search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Groundnut"

    • ஏலத்தில் 3000 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.1 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

    திருப்பூர்:

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 கோடிக்கு நிலக்கடலை விற்பனை திங்கட்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3000 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில் முதல் ரக நிலக்கடலை ரூ.7,100 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,700 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,200 முதல் ரூ.6,400 வரையிலும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.1 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • தற்போது அங்கு அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உடுமலை பகுதிக்கு வரத்து அதிகரித்துள்ளது.
    • பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டல்களை வேளாண்மைத்துறையினர் வழங்க வேண்டும்.

    உடுமலை:

    வண்டல் மண் மற்றும் செம்மண் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது.ஜூன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற காலங்களாகும்.உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறைந்த அளவிலேயே நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.அதேநேரத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது அங்கு அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உடுமலை பகுதிக்கு வரத்து அதிகரித்துள்ளது.

    உடுமலை பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கடலை தேவை அதிகம் இருக்கிறது.இதனைக் கருத்தில் கொண்டு ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து பச்சை நிலக்கடலையை வாங்கி வந்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட உலர்களங்களில் காய வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-உடுமலை மட்டுமல்லாமல் காங்கேயம் பகுதி எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் நிலக்கடலை பருப்பு தேவை அதிகம் இருக்கிறது.எனவே நிலக்கடலையை வாங்கி வந்து காய வைத்து தோல் நீக்கி பருப்புகளாக்கி விற்பனை செய்து வருகிறோம்.நல்ல வெயில் காலத்தில் ஒரு சில நாட்களில் பச்சைக்கடலை நன்கு காய்ந்து விடும்.ஆனால் தற்போதைய பருவநிலையில் நன்கு காய்வதற்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது மழை பெய்வதால் கடலை நனையாமல் பாதுகாக்க தார்ப்பாய்களுடன் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டியதுள்ளது.நிலக்கடலைக்கு தேவை அதிகம் உள்ள நிலையில் நல்ல மண் வளம் உள்ள உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார விவசாயிகளும் நிலக்கடலை சாகுபடி செய்ய முன்வர வேண்டும்.அதற்கான சாகுபடி முறைகள், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டல்களை வேளாண்மைத்துறையினர் வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறினர்.

    • விருதுநகர் மாவடடத்தில் கடலை எண்ணை-வத்தல் விலை உயர்ந்துள்ளது.
    • பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11,500 முதல் ரூ.11,900 வரை விற்பனையானது.

    விருதுநகர்

    விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.8,300 முதல் ரூ.9,500 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,200 முதல் ரூ.11,200 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.8,100 முதல் ரூ.9,600 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11,500 முதல் ரூ.11,900 வரையிலும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8,500 வரையிலும் விற்பனையானது.

    துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.10,700 முதல் ரூ.11,600 வரையிலும் விற்பனையானது. மல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ.5,200 முதல் ரூ. 5,300 வரையிலும், மல்லி நாடுரகம் ரூ.4,900 முதல் ரூ.5,200 வரை விற்பனையானது.

    முண்டுவத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.2 ஆயிரம் உயர்ந்து ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும், புது வத்தல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.19 வரையும் விற்பனையானது. கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2,900 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4,868 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.20 விலை குறைந்து ரூ. 2,020 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது.

    நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4 ஆயிரம் ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.3,820 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.4,200 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

    பொரிகடலை விலை ரூ.3,750 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4 ஆயிரம் ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,110 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,020 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1,180 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.910 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.8,100 ஆகவும் விற்பனை ஆனது. பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும் விற்பனை ஆனது.

    மசூர் பருப்பு ரூ.10,800 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பி ரகம் 50 கிலோ ரூ. 21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆயிரம் ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா ஏ ரகம் ரூ.9,800 ஆயிரமாகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரமாகவும் விற்பனையானது.

    தற்போது கடலை எண்ணெய் மற்றும் வத்தல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • செப்டம்பர் மாதம் அறுவடை துவங்கவுள்ள நிலையில் பல இடங்களில் விளைச்சல் துவங்கியுள்ளது.
    • பருவமழையை நம்பி தான் தோட்டத்தில் களையெடுப்பது, உரமிடுவது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

    அவிநாசி :

    அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், பெருமளவில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் மாதம் அறுவடை துவங்கவுள்ள நிலையில் பல இடங்களில் விளைச்சல் துவங்கியுள்ளது.பெரும்பாலும் மானாவாரி நிலத்தில் தான் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற நிலையில், பருவமழையை நம்பி தான் தோட்டத்தில் களையெடுப்பது, உரமிடுவது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

    தற்போது பரவலாக சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் பலர் தங்கள் தோட்டங்களில் களையெடுக்க துவங்கியுள்ளனர். பல இடங்களில் நிலக்கடலை செடிகளில் பூ பூக்க துவங்கியுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

    மழையை நம்பியே நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். சந்தையில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவற்றின் விலை, வழக்கத்தை காட்டிலும் உயர்ந்திருப்பதால் தரமான முறையில் விளைவிக்கப்படும் நிலக்கடலை மூலம் தயாரிக்கப்படும் நிலக்கடலை எண்ணெய்க்கு தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்மூலம், நிலக்கடலையின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, கணிக்கப்படுகிறது. எனவே சரியான சமயத்தில் மழை பெய்து விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நிர்ணயிக்கப்படும் விலைக்கு குறைவாக ஏல விற்பனையை அனுமதிக்கக் கூடாது.
    • கடந்த 5 ஆண்டில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

    அவிநாசி :

    மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ்பொ ருளாதார மற்றும் புள்ளியியல் இயக்குனரகம் செயல்படுகிறது.

    இத்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் ராபி மற்றும் கரீப் பருவத்தில் விளைவிக்கப்பட்டு அரசின் ஏல மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும். அவ்வாறு நிர்ணயிக்கப்படும் விலைக்கு குறைவாக ஏல விற்பனையை அனுமதிக்கக் கூடாது. அதன்படி நிலக்கடலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.5,850 (கிலோவுக்கு, 58.50 ரூபாய்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலை, ஈரோடு மாவட்டத்தில் சத்தி, புளியம்பட்டி, நம்பியூர், கோபி, நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடா, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள் ளிட்ட பல இடங்களில் நிலக்கடலை சீசன் துவங்கியுள்ளது.

    கடந்தாண்டு நிலக்கடலைக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கும் அதிகமாகத்தான் விலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கடலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒப்பிடுகையில், கடந்த, 2018 - 19ல் கிலோவுக்கு ரூ.48.90, 2019-20ல் ரூ.50.90 , 2020-21ல் ரூ.52.75 ,2021-22ல் ரூ. 55.50 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கடந்த 5 ஆண்டில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

    ×