சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1 கோடிக்கு நிலக்கடலை விற்பனை

ஏலத்தில் 3000 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.1 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 கோடிக்கு நிலக்கடலை விற்பனை திங்கட்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3000 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில் முதல் ரக நிலக்கடலை ரூ.7,100 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,700 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,200 முதல் ரூ.6,400 வரையிலும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.1 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com