search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Groundnut"

    • 130 மூட்டை நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • நிலக்கடலை குவிண்டால் ரூ.6,100 முதல் ரூ.7,300 வரை ஏலம் போனது.

    அவினாசி :

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 130 மூட்டை நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,100 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,100 முதல் ரூ.6,300 வரையிலும் ஏலம்போனது.

    ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • 49 மூட்டைகளில் தேங்காய் பருப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும் ஏலம் போனது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.86 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 4 விவசாயிகள் 49 மூட்டைகளில் (2445 கிலோ) தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.86 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 9 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு 325 நிலக்கடலை மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,300 முதல் ரூ.7,500 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,300 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மண் கலந்த நிலக்கடலையை வியாபாரிகள் வாங்க மறுத்தனர்
    • அதிகாரிகள் பாஸ்கரிடம் பேசி சமாதானம் செய்து 50 மூட்டையை எடுத்துக் கொண்டு மண்ணாக உள்ள 7 மூட்டையை திருப்பி அனுப்பினார்கள்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-திருச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள சிலால் வாரியங்காவல், சின்ன வளையம், புதுச்சாவடி, உடையார்பாளையம், ஒக்கநத்தம், கல்லாத்தூர், மேலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கடலை உள்ளிட்ட பயிர்களை கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் வானதிறப்பட்டினத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவருடைய கடலை மூட்டைகளை கடலை கமிட்டியில் போடுவதற்காக வந்துள்ளார்.அங்கே உள்ள வியாபாரிகள் கடலைகளை வாங்கி அதிக லாபத்திற்கு விற்பது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் பாஸ்கரின் கடலை மூட்டையில் மண் இருப்பதாக கூறி கடலை மூட்டையை வாங்காமல் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் விவசாயம் செய்ய பல்வேறு போராட்டங்களை தாண்டி விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் நீங்கள் இதுபோன்று செய்வது விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல் இருக்கிறது எனக் கேட்டுள்ள பாஸ்கரிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் விற்பனை கூடத்தில் உள்ள அதிகாரிகள் பாஸ்கரிடம் பேசி சமாதானம் செய்து 50 மூட்டையை எடுத்துக் கொண்டு மண்ணாக உள்ள 7 மூட்டையை திருப்பி அனுப்பினார்கள். இதனால் ஒழுங்குமுறை கூடம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • நிலக்கடலை ரூ.3¾ லட்சத்துக்கு ஏலம் போனது

    கரூர்:

    கரூர் நொய்யல் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர், க.பரமத்தி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை 52.27 குவிண்டால் எடை கொண்ட 167 மூட்டை விற்பனைக்கு வந்தது. இதில் நிலக்கடலை கிலோ அதிகபட்ச விலையாக ரூ.80.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70.30-க்கும், சராசரி விலையாக ரூ.77.60-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 325-க்கு ஏலம்போனது.

    • பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
    • பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.

    நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

    நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

    நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

    இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

    பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

    - அருள் ராம்

    • விவசாயிகள் 2ஆயிரத்து 194கிலோ நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • நிலக்கடலை அதிகபட்சமாக ரூ.79.20க்கும், குறைந்த பட்சமாக ரூ.77.80க்கும் கொள்முதல் செய்தனர்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய ன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை,வெள்ளிக்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர்,திருச்சி, திண்டுக்கல், மதுரை,திருப்பூர்,ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை,நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று விவசாயிகள் 2ஆயிரத்து 194கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ நிலக்க டலை காய் அதிகப ட்சமாக ரூ.79.20க்கும், குறைந்த பட்சமாக ரூ.77.80க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.1லட்சத்து 73ஆயிரத்து 287க்கு வணிகம் நடைபெற்றது.இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை க்கூட கண்காணிப்பாளர் சி.மகுடே ஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • 2ஆயிரத்து 395கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ நிலக்கடலை காய் ரூ.75.80க்கு கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை, வெள்ளிக்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை,நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று வெள்ளிக்கிழமை விவசாயிகள் கலந்து கொண்டு 2ஆயிரத்து 395கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ நிலக்கடலை காய் ரூ.75.80க்கு கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.1லட்சத்து 81 ஆயிரத்து 578க்கு வணிகம் நடைபெற்றது.இத்தகவலை வெள்ளகோவில் ஒழு ங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டது
    • ஜிப்சத்தில் உள்ள கால்சியம், கந்தகச் சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்களை அதிக அளவில் உருவாக்க உதவுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் வெயிட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பு பருவத்தில் நிலக்கடலை விதைக்கும்போது சரியான தட்பவெப்பநிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு வாய்ப்புள்ளது. அதிக மகசூல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.

