search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy S10"

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyS10 #smartphone



    சாம்சங் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்10 மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் பல்வேறு உயர் ரக அம்சங்களை வழங்கலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமரா சென்சார் உள்ளிட்டவை முதன்மை அம்சங்களாக இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் ஐரிஸ் சென்சாரை நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    வழக்கமான ஆப்டிக்கல் கைரேகை சென்சார்களுடன் ஒப்பிடும் போது எஸ்10 மாடலில் வழங்கப்பட இருக்கும் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் பெருமளவு உணரும் பகுதியை கொண்டிருக்கும் என்றும் ஸ்கிரீனின் 30% பகுதிகளில் உணர முடியும் என கூறப்படுகிறது. 

    மேலும் 2019ம் ஆண்டு எஸ்10 மாடலின் அல்ட்ராசவுன்ட் மற்றும் புதுவித ஸ்கிரீன் தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் சாம்சங் நிறுவன சாதனங்களில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போன்களை மூன்று வேரியன்ட்களில் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இவற்றில் 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் திரை, மூன்று பிரைமரி கேமரா சென்சார்,  இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கேமரா அம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று 12 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், புத்தம் புதிய 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எஸ்10 மாடலின் விலை குறைந்த வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. #GalaxyS10



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் புதுவித டிஸ்ப்ளே, வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி Mi மிக்ஸ் 3 போன்றே மெல்லிய பெசல்கள் மற்றும் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தென்கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 93.4 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.



    அந்த வகையில் இரண்டு பிரீமியம் மாடல்கள் வளைந்த டிஸ்ப்ளேக்களுடனும், ஒரு மாடலில் ஃபிளாட் ஸ்கிரீன் ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம். இத்துடன் உயர் ரக வெர்ஷனில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா செட்டப், டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா-வைடு லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் லீக் ஆன விவரங்களில் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் யு.ஐ. சார்ந்த ஆன்ட்ராய்டு பை இயங்குதளமும் 5ஜி சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பியான்ட் என பெயரிடப்பட்டு இருப்பதாகவும், நான்கு மாடல்களும் பியானஅட் 0, பியான்ட் 1, பியானஅட் 2 மற்றும் பியான்ட் 2 5ஜி என்ற குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

    கூடுதலாக கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி புதிய கேலக்ஸி எஸ்10 மாடல் பிளாக், கிரே, புளு, ரெட், கிரீன் மற்றும் எல்லோ என ஆறு வித நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட இருப்பது இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது. #Samsung



    சாம்சங் 2018 OLED நிகழ்வில், அந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டது. இவை பெரும்பாலும் OLED சார்ந்த தொழில்நுட்பங்களாகவே இருந்தன. 

    சாம்சங் அறிவிப்புகளில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்-ஸ்கிரீன் கேமரா சென்சார் தொழில்நுட்பம், டச்-சென்சிட்டிவ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்கிரீன் சவுன்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான பணிகளில் சாம்சங் ஈடுபட்டுள்ள நிலையில், இவை வரும் காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய தொழில்நுட்பம் முன்பக்க கேமராவினை டிஸ்ப்ளேவின் கீழ் மறைக்கும். மேலும் இந்த தொழில்நுட்பம் ப்ரோடோடைப்களில் முழுவீச்சில் சோதனை செய்யப்படுவதாகவும், இவை 2020-ம் ஆண்டு வாக்கில் பரவலாக வழங்கப்படலாம் என சாம்சங் அறிவித்துள்ளது.

    கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொழில்நுட்பத்திற்கான சோதனைகள் துவக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

    இன்-டிஸ்ப்ளே கேமரா மட்டுமின்றி, சாம்சங் நிறுவனம் புதிதாக கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மாபர்ட்போனின் திரையில் ஹேப்டிக் ஆன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் கேம் பட்டன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மூன்று வேரியன்ட்களில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyS10
    சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இருக்கும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சார்ந்து பல்வேறு அம்சங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகிறது.

    இதுவரை சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், முன்னதாக இணையத்தில் லீக் ஆன தகவல்களில் புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் மொத்தம் நான்கு வேரியன்ட்களில் உருவாகி வருவாது தெரியவந்துள்ளது. எனினும், தற்சமயம் கிடைத்து இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மூன்று வேரியன்ட்களில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.

    சாம்மொபைல் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்10 மாடல்கள்- SM-G970F, SM-G975F, மற்றும் SM-G973F என்ற பெயரில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது. மூன்று வேரியன்ட்களும் தற்சமயம் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.



