என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர் ஊராட்சியில் திரவுபதி அம்மன், விநாயகர், ஆதி கோட்டை காளியம்மன் மற்றும் கோட்டை காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் பணிகள் நிறைவுற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் நிறைந்த கலசங்களின் கடம் புறப்பாடு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர் ஊராட்சியில் திரவுபதி அம்மன், விநாயகர், ஆதி கோட்டை காளியம்மன் மற்றும் கோட்டை காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் பணிகள் நிறைவுற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோவில் எதிர்புறம் யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் நிறைந்த கலசங்களின் கடம் புறப்பாடு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டது.
விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story






