search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvNZ"

    • சுப்மான் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.
    • இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

    ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வரும் சுப்மன் கில், டி20 போட்டிகளில் சுமாராகவே விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடந்த இரண்டு டி20 போட்டிகளில் கில் 7 மற்றும் 11 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பிரித்வி ஷா-வை களமிறக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சுப்மான் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் டி20 போட்டிகளில் அவர் இதுவரை அதை செய்யவில்லை. அவர் இன்னும் ஒரு போட்டியில் விளையாடி சொதப்பினாலும் கூட நம்பிக்கையை இழந்துவிடுவார்.

    மற்ற 2 வடிவங்களில் சிறப்பாக விளையாடி வரும் ஃபார்மும் பாதிபடைந்துவிடும். இதுபோன்ற ஒரு வீரர் டி20 கிரிக்கெட்டில் ஆட வேண்டும் தான். ஆனால் அவருக்கு கடைசி போட்டியில் ஓய்வு கொடுத்து வைத்தால் மட்டுமே புத்துணர்ச்சியுடன் இருப்பார். அடுத்த போட்டிகளிலாவது பழைய ஃபார்முடன் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா, நியூசிலாந்து இடையிலான டி20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    அகமதாபாத்:

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், லக்னோவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியும் வென்றது. இதன்மூலம் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டி20 போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேவேளையில் மற்றொரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பின் அணியில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் சுப்மன் கில்லா? பிரித்வி ஷாவா? என்பதை பாண்ட்யா தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, டி20 தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    • இரு அணி கேப்டன்களும் ஆடுகளம் குறித்து அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.
    • இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

    லக்னோ:

    லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்தது. 100 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

    இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த இரு அணி கேப்டன்களும் ஆடுகளம் குறித்து அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

    20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல. கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது லக்னோ மைதானத்தில் கருப்பு மண் இருந்துள்ளது. அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும். ஆனால் போட்டி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக, பிட்ச் வடிமைப்பாளரை அழைத்த இந்திய அணி நிர்வாகம், ஸ்பின்னர்களுக்கு உதவும் சிகப்பு நிற மண்ணில் பிட்ச்-ஐ உருவாக்குமாறு கோரியுள்ளனர்.

    கடைசி நேரத்தில் பிட்ச்-ஐ மாற்றியமைத்த போது தான், பந்து மிக அதிகமாக ஸ்பின் ஆகும் வகையில் மாற்றிவிட்டனர். இதனால் பிட்ச்- உருவாக்கும் அதிகாரியை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது பிசிசிஐ. இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

    • இந்திய அணியின் தொடக்கம் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக அமையவில்லை.
    • ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    அகமதாபாத்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

    3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இரண்டு ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டு உள்ளது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை (1-ந்தேதி) நடக்கிறது.

    இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் உள்ளனர்.

    ஆனால் இந்திய அணியின் தொடக்கம் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர்களான சுப்மன் கில், இஷான் கிஷன் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

    இதனால் அவர்கள் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் உள்ளனர்.

    நியூசிலாந்து அணி பேட்டிங்கில் கான்வே, பின் ஆலென், மிட்செல், பிலிப்ஸ் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் பெர்குசன், டிக்னர், ஜேக்கப் டபி, சோதி, கேப்டன் சான்ட்னர் ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பிரேஸ்வெல் பேட்டிங், பந்து வீச்சில் அசத்த கூடியவர்.

    நாளைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும்.

    இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் போட்டி விறு விறுப்பாக இருக்கும்.

    • வலைப் பயிற்சியின் போது சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
    • ஆடுகளத்தை பொறுத்தவரை இது மோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக நீங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 19.5-வது ஓவரில் இந்திய அணி 101 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வென்றது. சூர்ய குமார் யாதவ் 26 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்த போட்டியில் எந்த பேட்ஸ்மேனும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இது டி20 போட்டிக்கு தயார் செய்யப்பட்ட பிட்ச் இல்லை என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

    இந்நிலையில் ஒரு ரன் எடுக்க இளம் வீரர்கள் ரொம்ப கஷ்படுகிறார்கள் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது தரக்குறைவான ஆடுகளம் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளரான சாகலை இரண்டு ஓவர் மட்டுமே ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது ஹர்திக் பாண்டியா செய்த தவறாக பார்க்கிறேன். காரணம் இரண்டு ஓவரில் அவர் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருக்கிறார்.

