என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரடிப்பட்டி பெருமாபாளையம் முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒருபகுதி.
வாழப்பாடி அருகே முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
- ஒட்டங்காட்டு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- முனியப்பன், முன்னடியான், சப்த கன்னிமார் தேவிகள், பைரவர் மற்றும் குதிரை காவலர் சுவாமிகளுக்கு பாலா சுவாமிகள் தலைமையிலான வேதவிற்பனர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கரடிப்பட்டி பெருமாபாளையத்தில், ஒட்டங்காட்டு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முனியப்பன், முன்னடியான், சப்த கன்னிமார் தேவிகள், பைரவர் மற்றும் குதிரை காவலர் சுவாமிகளுக்கு பாலா சுவாமிகள் தலைமையிலான வேதவிற்பனர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி பெரியசாமி நகர் பழனிமுத்து,– சித்ரா மற்றும் குல தெய்வ பங்காளி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
Next Story