search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO"

    • மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர்.

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" (யுவ விஞ்ஞானி கார்யக்ரம்) என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையே 111, 153 மற்றும் 337 மாணவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. நடப்பாண்டு, இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற மார்ச் 20-ந்தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர். இதனால் இஸ்ரோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஏற்ப இளம் மாணவர்களுக்கு வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

    குறிப்பாக, நாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.

    2 வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

    வகுப்பறை விரிவுரைகள், ரோபாட்டிக்ஸ் சவால், ராக்கெட், செயற்கைகோள்களின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் அடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • இஸ்ரோ இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது.
    • எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவியது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் 17.2 24 அன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்தது. இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் செலுத்துவதற்கான 27.5 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.

    எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இஸ்ரோ அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி.எப்-14 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.
    • எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.

    இதனை, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

     


    இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப் பணியாக 27.5 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது.

    எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி நாளை ஏவப்படுகிறது.
    • இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.

    இதனை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி நாளை (சனிக்கிழமை) மாலை 5½ மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

    இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் சரியாக இன்று பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது.

    எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

    • வானிலை செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது.
    • 4 உந்துசக்தி நிலைகள் ஒவ்வொன்றும் 40 டன் திரவ உந்துசக்தியை கொண்டுள்ளன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இதனை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி நாளை (சனிக்கிழமை) மாலை 5½ மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

    இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்குகிறது.

    வானிலை செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது. 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் 4 உந்துசக்தி நிலைகள் ஒவ்வொன்றும் 40 டன் திரவ உந்துசக்தியை கொண்டுள்ளன.

    ராக்கெட்டின் 2-வது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய எந்திரம், 3-வது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் நிலையாகும். எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

    • இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட ‘எக்ஸ்போசாட்' செயற்கைகோள், பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது.
    • ‘போலிக்ஸ்’ என்ற கருவி வாயுக்களில் உள்ள மேகக்கூட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விண்மீன் மண்டலத்தில் உள்ள தரவுகள், புகைப்படங்களை சேகரித்துள்ளது.

    விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) திட்டமிட்டு இருந்தது. இதற்காக 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து இருந்தது.

    இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த மாதம் 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது விண்வெளி தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட 'எக்ஸ்போசாட்' செயற்கைகோள், பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது. இதில் இந்திய எக்ஸ்ரே 'போலரிமீட்டர்' (போலிக்ஸ்) மற்றும் எக்ஸ்ரே 'ஸ்பெக்ட்ரோஸ்கோபி' ஆகிய 2 கருவிகள் உள்ளன.

    இதில் போலரி மீட்டர் அறிவியல் ஆய்வுகளை தொடங்கி உள்ளது. குறிப்பாக 'போலிக்ஸ்' என்ற கருவி வாயுக்களில் உள்ள மேகக்கூட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விண்மீன் மண்டலத்தில் உள்ள தரவுகள், புகைப்படங்களை சேகரித்துள்ளது.

    எக்ஸ்போசாட் செயற்கைகோளை பயன்படுத்தி பெறப்பட்ட தரவு மற்றும் அளவீடுகள் மிகவும் பிரகாசமான விண்வெளி பொருட்களைப் படிக்க பயன்படுத்தப்படும். அத்துடன் எக்ஸ்ரே துருவமுனைப்பு துறையில் அடித்தளத்தை அமைக்கும்.

    அதே நேரம் 'ஸ்பெக்ட்ரோஸ்கோபி' கருவி விரைவில் பணியை தொடங்கும் வகையில் விஞ்ஞான செயல்பாடுகளுக்கு இப்போது தயாராக உள்ளது. போலிக்ஸ் கருவி பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள எக்ஸ்ரே வானியல் ஆய்வகத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த கருவியானது இந்திய தொழில்துறையின் ஆதரவுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது' என்றனர்.

    • தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் 2-வது ஏவதளத்தை இஸ்ரோ அமைத்து வருகிறது.
    • மாணவர்கள், ஆர்வலர்கள் ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிட வசதியாக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் ராக்கெட்டுகள், செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 2 ராக்கெட் ஏவுதளங்களில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் 2-வது ஏவதளத்தை இஸ்ரோ அமைத்து வருகிறது. இந்தநிலையில், மாணவர்கள், ஆர்வலர்கள் ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிட வசதியாக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் வந்து பார்வையிட ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். அந்தவகையில் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு வானிலை செயற்கைக்கோளான 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்.14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

    இதனை நேரில் பார்வையிட விரும்பும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

    • காலநிலை தரவுகளை அறிந்து கொள்ள இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
    • பேரழிவு எச்சரிக்கை அமைப்புக்கான தரவுகளை வழங்குவதுடன், முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன் கொண்டது.

