search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சி"

    • வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர்.
    • குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஆரணியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார்.

    குழந்தைகளுக்கு பிடித்தமான முந்திரி, திராட்சை, பாதாம், பேரிச்சம் அடங்கிய பாக்கெட்டை வாங்கினார்.

    அப்போது அந்த பாக்கெட்டில் உயிருடன் பூச்சி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் மற்ற வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார்.

    வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்காமல் வேறு பாக்கெட் மாற்றி எடுத்து செல்லுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தார். குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

    இதனை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வேளாண் நிலத்தை நன்கு உழுது விட வேண்டும்.
    • மண்ணுக்கு ஏற்ற மரப்பயிர்களை நட வேண்டும்.

    உடுமலை :

    மரப்பயிர்களில் பூச்சிகள் தாக்குதலுக்கு, முறையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது குறித்து வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் பூச்சியியல் துறை விஞ்ஞானி ஜான் பிரசாந்த் ஜேக்கப் கூறியதாவது :- பூச்சி தாக்குதலுக்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது முக்கியம்.அதன்படி மரப்பயிர்களை நடவு செய்யும் வேளாண் நிலத்தை நன்கு உழுது விட வேண்டும்.தண்ணீர் தேங்காமல் முறையான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். மண்ணை முழுமையாக பரிசோதித்த பின் மண்ணுக்கு ஏற்ற மரப்பயிர்களை நட வேண்டும்.மரப்பயிர்களை நடவு செய்யும்போது இயற்கை உரங்களையிட்டு நட வேண்டும். களைத்தாவரங்களை தொடர்ந்து நீக்கி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.

    பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களின் கிளைகளை அகற்றுதல், ஒளி பொறிகளை வைத்து பூச்சிகளை பிடித்தல், சரியான ஊடு பயிரிடுதல் ஆகியவற்றை பின்பற்றலாம்.ஒரே இன மரப்பயிர்களை அருகருகே நடுவதால் பூச்சி விரைவாக பரவி விடும். ஆகவே பல்வேறு இனப்பயிர்களை நட வேண்டும். வேளாண் நிலத்தில் அகற்றப்படும் களைச்செடிகள் எரிக்கப்படும்போது பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

    • பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தாலும் இம்மாவு பூச்சியினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.
    • இப்பூச்சியை உயிரியல் முறையில் நிரந்தரமாக கட்டுப்படுத்த “அசிரோபேகஸ் பப்பாயே” என்ற ஒட்டுண்ணி ராசிபுரம் வட்டாரத்தில் இப்போது தயாரிக்கப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் மரவள்ளி, மல்பரி, பருத்தி, பப்பாளி, கொய்யா, கத்தரி, தேக்கு, கோகோ, பழப்ப யிர்கள், மலர் செடிகள் போன்ற பல்வேறு தோட்டக்கலை பயிர்களை பப்பாளி மாவு பூச்சி பெரு மளவு தாக்கி சேதப்படுத்துகிறது.

    பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தாலும் இம்மாவு பூச்சியினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.

    இப்பூச்சியை உயிரியல் முறையில் நிரந்தரமாக கட்டுப்படுத்த "அசிரோபேகஸ் பப்பாயே" என்ற ஒட்டுண்ணி ராசிபுரம் வட்டாரத்தில் இப்போது தயாரிக்கப்படுகிறது.

    விவசாயிகள் அனை வரும் பூச்சிக்கொல்லி மருந்திற்கு பதிலாக இந்த உயிரியல் ஒட்டுண்ணியை பயன்படுத்தி பயனடை யலாம் என கபிலர்மலை வட்டார வேளாண்மை பொது அலுவலர் ராதா மணி தெரிவித்துள்ளார். 

    • ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு பூஞ்சான விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
    • விதைத்த 40 முதல் 45 வது நாளில் மண்ணை கொத்தி 80 கிலோ ஜிப்சத்தை இட்டு அணைக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிப்பதாவது:-

    தற்போது நிலக்கடலை விதைக்கும் போது, போதிய மழை, சரியான தட்ப வெப்ப நிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு வாய்ப்புள்ளது.

