search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth body"

    செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே ஆட்டோவில் இரந்து வீசப்பட்ட வாலிபர் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி அங்கு பிணமாக கிடந்தார் என்று போலீசார் விசாரித்தனர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து வாலிபர் உடலை ஒருவர் ரோட்டில் வீசி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. விசாரணையில் பிணமாக கிடந்தவர் செங்கல்பட்டை அடுத்த அமனப்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் என்பதும், சென்னையில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.

    அவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால் குடும்பத்துடன் சேராமல் சென்னையில் தனியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டு உடலை ஆட்டோவில் எடுத்து வந்து வீசி சென்றார்களா? அல்லது ஆட்டோவில் பயணம் செய்த போது குடிபோதையில் திடீரென இறந்ததால் உடலை ரோட்டில் வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோயம்பேடு அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    கோயம்பேடு, மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 23), கூலித்தொழிலாளி. இன்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கணேசன் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிள் சிறிது தூரத்தில் கிடந்தது.

    கோயம்பேடு இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கணேசனின் கழுத்தில் பலத்த காயம் இருந்தது.

    எனவே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் சிக்கி இறந்தார? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, கணேசனின் கழுத்தில் காயம் உள்ளதால் அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது என்றார். #Tamilnews
    ×