search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meenakshi Temple"

    • மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை உண்டியல் மூலம் ரூ.1.47 கோடி கிடைத்தது.
    • உண்டியல் திறப்பின் போது ரூ.1 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 கிடைத்தது.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் செயல் அலுவலர் அருணாசலம் முன்னிலையில் இந்த கோவில் மற்றும் 11 உப கோவில்களின் காணிக்கை உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது.

    இதில் திருப்பரங்குன்றம், முருகன் கோவில் துணை ஆணையர், மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் பிரதிநிதி, கண்கா ணிப்பாளர், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு மற்றும் கள்ளிக்குடி ஆய்வர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    உண்டியல் திறப்பின் போது ரூ.1 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 கிடைத்தது. மேலும் பலமாற்று பொன் இனங்கள் 465 கிராமும், வெள்ளி இனங்கள் 890 கிராமும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 497 எண்ணமும் கிடைத்தன.

    • குலசேகரன் கோட்டை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா நடந்தது.
    • இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன் கோட்டையில் சிறுமலை ஓடைக்கரையில் 800 ஆண்டு பழமையும், பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 72 அடி உயர ராஜகோபுரம், விநாயகர், முருகன், பிரம்மதேவர், சூரியபகவான், சந்திர பகவான் ஆகியவற்றிற்கும், மீனாட்சி- சுந்தரேசுவரர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பா பிஷேகத்திற்கான கால்கோள் விழா நடந்தது. இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் மீனாட்சிஅம்மன் கோவில் முன்பு தேங்கிய சாக்கடை நீர் அகற்றப்பட்டது.
    • அடிக்கடி கோவில் வாசல் பகுதியில் சாக்கடை கொப்பளித்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுள்ளது.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக அங்கு எந்த நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை கிழக்கு கோபுர வாசல் பகுதியில் திடீரென பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. பக்தர்கள் அந்த வழியாக செல்லவும், கோவிலுக்குள் செல்லவும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அதற்கான வாகனங்களை எடுத்து வந்து கழிவு நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேரம் நடந்த பணிகளை தொடர்ந்து சாக்கடை அகற்றப்பட்டது.

    ஏற்கனவே சில நாட்க ளுக்கு முன்பும் இதே பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கியது. எனவே கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை தரமான முறையில் செய்ய வேண்டும் என்றும், கழிவு நீர் கோவில் சுற்றுப்புறங்களில் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அடிக்கடி கோவில் வாசல் பகுதியில் சாக்கடை கொப்பளித்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுள்ளது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலுக்கு தனியார் நிறுவனம் சார்பில் www.maduraimeenakshi.org இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. அது இப்போது மூடப்பட்டு விட்டது. தமிழக அரசு சார்பில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இருந்த போதிலும் பழைய இணையதளம் மூலம் புதிய இணையத்தை பார்வையிடலாம். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு நன்கொ டை மற்றும் உபய சேவை கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். அரசு இணையதள முகவரி தவிர கோவிலுக்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×