search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishek ceremony"

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்றார்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள ஞானாம்பிகை காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

    இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது நீதியரசர்கள் கிருபாகரன், பாரதிதாசன், ஆலய நிர்வாகி சுதாகர், சத்தியநாராயணன், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர். பக்தர்கள் ஏராளமானோர் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர்.

    • விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் ஆதி விநாயகர், சோளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் மேளதாளங்களுடன் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.இதைத்தொடர்ந்து விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை ,காப்பு கட்டுதல், முதற்கால யாக பூஜை துவங்கியது. திருக்குடங்கள் வேள்விசாலையில் எழுந்தருளல்,108 மூலிகை ஆகுதி, திருமுறை விண்ணப்பம், விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால பூஜையுடன் துவங்கி, விமான கலசங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம், மற்றும் ஆதி விநாயகர், சோளியம்மன், மூலமூர்த்திகளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பதின்மங்கலக் காட்சி, பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து ஆதி விநாயகர், சோளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • முக்கண் சாய்பாபா மற்றும் வராகி அம்மனுக்கு புதிதாக ஆலயம் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
    • பணிகள் முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு பஞ்சமி திதியில் மகா கணபதி யாக வேள்வி பூஜை நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் அமைந்துள்ள முக்கண் சாய்பாபா மற்றும் வராகி அம்மனுக்கு புதிதாக ஆலயம் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    பணிகள் முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு பஞ்சமி திதியில் மகா கணபதி யாக வேள்வி பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். நேற்று காலை திருமுறை பாராயணம், 2-ம் கால யாக வேள்வி பூஜை நடந்தது.

    காலை 7 மணிக்கு மேல் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 8 மணிக்கு விநாயகர், முக்கண் சாய்பாபா, வராகி அம்மன் ஆலயத்தில் புனித நீரூற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.

    இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர், முக்கண் சாய்பாபா, வராகி அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • கோப்பணம்பாளையத்தில் உள்ள பால கணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தர் என்கிற சதானந்த சித்தர் ஜீவசமாதி சித்தர் பீடத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • இதை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி அதிகாலை மங்கள கணபதி யாக வேள்வி, மகாதீப ஆராதனை நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம்- கோப்பணம்பாளையத்தில் உள்ள பால கணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தர் என்கிற சதானந்த சித்தர் ஜீவசமாதி சித்தர் பீடத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி அதிகாலை மங்கள கணபதி யாக வேள்வி, மகாதீப ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    மாலை 5 மணிக்கு மேல் முளைப்பாளிகை ஊர்வலமாக எடுத்து வருதல் நிகழ்ச்சியும், விநாயகர் வழிபாடும், முதற்கால யாக வேள்வி பூஜையும், நேற்று 4-ந் தேதி காலை 8.30 மணிக்கு மேல் திருமுறை பாராயணம் மற்றும் 2-ம் கால யாக வேள்வி பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் அஷ்டலட்சுமி வழிபாடும், 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கலசம் வைத்தல், யந்தர ஸ்தாபனம், ரத்தனந்நியாசம், அஷ்ட பந்தனம் நடைபெற்றது. இன்று அதிகாலை திருமுறை பாராயணம், நாடி சந்தானம் 4-ம் கால யாக வேள்வி பூஜையும், அதை தொடர்ந்து மகா தீபாராதனையும், யாத்திரா தானம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்துக் குடங்களுடன் சிவாச்சாரியார்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பாலகணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தர் என்கிற சதானந்த சித்தர் ஜீவசமாதி ஆலய கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்றது. மகா அபிஷேகத்தை முன்னிட்டு பால கணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால கணபதி, பாலமுருகன், சகாசிவம், சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை சக்கரப்பட்டி சித்தர் அறக்கட்டளை மற்றும் சுற்றுவட்டார அனைத்து சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஒட்டங்காட்டு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • முனியப்பன், முன்னடியான், சப்த கன்னிமார் தேவிகள், பைரவர் மற்றும் குதிரை காவலர் சுவாமிகளுக்கு பாலா சுவாமிகள் தலைமையிலான வேதவிற்பனர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கரடிப்பட்டி பெருமாபாளையத்தில், ஒட்டங்காட்டு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முனியப்பன், முன்னடியான், சப்த கன்னிமார் தேவிகள், பைரவர் மற்றும் குதிரை காவலர் சுவாமிகளுக்கு பாலா சுவாமிகள் தலைமையிலான வேதவிற்பனர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி பெரியசாமி நகர் பழனிமுத்து,– சித்ரா மற்றும் குல தெய்வ பங்காளி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • விமான கலசம் நிறுவுதல் மற்றும் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
    • திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    பேரூர்,

