search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பெரிய பேட்டரி, சிறிய பெசல்களுடன் உருவாகும் கேலக்ஸி எஸ்10
    X

    பெரிய பேட்டரி, சிறிய பெசல்களுடன் உருவாகும் கேலக்ஸி எஸ்10

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. #GalaxyS10



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் புதுவித டிஸ்ப்ளே, வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி Mi மிக்ஸ் 3 போன்றே மெல்லிய பெசல்கள் மற்றும் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தென்கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 93.4 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.



    அந்த வகையில் இரண்டு பிரீமியம் மாடல்கள் வளைந்த டிஸ்ப்ளேக்களுடனும், ஒரு மாடலில் ஃபிளாட் ஸ்கிரீன் ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம். இத்துடன் உயர் ரக வெர்ஷனில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா செட்டப், டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா-வைடு லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் லீக் ஆன விவரங்களில் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் யு.ஐ. சார்ந்த ஆன்ட்ராய்டு பை இயங்குதளமும் 5ஜி சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பியான்ட் என பெயரிடப்பட்டு இருப்பதாகவும், நான்கு மாடல்களும் பியானஅட் 0, பியான்ட் 1, பியானஅட் 2 மற்றும் பியான்ட் 2 5ஜி என்ற குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

    கூடுதலாக கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி புதிய கேலக்ஸி எஸ்10 மாடல் பிளாக், கிரே, புளு, ரெட், கிரீன் மற்றும் எல்லோ என ஆறு வித நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×