    புதுடெல்லி:

    வானிலை முன் அறிவிப்பு தகவல்கள் அடங்கிய காலநிலை தரவுகளை அறிந்துகொள்வதற்காக 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ பெங்களூருவில் வடிவமைத்துள்ளது.

    இந்நிலையில், இந்த செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தயார் நிலையில் உள்ள ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி, பிப்ரவரி 17ம் தேதி மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.

    காலநிலை தரவுகளைத் தெரிந்து கொள்வதற்காக தற்போதுள்ள சுற்றுப்பாதையில் இன்சாட்-3டி மற்றும் 3 டி.ஆர். செயற்கைக் கோள்கள் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இன்சாட்-3 டி.எஸ். செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை வழங்குவதுடன் வானிலை முன் அறிவிப்பு திறன்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 6 சேனல் இமேஜர் மற்றும் 19 சேனல் சவுண்டர் கருவிகள் வானிலை ஆய்வுகளுக்காகவும், உயர்தர தரவுகளை சேகரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது.

    இந்த செயற்கைக்கோள், 'டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர்' (டி.ஆர்.டி) போன்ற அத்தியாவசிய தகவல் தொடர்பு கருவிகளைக் கொண்டுள்ளது. இந்த கருவி தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து தரவுகளையும் பெறுகிறது. இன்சாட் 3 டி.எஸ். செயற்கைகோளில் தகவல் தொடர்பு அம்சங்களுடன், நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதுதவிர பேரழிவு எச்சரிக்கை அமைப்புகளுக்கான தரவுகளை வழங்குவதுடன், முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.

    • வானிலை முன்அறிவிப்பு தகவல்கள் அடங்கிய காலநிலை தரவுகளை அறிந்து கொள்வதற்காக ‘இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை இஸ்ரோ பெங்களூருவில் வடிவமைத்து உள்ளது.
    • காலநிலை தரவுகளை தெரிந்து கொள்வதற்காக தற்போதுள்ள சுற்றுப்பாதையில் இன்சாட்-3டி மற்றும் 3 டி.ஆர். செயற்கைகோள்கள் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், 2024-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 12 ஏவுதல்களை இலக்காக கொண்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி, கடந்த 1-ந் தேதி காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில், 469 கிலோ எடை கொண்ட எக்ஸ்ரே போலரிமீட்டர் செயற்கைகோளை (எக்ஸ்போசாட்) பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்திலான துருவமுனைப் பணியை வெற்றிகரமாக ஏவி இஸ்ரோ புத்தாண்டை சிறப்பாக தொடங்கியது.

    தொடர்ந்து, வானிலை முன்அறிவிப்பு தகவல்கள் அடங்கிய காலநிலை தரவுகளை அறிந்து கொள்வதற்காக 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை இஸ்ரோ பெங்களூருவில் வடிவமைத்து உள்ளது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தயார்நிலையில் உள்ள ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி, அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.

    காலநிலை தரவுகளை தெரிந்து கொள்வதற்காக தற்போதுள்ள சுற்றுப்பாதையில் இன்சாட்-3டி மற்றும் 3 டி.ஆர். செயற்கைகோள்கள் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இன்சாட் அமைப்பின் திறன்களை கணிசமாக மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ஒரு பிரத்யேக வானிலை செயற்கைகோள் இன்சாட்-3 டி.எஸ். செயற்கைகோளாகும

    இன்சாட்-3 டி.எஸ். செயற்கைகோள் மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை வழங்குவதுடன் வானிலை முன் அறிவிப்பு திறன்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கைகோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 6 சேனல் இமேஜர் மற்றும் 19 சேனல் சவுண்டர் கருவிகள் வானிலை ஆய்வுகளுக்காகவும், உயர்தர தரவுகளை சேகரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது.

    அத்துடன் இந்த செயற்கைகோள், 'டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர்' (டி.ஆர்.டி) போன்ற அத்தியாவசிய தகவல் தொடர்பு கருவிகளையும் கொண்டுள்ளது. இந்த கருவி தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து தரவுகளையும் பெறுகிறது. இன்சாட் 3 டி.எஸ். செயற்கைகோளில் தகவல் தொடர்பு அம்சங்களுடன், நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இதுதவிர பேரழிவு எச்சரிக்கை அமைப்புகளுக்கான தரவுகளை வழங்குவதுடன், முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.

    • நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர், அதன் லேசர் அல்டிமீட்டர் கருவி, விக்ரம் லேண்டரை நோக்கி சுட்டிக்காட்டியது.
    • லேசர் கற்றையை கடக்கும்போது அந்த ஒளி விக்ரம் லேண்டரில் பதிந்து பின்னர் அந்த ஒளியை ஆர்பிட்டர் பதிவு செய்தது.

    வாஷிங்டன்:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.

    விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஆய்வுகளை மேற்கொண்டது. 14 நாட்களுக்கு பிறகு சூரியன் அஸ்தமனமானதால் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தூக்க நிலைக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டருடன் லேசர் கற்றை மூலம் தொடர்பை ஏற்படுத்தியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா தெரிவித்துள்ளது.

    நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரும் நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டருக்கும் (எல்.ஆர்.ஓ.) விக்ரம் லேண்டருக்கும் இடையே ஒரு லேசர் கற்றை அனுப்பப்பட்டு பிரதிபலிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நாசா கூறும்போது, நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர், அதன் லேசர் அல்டிமீட்டர் கருவி, விக்ரம் லேண்டரை நோக்கி சுட்டிக்காட்டியது. அப்போது ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

    லேசர் கற்றையை கடக்கும்போது அந்த ஒளி விக்ரம் லேண்டரில் பதிந்து பின்னர் அந்த ஒளியை ஆர்பிட்டர் பதிவு செய்தது. இந்த வெற்றிகரமான சோதனையானது நிலவின் மேற்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக கண்டறிய வழி வகுக்கும்.

    நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து மேற்பரப்பில் பின்னோக்கி பிரதிபலிப்பை கண்டறிய முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். இது வருங்காலத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அடுத்த கட்டமாகும்.

    இவ்வாறு நாசா தெரிவித்தது.

    • கவுகாத்தி பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    செயற்கை நுண்ணறிவு குறித்து இன்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. உங்கள் மொபைல் போன் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு உள்ளீடும், உங்களைப் பற்றிய தகவலை தெரிவிக்கிறது.

    நீங்கள் யார், உங்களுக்கு பிடித்தது என்ன என்பது அதற்கு நன்றாக தெரியும். உங்களைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கோ, அல்லது உங்களுக்கே தெரியாத விஷயங்கள் கூட உங்கள் கணிணிக்கு தெரிந்திருக்கும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெற்று, இங்குள்ள பல விஷயங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் என தெரிவித்தார்.

    • இந்திய வானிலை அமைப்புக்கு சொந்தமானது ‘இன்சாட் -3 டிஎஸ்' செயற்கைகோள்.
    • ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் திரவ எரிபொருளின் பயன்பாடு மிகவும் சிக்கலாக இருந்தாலும், இது அதிக எடை தூக்கும் திறனை கொண்டுள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 புத்தாண்டில் கடந்த 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் 'எக்ஸ்போசாட்' என்ற 'எக்ஸ்-ரே போலரிமீட்டர்' என்ற செயற்கைகோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி விண்ணில் ஏவிய ஆதித்யா-எல்1 விண்கலத்தை கடந்த 6-ந்தேதி இந்தியாவின் முதல் சூரிய ஆய்வகத்தை திட்டமிட்ட எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது. இந்த வெற்றிகரமான தொடக்கத்திற்கு பிறகு நடப்பாண்டு 12 திட்டங்களை செயல்படுத்த போவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அறிவித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து, இஸ்ரோ தற்போது, ஜி.எஸ்.எல்.வி.-எப்14 என்ற ராக்கெட்டில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. திரவ உந்துசக்தியைப் பயன்படுத்தும் மேம்பட்ட ராக்கெட்டாகும். இதனை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. தற்போது ராக்கெட்டில் செயற்கைகோள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இந்திய வானிலை அமைப்புக்கு (ஐ.எம்.டி.) சொந்தமானது 'இன்சாட் -3 டிஎஸ்' செயற்கைகோள். காலநிலை கண்காணிப்பு செயற்கைகோள்களின் தொடரின் ஒரு பகுதியாக இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    இது காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதுடன் மற்றும் உந்துவிசை அமைப்பு ஒத்துழைப்பு ஆகிய அர்ப்பணிக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோள்களை உள்ளடக்கியது. இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3 டிஆர் இவை ஏற்கனவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவி வட்ட சுற்றுப்பாதையில் உள்ளன. அடுத்ததாக தற்போது இன்சாட்-3 டிஎஸ் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு மே 29-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி.- எப்12 ராக்கெட் மூலம் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட வழிசெலுத்தும் என்.வி.எஸ்-01 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

    அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளுடன் கிரையோஜெனிக் திரவ உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது. ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் திரவ எரிபொருளின் பயன்பாடு மிகவும் சிக்கலாக இருந்தாலும், இது அதிக எடை தூக்கும் திறனை கொண்டுள்ளது.

    நடப்பாண்டில் வரவிருக்கும் மாதங்களில் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானுக்கான சோதனை ராக்கெட் விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின்படி, விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து விண்வெளிக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்ப அழைத்து வருவதற்கும் பாதுகாப்பானதா? என்பதை உறுதிப்படுத்த பல சுற்று சோதனைகள் நடத்த உள்ளது.

    ×