search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jyotiraditya Scindia"

    • சமூக வலைதளத்தில் பிரபலமானவர் பாபி கட்டாரியா என்பவர்.
    • இவர் விமான இருக்கையில் படுத்தபடி சிகரெட் பற்ற வைக்கும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமானவர் பாபி கட்டாரியா. இவர் சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட் விமான இருக்கையில் படுத்தபடி சிகரெட்டை பற்ற வைத்து புகைபிடிக்கிறார். இந்த வீடியோ வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அமைப்பு கூறுகையில், இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், விதிகளை மீறி, விமானத்திற்குள் சிகரெட் புகைத்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அபாய நடத்தையை ஒருபோதும் ஏற்க முடியாது என குறிப்பிட்டார்.

    • அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 40 கோடி பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்வார்கள்.
    • உள்நாட்டு விமான போக்குவரத்து மிக முக்கியமான இடத்தை எட்டும்.

    மும்பை முதல் அகமதாபாத் வரை ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவும், இணை மந்திரி வி கே சிங்கும் மெய்நிகர் வழியில் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி சிந்தியா, முன்பு விமானப் பயணம் மிக உயர் வகுப்பினருக்கானதாக இருந்தது என்றார். இப்போது பிரதமரின் தொலைநோக்குப் பார்வை காரணமாக மலிவான விமானப் பயணம் ஏழை எளியவர்க்கும் சாத்தியமாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

    கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறை முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது என்றும் உடான் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 425 வழித்தடங்கள், ஆயிரம் வழித்தடங்களாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

    மேலும் 68 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படுவதன் மூலமாக நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 100 என்ற இலக்கை எட்ட முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

    அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 40 கோடி பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், உள்நாட்டு விமான போக்குவரத்து மிக முக்கியமான இடத்தை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    காங்கிரஸ் எம்.பி ஜோதிரத்யா சிந்தியாவை சுட்டுக்கொல்வேன் என பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த தனது மகன், சிறை செல்வதே சரியானது என பாஜக பெண் எம்.எல்.ஏ உமா தேவி கூறியுள்ளார். #JyotiradityaScindia
    போபால்:

    பா.ஜ.க ஆட்சியில் உள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹட்டா தொகுதி பாஜக பெண் எம்.எல்.ஏ.வான உமா தேவி காதிக்கின் மகன் பிரின்ஸ்தீப் லால்சந்த் காக்திக் பேஸ்புக் தளத்தில் சர்ச்சைக்குரிய தகவலை பதிவு செய்து இருந்தார். 

    காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஹட்டாவில் நடைபெற இருந்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ஜோதிரத்யா சிந்தியா அதில் கலந்து கொள்ள உள்ளார். ‘ஹட்டாவிற்கு வந்தால் சிந்தியாவை சுட்டுக் கொல்வேன், ஒன்று சிந்தியா உயிரிழக்க வேண்டும் அல்லது நான் உயிரிழக்க வேண்டும்’ என்று பிரின்ஸ்தீப் லால்சந்த் காக்திக் பதிவு செய்து இருந்தார். 

    இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாகிய நிலையில் “என்னுடைய மகன் சிறையில் தான் இருக்க வேண்டும். கட்சிக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்று எம்.எல்.ஏ. உமா தேவி கூறியுள்ளார். மேலும், போலீசில் தனது மகனை ஒப்படைக்க அவர் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவை சுட்டுகொன்று விடுவேன் என பாஜக எம்.எல்.ஏ. மகன் பேஸ்புக்கில் கொலை மி்ரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. #JyotiradityaScindia
    போபால்:

    மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள தாமோக் மாவட்டம் விதான்சபா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார் தேவி கஹாதிக். இவர் பாஜகவை சேர்ந்தவர். இவரது மகன் பிரி்னஸ்தீப்.

    இவர் தனது பேஸ்புக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    அதில், தனது தாயார் தொதிக்குள் வரும் 5-ம் தேதி ஜோதிராதித்யா சிந்தியா பிரசாரம் செய்ய வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு சிந்தியா தொகுதிக்குள் நுழைந்தால் அவரை நானே துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன், உயிர்மீது ஆசை இருந்தால் தொகுதிக்குள் நுழையாதே என பதிவிட்டிருந்தார்.

    இதுகுறீத்து ஜோதிராதியா சிங் கூறுகையில், இந்த மிரட்டல் மூலம் பாஜகவின் உண்மையான முகத்தை அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

    மூத்த காங்கிரஸ் தலைவருக்கு பாஜக எம்.எல்.ஏ மகன் கொலை மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #JyotiradityaScindia
    சாலை திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியாக்கு அழைப்பு விடுக்காமல் இருந்த செயலுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி மன்னிப்பு கேட்டார். #NitinGadkari #JyotiradityaScindia
    புதுடெல்லி:

    மத்தியபிரதேச மாநிலத்தின் குணா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா. சமீபத்தில் இவருடைய தொகுதியில் நெடுஞ்சாலை ஒன்று மாநில அரசால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சாலை திறப்புவிழாவில் பங்கேற்க அந்த தொகுதி எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியாக்கு அழைப்பு விடுக்காமலும், அவருடைய பெயரை கல்வெட்டில் இருந்து நீக்கியும் அவமதித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தின் போது எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா இதுதொடர்பாக பிரச்சினை எழுப்பினார். அப்போது மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர விரும்புவதாக அவர் கூறினார். இதற்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்து பேசினார். அப்போது அவர், “நான் அந்த சாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டதால், இந்த பிரச்சினைக்கு பொறுப்பேற்கிறேன். அதோடு இந்த சம்பவத்துக்காக எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட அனைவரிடம் மன்னிப்பு கோருகிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிச்சயமாக நிகழாது” என கூறினார்.  #NitinGadkari #JyotiradityaScindia #tamilnews
    ×