search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guinness Record"

    கேரளாவில் 620 கி.மீ. நீளத்துக்கு நடந்த மகளிர் சுவர் போராட்டம் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் சாமி தரிசனத்திற்கு ஆதரவு திரட்ட மாநில அரசு சார்பில் பெண்கள் மனித சுவர் போராட்டம் நடத்தப்பட்டது.

    காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த போராட்டத்தில் 35 லட்சம் பெண்கள் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடின்றி பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தொடக்க இடமான காசர்கோட்டில் கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜாவும், முடிவு இடமான திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தாகரத்தும் பங்கேற்றனர். ரீமா கல்லிங்கல் உள்பட நடிகைகள் பலரும் மனித சுவர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெண்கள் உரிமைகளை பாதுகாக்க நடத்தப்பட்ட மனித சுவர் போராட்டத்தில் அதிக அளவு பெண்கள் திரண்டு இதை வெற்றி பெற செய்துள்ளனர். 620 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போராட்டம் பற்றி ஒரு மாதத்திற்கு முன்புதான் முடிவு செய்யப்பட்டது. அதை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.

    பெண்கள் முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பாகுபாடு இல்லாமல் பெண்கள் கலந்துகொண்டு இதை வெற்றி பெற செய்துள்ளனர். சட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டம் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டமாக கருதுகிறோம்.

    பெண்களுக்கு எதிராக செயல்படும் பழமைவாதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் இது. பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். வழபாடுகளில் பாகுபாடு இருக்கக்கூடாது என்பது இதன் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PinarayiVijayan



    உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #Vijayabaskar #TNHealthDepartment
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டினத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 70 சதவீத மகப்பேறு அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. அதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதன்மையாக விளங்குகிறது. இதேபோன்று மகப்பேறு இறப்பு சதவீதம் என்பது 5 மாதத்திற்கு முன்பு ஒரு லட்சத்திற்கு 62 ஆக இருந்தது. ஆனால் அது தற்போது 51 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே குறைந்த இறப்பு சதவீதம் ஆகும்.

    தமிழக சுகாதாரத்துறை சார்பில் விபத்தினால் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கான நிலைப்படுத்தும் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. இதை விரிவுபடுத்தும் விதமாக விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகம் விபத்து நடக்கும் பகுதிகளில் இத்தகைய நிலைப்படுத்தும் மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

    அனைத்து கிராமங்களிலும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை அனைத்து துறையுடன் சேர்ந்து முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. கிராமப்புற மக்கள் காய்ச்சல் என்று வந்தவுடன் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அல்லது படுக்கை வசதி கொண்ட தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அதற்கான சான்றிதழை விரைவில் தமிழக முதல்வர் வெளியிடுவார்.


    தமிழக சுகாதாரத்துறையை தொடர்ந்து பிரதமர் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு டிசம்பர் 9-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட்டு கவுன்சிலிங் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் மருத்துவர் காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #TNHealthDepartment
    தீபாவளி பண்டிகையையொட்டி இன்று அயோத்தி நகரில் சரயு நதிக்கரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவம் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. #AyodhyaDeepostav
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி (இன்று) வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது.

    இறுதி நாளான இன்றிரவு அயோத்தி நகரில் சரயு நதிக்கரையில் 3 லட்சத்து ஓராயிரத்து 152 அகல் விளக்குகளை ஏற்றி உற்சாகமாக தீப ஒளி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அம்மாநில கவர்னர், துணை முதல் மந்திரி உள்ளிட்ட இதர மந்திரிகள் மற்றும் இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தீபங்களின் ஒளிவெள்ளத்தில் அயோத்தியா நகரம் ஜொலிக்கும் இந்த தீபோத்சவம் காட்சியை கண்டு களித்தனர்.