    பிரபல டிப்ஸ்டர்களில் ஒருவரான ஐஸ் யூனிவர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் SM-G970 மற்றும் SM-G973 மாடல்களில் 5.8 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் SM-G975 மாடலில் 6.44 இன்ச் பேனல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் SM-G970 மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா செட்டப் மற்றும் SM-G973 மாடலில் டூயல் கேமரா செட்டப், SM-G975 மாடலில் மூன்று கேமரா லென்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் ஒன்றும் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்கா மற்றும் தென் கொரிய சந்தைகளில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

    தென்கொரியாவில் இருந்து வெளியான தகவல்களின் படி ஐந்து கேமரா லென்ஸ் கொண்ட கேலக்ஸி எஸ்10 வேரியன்ட் ஸ்மார்ட்போனினை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மூன்று கேமரா பின்புறமும், இரண்டு கேமரா யூனிட் முன்பக்கமும் வழங்கப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.  #GalaxyS10
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyS10



    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் மூன்று வேரியன்ட் ஐபோன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 6.1 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 5.8 இன்ச் அளவில் மேம்படுத்தப்பட்ட ஐபோன் X மற்றும் 6.4 இன்ச் ஐபோன் X பிளஸ் வேரியன்ட் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இவற்றில் 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் ஐபோன் மாடல்களில் அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதே அம்சம் கேலக்ஸி நோட் 10 அல்லது அதன்பின் 2019-ம் ஆண்டு வாக்கில் வழங்கப்படலாம் என சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    முன்னதாக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே ஐபோன் வடிவமைப்பை சாம்சங் திருடிவிட்டதாக பல ஆண்டுகளாக நிலவி வந்த காப்புரிமை பிரச்சனையை தீர்த்து கொள்வதாக இரு நிறுவனங்களும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கொரியாவில் இருந்து வரும் தகவல்களில் கேலக்ஸி எஸ்10 மாடலின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் ஐபோனுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. இதே தகவல்களில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் ஐந்து கேமரா லென்ஸ்கள்: மூன்று பிரைமரி கேமரா, இரண்டு செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    அதன்படி புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் 12 எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 16 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    இத்துடன் 2019-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவன எஸ்10 ஸ்மார்ட்போனில் 3D முக அங்கீகார வசதி இடம்பெறலாம் என கூறப்படுகிறது. சாம்சங் கேல்கஸி எஸ்10 ஸ்மார்ட்போன்கள் 2019 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #GalaxyS10 #smartphone
    சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் அந்நிறுவனம் மூன்று கேமராக்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பத்தாவது எடிஷன் கேலக்ஸி ஃபிளாக்ஷிப் என்ற வகையில் புதிய சீரிஸ் பல்வேறு வேரியன்ட்களில் வெளியிடப்படும் என்றும் இதில் ஒரு மாடலில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 சீரிஸ்-இன் டாப் என்ட் மாடலில் 12 எம்பி டூயல் அப்ரேச்சர் லென்ஸ், 16 எம்பி (f/1.9) மற்றும் 13 எம்பி (f2.4) லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் மிட்-சைஸ் கேலக்ஸி எஸ்10 மாடலில் சூப்பர் வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வைடு-ஆங்கிள் லென்ஸ்-இல் ஆட்டோஃபோக்கஸ் அல்லது ஆப்டிக்கல் இமேஸ் ஸ்டேபிலைசேஷன் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இதேபோன்ற செட்டப் எல்ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.



    புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் எவ்வித தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. இத்துடன் வெளியாகி இருக்கும் மற்ற தகவல்களின்படி கேலக்ஸி எஸ்10 மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

    இதேபோன்று சாம்சங் நிறுவனம் பியான்ட் 0, பியான்ட் 1 மற்றும் பியான்ட் 2 என்ற பெயர்களில் மூன்று சேம்பில்களை வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது.

    இவற்றில் பியான்ட் 1 மற்றும் பியான்ட் 2 மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் பியான்ட் 0 மாடல் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்படுவதாகவும், இந்த அம்சத்துக்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அறிமுகமாக சில மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வலம் வரத்துவங்கியுள்ளன.

    2019-ம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி எஸ்10 மாடலில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்க சாம்சங் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்10 இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தவிர கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் 3D முக அங்கீகார தொழில்நுட்பம் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.



    இதற்காக சாம்சங் நிறுவனம் இஸ்ரேலை சேர்ந்த மான்டிஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் இணைந்து ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டதை போன்ற முக அங்கீகார வசதியை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் சாம்சங் தனது எஸ்10 மாடலில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கிவிட்டு, 3D முக அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் வழங்குவதற்கான மாதிரி பாகங்களை உதிரிபாக நிறுவனங்களிடம் சாம்சங் முன்பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இன்-டிஸ்ப்ளே சென்சார் மற்றும் 3D முக அங்கீகார தொழில்நுட்பங்களை புதிய ஸ்மார்ட்போனில் வழங்கும் பட்சத்தில் சாம்சங் நிச்சயம் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை சேர்க்கும் பட்சத்தில் புதிய ஸ்மார்ட்போனில் ஏ.ஆர். எமோஜி அம்சம் இடம்பெறலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் சவுன்ட்-எமிட்டிங் டிஸ்ப்ளே கான்செப்ட் கடந்த மாதம் நடைபெற்ற தகவல் டிஸ்ப்ளேக்களுக்கான (SID 2018) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த டிஸ்ப்ளே வைப்ரேஷன் மற்றும் போன் கன்டக்ஷன் பயன்படுத்தி இயர்பீஸ்-க்கான தேவையை போக்குகிறது. இதனால் டிஸ்ப்ளேவில் ஸ்கிரீன் அளவு மேலும் அதிகரிக்க முடியும். சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள்  தங்களது சவுன்ட் எமிட்டிங் OLED டிஸ்ப்ளேக்களை வணிகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் 6.2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேவை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.



