உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்களை உங்கள் கணிணி அறிந்திருக்கும்: இஸ்ரோ தலைவர்

கவுகாத்தி பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்.
உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்களை உங்கள் கணிணி அறிந்திருக்கும்: இஸ்ரோ தலைவர்
Published on

கவுகாத்தி:

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவு குறித்து இன்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. உங்கள் மொபைல் போன் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு உள்ளீடும், உங்களைப் பற்றிய தகவலை தெரிவிக்கிறது.

நீங்கள் யார், உங்களுக்கு பிடித்தது என்ன என்பது அதற்கு நன்றாக தெரியும். உங்களைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கோ, அல்லது உங்களுக்கே தெரியாத விஷயங்கள் கூட உங்கள் கணிணிக்கு தெரிந்திருக்கும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெற்று, இங்குள்ள பல விஷயங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com