search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koyambedu"

    சென்னை கோயம்பேடு அருகே வீட்டில் போதை பாக்கு தயாரித்து விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட ‘மாவா’ எனப்படும் போதைப்பாக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதையடுத்து அங்குள்ள பூ மார்க்கெட் அருகே சந்தேகப்படும் நிலையில் 2 சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் விசாரித்தார்.

    அப்போது அவரிடம் போதை பாக்கு பவுடர் (மாவா) பாக்கெட்டுகள் இருந்தன. எனவே அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவனது பெயர் ஜித்தேந்திர குமார் படேல் (24) என தெரிய வந்தது. இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    ஜித்தேந்திரகுமார் நெற்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அங்கு யாருக்கும் தெரியாமல் மாவா (போதைப்பாக்கு) தயாரித்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்ததாக கூறினார்.

    உடனே வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு தயாரித்து வைத்திருந்த 5 கிலோ எடையுள்ள மாவாவை பறிமுதல் செய்தனர். மேலும் மாவா தயாரிக்க பயன்படுத்திய 2 கிரைண்டர், 2 மிக்சி, ஒரு 2 சக்கரவாகனம், ரொக்கப்பணம் 600 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அப்போது இவரது கூட்டாளி உதயம் படேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதால் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு மதுரவாயல் வழியாக செல்லும் வெளியூர் பஸ்சில் ரூ.19 கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். #Buses
    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்களில் சென்னை புறநகர் பகுதியில் இருந்து கோயம்பேடுக்கு பயணிகளை ஏற்றி வருகிறார்கள்.

    வெளியூர் பஸ்களில் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பூந்தமல்லியில் இருந்து போரூர், கிண்டி வழியாக இயக்கப்பட்டன.

    தற்போது மதுரவாயல் வழியாக பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு செல்கின்றன. முன்பு போரூர், கிண்டி வழியாக 24 கிலோ மீட்டர் தூரத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன.

    மெட்ரோ ரெயில் பணி மற்றும் போரூர் மேம்பாலம் பணி காரணமாக மாற்று பாதையான மதுரவாயல் வழியாக 16 கிலோ மீட்டர் தூரத்தில் இயக்கப்படுகின்றன. அப்பணிகள் முடிந்தாலும் தற்போதும் பஸ்கள் மதுரவாயல் வழியாகவே இயக்கப்படுகின்றன.

    தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதால் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு மதுரவாயல் வழியாக செல்லும் வெளியூர் பஸ்சில் ரூ.13 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.19 கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது, “வெளியூரில் இருந்து சென்னைக்குள் வரும் பஸ்களில் தூரம் குறைக்கப்பட்டாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். மதுரவாயல் வழியாக செல்லும் பஸ் குறைந்த தூரத்தில் செல்வதால் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. ரூ.19 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. சில பஸ்களில் ரூ.24 கட்டணம் வசூல் செய்கிறார்கள்” என்றார்.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, “கிண்டி வழியாக பஸ்களை இயக்க போக்குவரத்து போலீசார் அனுமதி அளிப்பது இல்லை. போலீசார் அனுமதி கொடுத்தால் சென்னை நகர சாலைக்குள் பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

    தினமும் கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு மாதமும் 50 லட்சத்துக்கு மேல் வசூல் செய்யப்படுகிறது. #Buses
    சென்னை கோயம்பேட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பட்டா கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோயம்பேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் மேட்டுக்குப்பம் தேவி கருமாரி அம்மன் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று மாலை போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர் அங்கு பதுக்கி வைத்திருந்த 1 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இரண்டு பட்டா கத்தியையும் அங்கிருந்து கைப்பற்றிய போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சித்தாலப்பாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்கிற மூர்த்தி, கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    போலீசார் விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்ததும் சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருவர் மீதும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. #Tamilnews
    கோயம்பேட்டில் நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அப்பளம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ஸ்டீபன்ராஜ் (வயது 14). 11-ம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்து இருந்தார். உடன் படித்த நண்பர்கள் பிரிந்து வெவ்வேறு பள்ளியில் சேர்ந்து இருந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக ஸ்டீபன்ராஜ் மனவேதனையில் இருந்தார்.

    இந்த நிலையில் அவர் வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    கோயம்பேடு அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    கோயம்பேடு, மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 23), கூலித்தொழிலாளி. இன்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கணேசன் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிள் சிறிது தூரத்தில் கிடந்தது.

    கோயம்பேடு இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கணேசனின் கழுத்தில் பலத்த காயம் இருந்தது.

    எனவே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் சிக்கி இறந்தார? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, கணேசனின் கழுத்தில் காயம் உள்ளதால் அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது என்றார். #Tamilnews
    மாணவரின் கைப்பையை திருடிக்கொண்டு ஓடியவர் தன்னை விரட்டிப்பிடித்த போலீஸ்காரரின் விரலை கடித்து துண்டாக்கினார். அதை பொருட்படுத்தாமல் போலீஸ்காரர் அவரை கைது செய்தார்.
    கோயம்பேடு:

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் ஜெகதீஷ்(வயது 17), பள்ளி மாணவர். இவர் நேற்று மாலை காஞ்சீபுரம் சென்றுவிட்டு, அங்கிருந்து கோயம்பேடு பஸ்நிலையம் வந்தார். அவர் கொளத்தூர் செல்வதற்காக ஷேர் ஆட்டோ ஏறுவதற்கு 100 அடி சாலையில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒருவர் ஜெகதீஷின் கைப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடினார். ஜெகதீஷ் கத்தி கூச்சல்போட்டார். சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் கார்த்திக் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்தார். அப்போது அந்த நபர் தப்பிக்க போலீஸ்காரர் கார்த்திக்கின் கை விரலை கடித்ததில் விரல் துண்டானது.

    வலியையும் பொருட்படுத்தாமல் கார்த்திக் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை கைது செய்தார். விசாரணையில், அவர் பல்லாவரம் பம்மலைச் சேர்ந்த அய்யப்பன்(24) என்று தெரிந்தது. அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள். #tamilnews
    ×