    பேரூர் அருகே பச்சாபாளையத்தில், புலிவீரய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு, மங்கள இசை, திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, மார்ச் 1-ந் தேதி நிலமகள் வழிபாடு, முதல் நிலை வழிபாடுகள் நடத்தப்பட்டு, திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து மாலை, முதல் கால வழிபாடும், மார்ச் 2-ந் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு 2ம் கால வழிபாடுகள் துவங்கியது. தொடர்ந்து, மாலை 3ம் கால வழிபாடுகள் நடத்தப்பட்டு, இரவு விமான கலசம் நிறுவுதல் மற்றும் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை 4-ம் கால வழிபாடுகள் நடத்தப்பட்டு, காலை 7.40 மணிக்கு மேல், விநாயகர், குப்புலட்சுமி தாயார், புலிவீரய்யன் ஆகிய கோவில் விமான கலசங்களுக்கும், தெய்வ த்திரு மேனிகளுக்கும், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவை, ஓதுவா மூர்த்திகள் ஜெயபிரகாச நாராயணன், பத்மநாபன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இதைத்தொடர்ந்து, அலங்கார வழிபாடு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்க ப்பட்டது.இதில், திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக தலைவர் நாகராஜ், செயலாளர் தனபால், பொருளாளர் வேலுச்சாமி, திருப்பணி குழுத்தலைவர் போலீஸ் வேலுச்சாமி மற்றும் உறுப்பினர்கள் குப்புசாமி, கோபால், நாகராஜ் உள்பட ஊமத்தகுல ஆண் மக்களும், பெண் மக்களும் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான கட்டிட வேலைகளை கோவில் நிர்வா கிகள் செய்து வந்தனர்.
    • 10ஆயிரம் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி, ரெட்டிபாளையத்தில் மாஞ்சோலை கருப்பராயன் கன்னிமார் கோவில் உள்ளது. பல வருடங்களாக கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான கட்டிட வேலைகளை கோவில் நிர்வாகிகள் செய்து வந்தனர். இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு சுவாமிகளுக்கும் தனியாக யாக குண்டம் வளர்த்து ஹோமங்கள் நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக விக்னேஸ்வர பூஜை, தீர்த்த குடம் எடுத்தல் ,நான்காம் கால பூஜை, மகாதீப ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை கருப்பராயன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் 10ஆயிரம் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை வேலவன் கலைக்குழுவின் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.

    • 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கரடிவாவி கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் கவையகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற ஆகம விதிப்படி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    இதன்படி கும்பாபிஷேக விழா கடந்த 22ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, கணபதி ஹோமம், குபேர லட்சுமி யோகம், உள்ளிட்ட யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து கோமாதா பூஜை, முளைப்பாரி ஊர்வலம், யாகசாலை பிரவேசம், முதல் கால வேள்வி, ஆகியவை நடைபெற்றன. பின்னர் 23ந் தேதி அன்று வேதபாராயணம், மகாபூர்ணாகுதி மற்றும் பிரசாதம் வழங்குதல், விமான கலசம் வைத்தல் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    பின்னர் மூல மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடைபெற்று காலை 10 மணிக்கு மேல் விநாயகர், முருகர், கவைய காளியம்மன், பரிவார மூர்த்திகள்,கோபுர கலசங்கள் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கவைய காளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கரடிவாவி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டிமேடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கடந்த 6-ந் தேதி முளைப்பாரி இடும் நிகழ்சியுடன் விழா தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை ஆலயவிமானம், ஸ்ரீசக்தி விநாயகர், சிவபெருமான், அம்பாளுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவரக்கோட்டையில் வில்லுகாபுலி கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக 2 நாட்கள் கால பூஜைகளாக லட்சுமி, கணபதி, நவக்கிரக ஹோமங்கள், கோ, தன பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணா குதி தீபாராதனையுடன் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக நீர் ஊற்றினர்.

    இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    விழா குழு ஒருங்கிணைப்பு நிர்வாகிகளாக ஊர் அம்பலம் வ.டு. நாச்சியப்பன், நாட்டு கணக்கப்பிள்ளை குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் செயல்பட்டனர்.

    • கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாயன்று தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வருதலுடன் தொடங்கியது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    உடுமலை :

    உடுமலையையடுத்த முக்கூடு ஜல்லிபட்டியில் சக்தி வாய்ந்த உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாயன்று தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வருதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தேவதா அனுக்ஞை, கோ பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து நேற்று காலை 4 ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பிம்ப சுத்தி, மஹா பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் காலை 9.30மணிக்கு மேல் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பழமையான புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர்,ஸ்ரீ தன்னாட்சியப்பன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.
    • யாகசாலை பூஜை வழிபாடு , முளைப்பாரி எடுத்து வழிபாடு நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்ன வீரன்பட்டி ஊராட்சியில் பல ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர்,ஸ்ரீ தன்னாட்சியப்பன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    பேரூர் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்ற விழாவில், புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. பின்னர் கோபுரங்களுக்கு தீபாராதனை காட்டிய பின் பொதுமக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    பின்னர் யாக சாலை குண்டம் அமைந்துள்ள இடத்தை பலர் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக யாகசாலை பூஜை வழிபாடு , முளைப்பாரி எடுத்து வழிபாடு நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் கருப்புசாமி, திவாகரன், தயாநிதி, பாலகிருஷ்ணன், ஜெகநாதன், மாணிக்கவாசகம், சுப்பிரமணி, குழந்தைவேல் உட்பட பலர் செய்திருந்தனர்.  

    ×