    ஆடுகளத்தை பொறுத்தவரை இது மோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக நீங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும். இப்போது உள்ள தலைமுறை வீரர்கள் வலைப் பயிற்சியின் போது சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள். அதுதான் திறமை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

    ஆனால் சுழற் பந்துவீச்சை எப்படி சமாளித்து ஆட்டம் இழக்காமல் விளையாட வேண்டும் என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை. என்னைக் கேட்டால் அதுதான் உண்மையான திறமை. வலைப்பயிற்சியில் சுழற்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இளம் வீரர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பந்துகளை வீணடிக்காமல் சிங்கிள்ஸ் அடித்து விளையாடியிருந்தால் இந்திய அணி முன்கூட்டியே வெற்றி பெற்று இருக்கலாம்.

    என்று கம்பீர் கூறியுள்ளார்.

    • 2021-ம் ஆண்டு 238 பந்துகள் விளையாடிய வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் இருந்தது.
    • 2021-ம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியா அணிகள் 207 பந்துகள் வரை விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து ஆடிய இந்திய அணி கடைசி ஓவரின் 5-வது பந்தில்தான் வெற்றி பெற்றது. மைதானம் குறித்து இரு அணி கேப்டன்களும் அதிருப்தியை தெரிவித்தனர். இந்த வெற்றி மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்று சமன் செய்துள்ளது.

    இந்த போட்டியில் இரு அணிகளும் 8 பவுண்டரி மட்டுமே அடித்துள்ளது. ஆனால், ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இதன் மூலமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 239 பந்துகள் வரை விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்காத அணிகள் என்ற சாதனையை படைத்துள்ளன.

    டி20 கிரிக்கெட்டில் இந்தியா -நியூசிலாந்து 239 பந்துகள் சந்தித்து ஒரு சிக்சர்கள் கூட அடிக்காத அணிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    ஒரு சிக்சர்கள் கூட அடிக்காத அணிகள் மற்றும் மைதானம் பின்வருமாறு:-

    2023 - 239 பந்துகள் - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் - லக்னோ ஒரு சிக்சர் கூட இல்லை.

    2021 - 238 பந்துகள் - வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் - மிர்பூர் - ஒரு சிக்சர் கூட இல்லை.

    2010 - 223 பந்துகள் - இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் - கார்டிஃப் - ஒரு சிக்சர் கூட இல்லை.

    2021 - 207 பந்துகள் - இலங்கை மற்றும் இந்தியா அணிகள் - கொழும்பு - ஒரு சிக்சர் கூட இல்லை.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்க இருக்கிறது. 

    • ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.
    • எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது.

    லக்னோ:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

    லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 100 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    கேப்டன் சான்ட்னெர் அதிகபட்சமாக 19 ரன் எடுத்தார். அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    100 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

    இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும் (அவுட் இல்லை), இஷான் கிஷன் 19 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்யா 15 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். பிரேஸ்வெல், சோதி தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த நிலையில் லக்னோ ஆடுகளம் குறித்து கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா அதிருப்தி தெரிவித்து உள்ளார். இந்த பிட்ச் மிகுந்த அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஆட்டத்தை முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மிகவும் தாமதமாகி விட்டது. உண்மையை சொல்ல போனால் இந்த ஆடுகளம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணி வீரர்களுமே பிட்ச் குறித்து அதிருப்தியை வெளியிட்ட னர். 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல.

    கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும். 120 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது. இறுதியில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 19.5 ஓவரில் 101 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    லக்னோ:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், 2-வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டு கைப்பற்றினார்.

    இதையடுத்து, 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சுப்மன் கில் 11 ரன்னும், இஷான் கிஷன் 19 ரன்னும், ராகுல் திரிபாதி 13 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடினார்.

    இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதன்மூலம் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

    • இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

    லக்னோ:

    இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டி20 போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.

    177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. இதனால் டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களம் காண்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது.

    தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
    • டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.

    அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்த அணியின் வெற்றிக்காக போராடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி வீரர்கள் யாரும் படைத்திடாத தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

    வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதிலும் குறிப்பாக 5-வது ஓவரில் மிரட்டலை கொடுத்த பின் ஆலனை 35 (23) ரன்களில் அவுட்டாக்கிய அவர் அடுத்து வந்த மார்க் சாப்மேன் கொடுத்த கேட்ச்சை சூப்பர் மேன் போல தாவி பிடித்து டக் அவுட்டாக்கினார். அத்துடன் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் வெறித்தனமாக போராடிய அவர் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    இதற்கு முன் தனது கேரியரில் 12 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வெறும் 47 ரன்கள் மட்டும் எடுத்த அவர் இந்த ஒரே போட்டியில் 50 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடினார். அதை விட இப்போட்டியில் மொத்தமாக 2 விக்கெட், 1 கேட்ச், 50 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்தது 50 ரன்கள், 1 விக்கெட், 1 கேட்ச் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வேறு எந்த இந்திய வீரரும் இப்படி ஒரு சாதனையை படைத்ததே கிடையாது. இதுவரை ஜடேஜா கேரியரில் அரை சதம் அடித்ததில்லை. அதே போல் பேட்டிங் பந்து வீச்சில் அசத்தினாலும் யுவராஜ் சிங், பாண்டியா ஆகியோர் இதற்கு முன் கேட்ச் பிடித்ததில்லை. அந்த வகையில் வாஷிங்டன் சுந்தரை நினைத்து தமிழக ரசிகர்கள் மிகவும் பெருமை அடைகிறார்கள்.

    • ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இப்படி நாங்கள் தோற்றோம் என்று கூற முடியாது.
    • டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது.

    ராஞ்சி:

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது வாஷிங்டன் சுந்தர் கேள்வி ஒன்றுக்கு கடுப்பாக்கி பதிலளித்தார்.

    இது குறித்து செய்தியாளரிடம் பேசிய வாஷிங்டன் சுந்தர்:-

    இது ஏதேனும் ஒரு போட்டியில் இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இப்படி நாங்கள் தோற்றோம் என்று கூற முடியாது. நாங்கள் செய்த தவறை சரி பார்ப்போம். ஆனால் என்னை பொறுத்தவரை இது போன்ற ஒரு போட்டி எப்போதாவது நிகழும். நாங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக வந்திருக்கும்.

    ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இது போன்ற ஆடுகளத்தை நீங்கள் எப்போது ஆவது விளையாட நேரிடும். எங்கள் அணி வீரர்கள் இதுபோன்ற ஆடுகளத்தில் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடி இருக்கிறார்கள். இந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட சரிவு குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறினார்.

    வாஷிங்டன் சுந்தரின் இந்த பதிலுக்கு ஆட்சேபனை தெரிவித்த செய்தியாளர் ஒருவர், தொடக்க வீரர்களை மாற்றி விடலாமே என கேள்வி கேட்டார்.

    இதற்கு பதில் அளித்த வாஷிங்டன் சுந்தர் மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்தமான பிரியாணி, ஹோட்டலில் கிடைக்கவில்லை என்பதற்காக நீங்கள் அதன் பிறகு ஹோட்டலுக்கு செல்லாமல் இருப்பீர்களா? டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது. இந்த மோசமான நாள் யாருக்கு வேண்டுமானாலும் அமையலாம். ஏன் நியூசிலாந்து அணி ராய்ப்பூரில் 108 ரன்கள் ஆட்டம் இழந்தார்களே?

    இதன் காரணமாக நியூசிலாந்து அணி டாப் ஆர்டரை மாற்றினார்களா என்ன? இது ஒரு விளையாட்டுப் போட்டி. இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது போன்ற மோசமான நாட்களில் நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். விளையாட்டில் எந்த அணியும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. அதேபோன்று ஒரே நாளில் 22 வீரர்களும் சிறப்பாக விளையாட முடியாது. நாங்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டு தான் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறோம்.

    இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

    • 6-வது வீரராக ஆடிய வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை போராடினார். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
    • 2-வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நாளை (29-ந்தேதி) நடக்கிறது.

    ராஞ்சி:

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 177 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    டேரில் மிச்சேல் 30 பந்தில் 59 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்), கான்வே 35 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), பின் ஆலன் 23 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், அர்தீப் சிங், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. இதனால் இந்தியா 21 ரன்னில் தோல்வியை தழுவியது.

    6-வது வீரராக ஆடிய வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை போராடினார். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அவர் 28 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 34 பந்தில் 47 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல், சான்ட்னெர், பெர்குசன் தலா 2 விக்கெட்டும், ஜேக்கப் டபி, சோதி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தை கணிக்க தவறிவிட்டோம். ஆடுகளம் இப்படி இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இரண்டு அணிகளுமே 'பிட்ச்' குறித்து ஆச்சரியம் அடைந்தன. ஆனால் எங்களை விட நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது. அதனால் தான் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

    பழைய பந்தை விட புதிய பந்து நன்றாக ஆடுகளத்தில் திரும்பியது. சுழற்பந்து வீச்சு திரும்பிய விதமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.நானும், சூர்யகுமார் யாதவும் பேட்டிங் செய்யும் வரை இலக்கை எட்டி விடலாம் என்று நினைத்தோம்.

    நாங்கள் பந்து வீச்சில் கடைசி கட்டத்தில் மிகவும் மோசமாக செயல்பட்டோம். கூடுதலாக 25 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    எங்களது பந்து வீச்சு குழு இளமையானது. இதனால் அவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். வாஷிங்டன் சுந்தர் நன்றாக செயல்பட்டார். அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். பந்தும் வீசுகிறார். எங்களுக்கு அதிகமான நம்பிக்கையை அளிக்கிறார். இது அணிக்கு உதவும். நாங்கள் முன்னேறி செல்கிறோம்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நாளை (29-ந்தேதி) நடக்கிறது. 

    ×