    இந்நிலையில், இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாகவும் மாறியுள்ளது. இதை காண வந்திருந்த உலக சாதனை புத்தகமான கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த சாதனையை அங்கீகரிக்கும் சான்றிதழை உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்திடம் வழங்கினர். #AyodhyaDeepostav #DeepostavGuinnessRecord #301152earthenlamp 
    ராமரின் அவதார பூமியான அயோத்தி நகரில் தீபாவளி திருநாளன்று 3 லட்சம் தீபங்களை ஏற்றி உலக சாதனையை உருவாக்க உ.பி.அரசு திட்டமிட்டுள்ளது. #AyodhyaDiwali #Guinnessrecord
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராமஜென்ம பூமியான அயோத்தி நகரில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் தீபங்களை ஏற்றி, இசை, நடன நிகழ்ச்சிகளுடன் கடந்த ஆண்டு தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    அதேவகையில், இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று அயோத்தி நகரில் சரயு நதிக்கரையையொட்டி  3 லட்சம் தீபங்களை ஏற்றி  உலக சாதனையை உருவாக்க உ.பி.அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரீட்டா பகுகுனா தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக கின்னஸ் சாதனை நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பியுள்ளோம். தீபாவளியன்று சரயு நதிக்கரையில் 300 அடி உயரம் கொண்ட ராமரின் சிலை நிறுவப்படும். 3 நாள் கொண்டாடப்படவுள்ள தீபாவளி விழாவில் கடந்த ஆண்டைப்போலவே கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். #AyodhyaDiwali #Guinnessrecord
    நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவில் இன்று நகம் வெட்டுகிறார். #ShridharChillal
    நியூயார்க்:

    மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். தற்போது 88 வயதாகும் ஸ்ரீதர், கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.

    இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 செண்டிமீட்டர்களாக உள்ளது. இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செண்டிமீட்டர் ஆகும்.

    உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.


    இந்நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீதர் அமெரிக்காவில் இன்று தனது கை நகங்களை வெட்டுகிறார்.

    அமெரிக்காவின் பிரபலமான ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ ( Ripley's Believe It or Not!) என்னும் தொலைக்காட்சி தொடர் உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிபரப்பி வருகிறது.

    ’நம்பினால் நம்புங்கள்’ என்னும் பொருள்படும் இந்த தொடருக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து  வைக்கும் அருங்காட்சியகமும் உண்டு.

    ஆசையாசையாக கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து, பாதுகாத்து வளர்த்த நகத்தை இந்த அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைத்து அழகுபார்க்க விரும்பிய ஸ்ரீதர், சமீபத்தில் இதற்கான அனுமதியை ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பெற்றார்.

    இதையடுத்து, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க் நகரை வந்தடைந்துள்ள ஸ்ரீதர் சில்லால், இன்று (புதன்கிழமை) பல கேமராக்கள் முன்னிலையில் தனது 66 ஆண்டு ‘நகதவத்தை’ துறக்கிறார். #ShridharChillal #longestfingernails #GuinnessRecord #Ripley'sBelieveItorNot
    உக்ரை நாட்டை சேர்ந்த பவெல் செமினியூக் 346 பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை பெற கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளார். #PavelSemenyuk
    உக்ரைன்:

    உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் பவெல் செமினியூக் (87). இவருக்கு 13 குழந்தைகள் பிறந்தனர்.

    தற்போது இவருக்கு 127 பேரக்குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமின்றி 203 கொள்ளுபேரப் பிள்ளைகள் உள்ளனர். மேலும் அவரது கொள்ளு பேரப்பிள்ளைகளுக்கும் தற்போது 2 குழந்தைகள் பிறந்துள்ளனர்.



    இவர்களுடன் அவரது குழந்தைகளையும் சேர்த்தால் அவரது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 346 ஆகிறது. முன்னாள் கட்டுமான தொழிலாளி ஆன செமினியூக்கு தனது பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் பெயர்கள் நினைவில் வைத்திருப்பது கடினமாக உள்ளது என்கிறார். தனது குடும்பத்தினர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.



    எனவே, உலகின் மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை பெற கின்னஸ் சாதனைக்கு இவர் விண்ணப்பித்துள்ளார். தற்போது இந்தியர் ஒருவர் 192 பேருடன் உலகின் மிகப்பெரிய குடும்பம் தன்னுடையது என கின்னஸ் சாதனையை தக்க வைத்துள்ளார். #PavelSemenyuk
    கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அகமதாபாத் :

    உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மோதிரம் குஜராத் மாநிலத்தில் ஏலத்திற்கு வர உள்ளது.

    தாமரை போன்று தோற்றம் அளிக்கும் அந்த மோதிரத்தில் 36 இதழ்கள் இடம்பெற்றுள்ளது. இதன் மொத்த எடை 58 கிராம் ஆகும். விஷால் மற்றும் குஷ்பூ விஷால் எனும் தம்பதியர் வடிவமைத்த இந்த மோதிரத்தின் மதிப்பு சுமார் ரூ.27 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.



    இருப்பினும், ஏலத்தின் போது மோதிரத்தின் ஆரம்பகட்ட விலை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் என்பதால் இதனை வாங்க இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×