    விதைகள் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுப்பதற்கு நிலக்கடலை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 4-கிராம் ட்ரைக்கோடெர்மோ விரிடி கொண்டு பூஞ்சான விதை நேர்த்தியும், காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கிடைக்க செய்ய விதைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு தேவையான ரைசோபியம் 2 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 2 பாக்கெட் உயிர உரத்தினை, ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து உயிர்உர விதை நேர்த்தி செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.

    நிலக்கடலை சாகுபடியில் பயிர் எண்ணிக்கை பராமரிப்பு மிகவும் முக்கியமானது. ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 80 கிலோ விதையினை 30 செ.மீ இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்து பற்றாகுறையைப் போக்க நிலக்கடலை நுண்ணூட்ட சத்து 5 கிலோவினை 2கிலோ மணலுடன் சேர்த்து வயலில் இட வேண்டும்.

    விதைத்த 40 முதல் 45வது நாளில் 80 கிலோ ஜிப்சத்தை இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம், கந்தகச் சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்களை அதிக அளவில் உருவாக்க உதவுகிறது. இதனுடன் நல்ல வளர்ச்சி அடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்கு மற்றும் அதிக மகசூலை பெற ஊட்டச்சத்து கலவையான ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் இரண்டு முறை பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேற்கண்ட உரிய வழிமுறைகளை கடை பிடித்து அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


    • நாமக்கல் மாவட்டத்தில் 2023 -ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அந்த பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.
    • பிரிமிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு 311.22 ரூபாய் ஆகும். கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    நாமக்கல் மாவட்டத்தில் 2023 -ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அந்த பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.

    பிரிமிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு 311.22 ரூபாய் ஆகும். கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பகுதி நகல் , ஆதார் அட்டை நகல் மற்றும் செல்சிபோன் எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமியம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

    • ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு பூஞ்சான விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
    • விதைத்த 40 முதல் 45 வது நாளில் மண்ணை கொத்தி 80 கிலோ ஜிப்சத்தை இட்டு அணைக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிப்பதாவது:-

    தற்போது நிலக்கடலை விதைக்கும் போது, போதிய மழை, சரியான தட்ப வெப்ப நிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு வாய்ப்புள்ளது.

    தரமான விதைகள் குறை–ந்தபட்சம் 70 சதவீதம் முளைப்பு திறனும், அதிகபட்ச ஈரப்பதம் 9 சதவீதம் இருக்க வேண்டும். பூச்சி பூஞ்சாண நோய் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும்.

    மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் நிலக்கடலை இள–ஞ்செடி பாதிக்கப்பட்டு பயிர்களின் எண்ணிக்கை குறைந்து விளைச்சல்பாதிக்க–ப்படுகின்றது.

    இதனை தவிர்க்க விதைகளின் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுக்க நிலக்கடலை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு பூஞ்சான விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

    நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகளை 30 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணி–க்கையை பராமரிக்க வேண்டும்.

    பொக்குகாய்கள் உருவாவதை போக்க நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து 5 கிலோ, 2 கிலோ மணலுடன் கலந்து வயல் பரப்பின் மேல் தூவ வேண்டும்.

    விதைத்த 40 முதல் 45 வது நாளில் மண்ணைக் கொத்தி 80 கிலோ ஜிப்சத்தை இட்டு அணைக்க வேண்டும். இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து, கந்தகச்சத்து அதிக எண்ணெய்ச்சத்து கொண்ட திரட்சியான காய்கள் அதிக அளவில் உருவாக உதவுகிறது .

    நிலக்கடலை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று அதிக லாபம் அடைலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது.
    • விதை ரகங்களை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்கிட அறிவுறுத்தப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் விவசாயிகள் கார்த்திகை பருவ நிலக்கடலை சாகு படிக்கு தயாராகி வருகின்றனர்.

    விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கிய மானது. எனவே தரமான விதைகள் சரியான விலை யில் விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் தரும் விதை ரகங்களை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வங்கிட அறிவுறுத்தப்படுகிறது.

    தாங்கள் வாங்கி விதைத்த விதைகள் தரமற்றதாகவோ, முளைப்பு திறனில் குறைபாடுகளோ இருப்பின் அது குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் 0462-2553017, விதை ஆய்வா ளர்கள்- 9750427427 (நெல்லை) , 96293 61660 (வள்ளியூர்), 93844 47338 ( தென்காசி), 9965050077 ( சங்கரன்கோவில்), 87541 92941 ( நாகர்கோவில்) ஆகிய எண்களில் விதை ஆய்வு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ரூ.6, 850 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது.

    சேவூா் :

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.93 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில், முதல் ரக நிலக்கடலை ரூ.6, 850 முதல் ரூ.7,000 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,800 வரையிலும்,மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.93 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செய்திருந்தனா்.

    ×