    இதன் வைப்ரேஷன் இருப்பதால், சத்தத்தை திரையின் பாதி பகுதியில் காதை வைக்க வேண்டும். இது திரையில் வட்ட வடிவ ஐகான் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் விவோ அறிமுகம் செய்திருந்த விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன்களில் இதேபோன்ற தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    விவோ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை ஸ்கிரீன் சவுன்ட் கேஸ்டிங் என அழைக்கிறது. மற்ற பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆடியோ தீர்வுகளை போன்று இல்லாமல், இது மின்சக்தியை சேமித்து, சத்தம் கசிவதை குறைக்கும். இதனால் ஆடியோ தரம் சிறப்பானதாக இருக்கும்.
    சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், கேலக்ஸி எஸ்10 மாடலில் இது வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய், விவோ போன்ற நிறுவனங்கள் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்கி வரும் நிலையில், சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 

    சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் பத்தாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் மாடலில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது, எனினும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலில் தான் இந்த தொழில்நுட்பத்தை சாம்சங் வழங்கும் என தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்குவது குறித்த இறுதி முடிவினை சாம்சங் விரைவில் எடுக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சாம்சங் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்களிடம் கேலக்ஸி நோட் 9 மாடலில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கும் முடிவை திரும்ப பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 


    கோப்பு படம்

    சர்வதேச சந்தையில் சீன நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில், சாம்சங் சாதனங்களில் இந்த அம்சம் முற்றிலும் சிறப்பாக வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் வழங்க அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சாரை உருவாக்கி வருவதாகவும், இது தற்சமயம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை விட மிக துல்லியமாக இயங்கும் என கூறப்படுகிறது. 

    சாம்சங் உருவாக்கி வரும் தொழில்நுட்பம் அல்ட்ராசோனிக் பல்ஸ்-ஐ டிரான்ஸ்மிட் செய்யும். ஒவ்வொரு கைரேகையிலும் இருக்கும் மிக நுனுக்கமான தகவல்களை அதிவேகமாக சேகரித்து சென்சாருக்கு அனுப்பும். இதனால் கூடுதல் தகவல்களை டிரான்ஸ்மிட் செய்து கைரேகையை மிக நுனுக்கமாக பிரதிபலிக்கும். 

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2019 ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் குறித்த பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில், இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் மிகமுக்கிய அம்சம் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ட்விட்டரில் ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழக்கமான கைரேகை செனசார் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இம்முறை கிடைத்திருக்கும் தகவல்கள் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் வெளியாகியுள்ளதால், இது அதிக நம்பகத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கேலக்ஸி நோட் 8 உண்மையான புகைப்படங்கள், கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விவரங்களை ஐஸ் யுனிவர்ஸ் மூலம் சரியாக வெளியனது குறிப்பிடத்தக்கது.


    புகைப்படம்: நன்றி DBSDESIGNING

    புதிய ஸ்மார்ட்போனில் இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாததற்கான காரணங்கள் அறியப்படவில்லை. எனினும் முந்தைய கேலக்ஸி நோட் 8 மற்றும் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு சீராக வேலை செய்யவில்லை என்பதால் வழங்கப்படாமல் இருந்தது. இதே காரணத்திற்காகவே புதிய ஸ்மார்ட்போனில் இருந்தும் இந்த தொழில்நுட்பம் நீக்கப்பட்டிருக்கலாம்.

    விவோ போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழி்ல்நுட்பத்தை வழங்கும் போது சாம்சங் வழங்க ஏன் தாமதமாகிறது என்ற கேள்வி பெருமளவு எழுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விவோ தனது X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனினை குறைந்த அளவு தயாரிப்பது தான் கூறப்படுகிறது. 

    சாம்சங் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை வழங்குவது பெரிய திட்டமாகும். இதனால் தயாரிப்பு பணிகளில் விவோ போன்று சாம்சங் அதிரடி முடிவுகளை எடுக்க முடியாத சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது. 

    எதுவானாலும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் சாம்சங் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பது சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எஸ் சீரிஸ் 10-வது ஆண்டு விழாவை குறிக்கும் என்பதால், இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே வெளியான கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் கான்செப்ட் வீடியோவை கீழே காணலாம்..,


    ×