    தரமான விதைகள் குறை–ந்தபட்சம் 70 சதவீதம் முளைப்பு திறனும், அதிகபட்ச ஈரப்பதம் 9 சதவீதம் இருக்க வேண்டும். பூச்சி பூஞ்சாண நோய் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும்.

    மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் நிலக்கடலை இள–ஞ்செடி பாதிக்கப்பட்டு பயிர்களின் எண்ணிக்கை குறைந்து விளைச்சல்பாதிக்க–ப்படுகின்றது.

    இதனை தவிர்க்க விதைகளின் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுக்க நிலக்கடலை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு பூஞ்சான விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

    நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகளை 30 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணி–க்கையை பராமரிக்க வேண்டும்.

    பொக்குகாய்கள் உருவாவதை போக்க நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து 5 கிலோ, 2 கிலோ மணலுடன் கலந்து வயல் பரப்பின் மேல் தூவ வேண்டும்.

    விதைத்த 40 முதல் 45 வது நாளில் மண்ணைக் கொத்தி 80 கிலோ ஜிப்சத்தை இட்டு அணைக்க வேண்டும். இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து, கந்தகச்சத்து அதிக எண்ணெய்ச்சத்து கொண்ட திரட்சியான காய்கள் அதிக அளவில் உருவாக உதவுகிறது .

    நிலக்கடலை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று அதிக லாபம் அடைலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது.
    • ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது. இந்த இடைக்கணுப் புழுக்களை ரசாயன மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அதேநேரத்தில் டிரைக்கோடிரெம்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிகிறது.

    இந்த ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக மாவட்டம் தோறும் ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி மையம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள பழைய வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடத்தில் உள்ளது.

    இந்த மையத்தில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த உற்பத்தி மையத்தில் தற்காலிகப் பணியாளர் மூலம் உற்பத்தி தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    இங்கு உற்பத்தி செய்யப்படும் டிரைக்கோடெர்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் கரும்பில் இடைக்கணுப் புழு மற்றும் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த முடியும்.அட்டைகளில் ஒட்டி வழங்கப்படும் இந்த முட்டைகளை கரும்பின் சோகையில் கட்டி விட வேண்டும். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது. ஒரு சிசி என்பது 100 முட்டைகள் அடங்கிய தொகுப்பு ஆகும்.

    இந்த அட்டைகளை மாலை நேரத்தில் வயலில் கட்ட வேண்டும். கண்டிப்பாக குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்கு எந்தவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக் கூடாது. இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் சிறிய ரகக்குழவி இடைக்கணுப் புழு, தண்டு துளைப்பான் போன்றவற்றின் முட்டைகளை அழிக்கிறது. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் தடைப்பட்டு முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபோல பருத்தியில் காய்ப்புழு, நெல்லில் இலைமடக்குப்புழு ஆகியவற்றையும் இந்த ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்த முடியும். இதுதவிர கத்தரி, வெண்டை போன்ற காய்கறிப்பயிர்களிலும் புழுக்களைககட்டுப்படுத்த இந்த ஒட்டுண்ணியைப்பயன்படுத்தலாம்.

    தற்போது ஒட்டுண்ணி உற்பத்திக்காக வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து கார்சேரா அந்துப்பூச்சியின் முட்டைகள் பெறப்பட்டு அவற்றை கம்பு, நிலக்கடலை, ஈஸ்ட் ஆகியவை அடங்கிய கலவையில் இட்டு மூடி வைத்து இனப்பெருக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அந்துப்பூச்சிகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் கருமுட்டைகள் அழிக்கப்பட்டு அதில் ஒட்டுண்ணிகள் வளர்க்கப்படுகின்றன. பின்னர் இந்த முட்டைகள் அட்டைகளில் ஒட்டப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். இவ்வாறு வேளாண்துறையினர் கூறினர்.

    • திட்டக்குடி அருகே பூச்சி கடித்து வாலிபர் பலியானர்.
    • வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தொழுதூர் அடுத்துள்ள மேல் ஐவனூரை சேர்ந்த அருள் வேந்தன் மகன் அருள்தாஸ் (26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது விஷ பூச்சி கடித்து விட்டது.  வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அருள்தாஸ் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ×