திட்டக்குடி அருகே பூச்சி கடித்து வாலிபர் சாவு

திட்டக்குடி அருகே பூச்சி கடித்து வாலிபர் பலியானர்.வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார்.
திட்டக்குடி அருகே பூச்சி கடித்து வாலிபர் சாவு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் தொழுதூர் அடுத்துள்ள மேல் ஐவனூரை சேர்ந்த அருள் வேந்தன் மகன் அருள்தாஸ் (26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது விஷ பூச்சி கடித்து விட்டது.  வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அருள்தாஸ் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com