search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helicopter crash"

    • மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகளும் உயிரிழப்பு.
    • 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உக்ரைனின் அவசர சேவைக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் உள்துறை அமைச்சர் டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 8 பேர் பயணம் செய்த நிலையில் விபத்துக்குள்ளானது.

    மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

    இவர்களை தவிர, 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர் குழந்தைகள் என தேசிய தலைமை காவலர் இஹோர் கிளிமென்கோ தெரிவித்துள்ளார்.

    • ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுர்யமாக மணற்பரப்பில் தரையிறக்கினார்.
    • 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்டு கோஸ்டிலுள்ள கேளிக்கை விடுதி அருகே தரையிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், தரையிறங்க வந்து கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதியது.

    ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுர்யமாக மணற்பரப்பில் தரையிறக்கிய நிலையில், மற்றொரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.

    அதில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது.
    • இந்த விபத்தில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

    பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.

    இதில் 2 தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    • பழுதடைந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் விட்டுச் சென்றன.
    • அமெரிக்க ஹெலிகாப்டர்களை தலிபான்கள் பயன்படுத்தி வந்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய அமெரிக்க படைகளில் பழுதடைந்த தங்களுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே விட்டுச் சென்றன. அவற்றை கைப்பற்றிய தலிபான் படையினர் பயன்படுத்தி வந்தனர்.

    தலைநகர் காபூலில் இன்று அமெரிக்க தயாரிப்பு ஹெலிகாப்டர் மூலம் தலிபான் படை வீரர்கள் சிலர் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொருங்கியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததாகவும், மேலும் அதில் இருந்த 5 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    இங்கிலாந்து லெய்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர் ஸ்ரீவதன பிரபா ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LeicesterCity #Srivaddhanaprabha
    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள பிரபல கால்பந்து கிளப்புகளில் ஒன்று லெய் செஸ்டர் சிட்டி.

    2015-16ம் ஆண்டு நடந்த பிரிமியர் ‘லீக்‘ போட்டியில் அந்த கிளப் சாம்பியன் பட்டம் பெற்றது.

    லெய்செஸ்டர் சிட்டி எப்.சி. அணியின் உரிமையாளர் விச்சை ஸ்ரீவதனபிரபா. தாய்லாந்தைச் சேர்ந்த கோடீசுவரரான இவர் 2010-ம் ஆண்டு அந்த கால்பந்து கிளப்பை வாங்கினார்.

    லெய்செஸ்டர்சிட்டி- வெஸ்ட் ஹாம் கிளப் அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது.

    இந்தப் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் லெய்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர், கிங்பவர் ஸ்டேடியத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

    ஹெலிகாப்டர் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. ஸ்டேடியத்தின் முன்பு உள்ள பார்க்கிங் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து வெடித்து தீப்டித்தது.

    இந்த விபத்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் விச்சை ஸ்ரீவதன பிரபா பலியானார். அவருடன் மேலும் 4 பேர் பலியானார்கள்.

    அந்த கிளப்பின் ஊழியர்களான நுர்சாரா சுக்நமாமி, கேவே போர்ன், விமானி எரிக்சுவாபர், அவரது உதவியாளர் இசபெல்லா ரோசா ஆகியோரும் இறந்தனர்.

    ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் ஸ்டேடியம் முன்பு நெருப்பு கோளம் ஏற்பட்டது. போட்டியை பார்த்து விட்டு வெளியே சென்றுக் கொண்டு இருந்த கால்பந்து ரசிகர்கள் இதை பார்த்து பீதி அடைந்து ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    ஹெலிகாப்டரில் உள்ள விசிறியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உலகின் சிறந்த மனிதனை இழந்து விட்டதாக அந்த கிளப் தனது உரிமையாளர் மரணம் தொடர்பாக தெரிவித்துள்ளது. #LeicesterCity #Srivaddhanaprabha
    ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 12 பேர் பலியாகினர். #Accident
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது பால்க் மாகாணம். இந்த பகுதியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஆப்கன் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் உக்ரேனிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 14 பேர் பயணித்தனர். 

    பால்க் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணித்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    விசாரணையில், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது என ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர். #Accident
    ×