மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    இரவில் அம்மனுக்கு பொங்கலிட்டு, மாவிளக்கு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து உற்சவ அம்மன் வீதி உலா வந்தார். இதற்கான ஏற்பாடுகளை குரும்பலூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக சிவாலயம் எழுப்புவது என பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
    • திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மகா கும்பாபிஷேக விழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக சிவாலயம் எழுப்புவது என பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் சுவாமி கோவில், ஸ்ரீ வேத நாராயண பெருமாள் சுவாமி கோவில், ஸ்ரீதேவி, பூதேவி, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர், ஆஞ்சநேயர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கட்டப்பட்டது.

    திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மகா கும்பாபிஷேக விழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் யாகசாலை பூஜை மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது.

    நேற்று காலை நாடி சந்தனம், பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர், வேத நாராயண பெருமாள் உள்பட 11 விமானங்களுக்கு ஏக காலத்தில் கும்பாபிஷேக புனித நீர் ஊற்றும் வைபவம் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் ஆகியவன நடைபெற்றது. விழாவில் பாலையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாக் குழுவினர்கள் சார்பில் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

    • கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர் ஊராட்சியில் திரவுபதி அம்மன், விநாயகர், ஆதி கோட்டை காளியம்மன் மற்றும் கோட்டை காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் பணிகள் நிறைவுற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் நிறைந்த கலசங்களின் கடம் புறப்பாடு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர் ஊராட்சியில் திரவுபதி அம்மன், விநாயகர், ஆதி கோட்டை காளியம்மன் மற்றும் கோட்டை காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் பணிகள் நிறைவுற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு கோவில் எதிர்புறம் யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் நிறைந்த கலசங்களின் கடம் புறப்பாடு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டது.

    விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 19-ந்தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் துவங்கியது.
    • 29-ந்ேததி முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சியும், நேற்று யானை, ஒட்டகங்கள், பசு மற்றும் கன்று, குதிரைகளுடன் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் செண்ைட மேளங்கள் முழங்க நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் முதலியார் தெரு பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 19-ந்தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் துவங்கியது. 29-ந்ேததி முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சியும், நேற்று யானை, ஒட்டகங்கள், பசு மற்றும் கன்று, குதிரைகளுடன் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் செண்ைட மேளங்கள் முழங்க நடைபெற்றது.

    இன்று காலை முதல் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், சாலுரு புருஹன் மாதா சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டான்மைக்காரர் முருகேசன் காரியக்காரர்கள் பாலசுப்ரமணியம், சண்முகசுந்தரம், தர்மலிங்கம், ஆறுமுகம், தங்கவேல், கேசவராஜ் மற்றும் விழா கமிட்டியார்கள் செய்துள்ளனர்.

    • சோமரசம்பேட்டை கிராமத்தில் இருக்கும் கிராமத்து தெய்வங்களான இளமாயி அம்மன், சூரிய விநாயகர், தென்னவட்டை கருப்பு, மதுரை வீரன் பட்டவன், சம்புவான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
    • விழாவிற்கான ஏற்பாடுகளை சோமரசம்பேட்டை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பட்டயதார்கள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை கிராமத்தில் இருக்கும் கிராமத்து தெய்வங்களான இளமாயி அம்மன், சூரிய விநாயகர், தென்னவட்டை கருப்பு, மதுரை வீரன் பட்டவன், சம்புவான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது

    திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டையில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இளமாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு சோமரசம்பேட்டை, கே.கே.நகர், ரெங்க லட்சுமி நகர், சபரிநகர், வடகாபுத்தூர், வரகன்திடல், வீரங்கிநல்லூர், சிறுவயலூர் மாரியம்மன் கோவில் கோப்பு ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான கிராமத்து தெய்வமாக திகழ்கிறது.

    இந்த இளமாயிஅம்மனுக்கு மற்றொரு பெயர் ஏழு ஊர் சுற்றி இளமாயி என்பதாகும். இக்கோவில் கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தற்போது இளமாயி அம்மன், சூரிய விநாயகர் தென்னவட்டை கருப்பு, மதுரை வீரன் பட்டவன், சம்புவான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடத்த அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    இதற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றன. இதையடுத்து வருகிற 7-ந்தேதி மகா கும்பாபிஷேகம்நடைபெறுகிறது. முன்னதாக வருகிற 5-ந்தேதி மாலை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் யாகசாலை பிரவேசத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.

    மறுநாள் 6-ந்தேதி காலை 8 மணி அளவில் மங்கல இசையுடன் ஹோமங்கள், சதுர்வேத பாராயணம், திருமுறைபாராயணம் மற்றும் சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலுடன் இரண்டாம் கால பூஜையும் மாலை 5.30 மணியளவில் மூன்றாம் கால பூஜைகளும், 7-ந்தேதி காலை 6.30 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, ரக்‌ஷாபந்தனம், கோ பூஜையுடன் நான்காம் கால பூஜையும் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    காலை 9 மணியிலிருந்து 10.29 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம் மஹாபிஷேகம், தீபாரதனை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சோமரசம்பேட்டை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பட்டயதார்கள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • துறையூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட விநாயகர் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை விநாயகர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட விநாயகர் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா சென்ற வருடம் விமர்சியாக அப்பகுதி மக்களால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்றது.

    இந்நிலையில் இதனைத் தொடர்ந்து குடமுழுக்கு விழா நடைபெற்று இரண்டாம் ஆண்டு தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சியானது இன்று விமர்சியாக நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை விநாயகர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர். இதேபோன்று இன்று நடைபெற்ற குடமுழுக்கு இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சியில் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த பக்த கோடிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனின் ஆசி பெற்று சென்றனர்.

    ×