search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்று வேரியன்ட்களில் உருவாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்10
    X

    மூன்று வேரியன்ட்களில் உருவாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்10

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மூன்று வேரியன்ட்களில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyS10
    சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இருக்கும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சார்ந்து பல்வேறு அம்சங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகிறது.

    இதுவரை சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், முன்னதாக இணையத்தில் லீக் ஆன தகவல்களில் புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் மொத்தம் நான்கு வேரியன்ட்களில் உருவாகி வருவாது தெரியவந்துள்ளது. எனினும், தற்சமயம் கிடைத்து இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மூன்று வேரியன்ட்களில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.

    சாம்மொபைல் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்10 மாடல்கள்- SM-G970F, SM-G975F, மற்றும் SM-G973F என்ற பெயரில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது. மூன்று வேரியன்ட்களும் தற்சமயம் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.



    பிரபல டிப்ஸ்டர்களில் ஒருவரான ஐஸ் யூனிவர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் SM-G970 மற்றும் SM-G973 மாடல்களில் 5.8 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் SM-G975 மாடலில் 6.44 இன்ச் பேனல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் SM-G970 மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா செட்டப் மற்றும் SM-G973 மாடலில் டூயல் கேமரா செட்டப், SM-G975 மாடலில் மூன்று கேமரா லென்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் ஒன்றும் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்கா மற்றும் தென் கொரிய சந்தைகளில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

    தென்கொரியாவில் இருந்து வெளியான தகவல்களின் படி ஐந்து கேமரா லென்ஸ் கொண்ட கேலக்ஸி எஸ்10 வேரியன்ட் ஸ்மார்ட்போனினை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மூன்று கேமரா பின்புறமும், இரண்டு கேமரா யூனிட் முன்பக்கமும் வழங்கப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.  #GalaxyS10
    Next Story
    ×