search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forgery"

    • சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மனைவி சங்கீதா (வயது 34). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரைவராக உள்ள வெங்கடேசன் மாதத்துக்கு 3 முறை மட்டும் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்  எனவே சங்கீதா குள்ளஞ்சாவடி அருகே தனது தாயார் ஊரான தோப்புக்கொள்ளை கிராமத்துக்கு கூலிவேலைக்கு தினமும் பஸ்சில் சென்றுவருவார். அப்போது சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. எனவே 2 பேரும் ஆட்டோவில் அடிக்கடி சென்று தனிமையில் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விவகாரம் சங்கீதாவின் கணவர் வெங்க டேசனுக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார்   அதன் பின்னர் சங்கீதா ஆட்டோ டிரைவர் சண்முகத்துடன் செல்வதை நிறுத்தி விட்டார். என்றாலும் ெசல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளனர். இந்த விசயமும் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. இதனை அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.இதனால் ஆத்திர மடைந்த சங்கீதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்ட மிட்டார். அதன்படி கணவன் வெங்கடேசன் வீட்டில் இருக்கும் நேரத்தில் சங்கீதா தனது கள்ளக்காதலன் சண்முகத்திடம் மதுவாங்கி வர கூறியுள்ளார். அதன்படி அவர் மதுவாங்கி வந்தார். அப்போது சண்முகம் மறைந்திருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து மதுவில் சங்கீதா கலந்தார். இந்த மதுவை தனது கணவர் வெங்கடேசனுக்கு கொடுத்தார். பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்              அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடே சனை தூக்கிகொண்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வெங்கடேசன் நிலைமை மோசமானது. எனவே உடனடியாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது  இந்த சம்பவம் குறித்து சங்கீதா மீது உறவினர்க ளுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து குள்ளஞ்சா வடி போலீஸ் நிலை யத்தில் உறவினர் கந்தன் புகார் செய்தார். போலீ சார் வழக்குபதிந்து சங்கீதா மற்றும் அவரது கள்ளக்கா தலன் சண்முகம் ஆகி யோரை போலீஸ் நிலை யத்துக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர் விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக் காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து ெகால்ல முயன்றதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தொட்டியாபாளையத்தில் 12 சென்ட் விவசாய நிலத்தை, அருகில் வசிக்கும் தேவி, அவரது மகன் சஞ்சித் ஆகிய இருவரும் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
    • இந்த நிலையில், அந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் மணிவேல் தரப்பில் தடை மனு அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்துள்ள லக்கபுரம் பஞ்சாயத்து தொட்டியா பாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 52), விவசாயி. இவருக்கு சொந்தமான 12 சென்ட் விவசாய நிலத்தை, அருகில் வசிக்கும் தேவி, அவரது மகன் சஞ்சித் ஆகிய இருவரும் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில், அந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் மணிவேல் தரப்பில் தடை மனு அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், புதுச்சத்திரம் போலீசிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அந்த நிலம் தொடர்பான தடை ஆணை மீது எவ்வித விசாரணை மேற்கொள்ளாமல் போலி ஆவணங்களை வைத்து அந்த இடத்தை திருநாவுக்கரசு என்பவருக்கு பத்திர பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மணிவேல், அவரது உறவினர்கள், அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் புது சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

    அப்போது பதிவாளர் அமுதா கூறுகையில், சம்பந்தப்பட்ட இடம் பத்திர பதிவு செய்யப்பட்ட நாளன்று நான் விடுப்பில் இருந்தேன். அன்றைய தினம் கூடுதல் பொறுப்பு வகித்த பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். போலி ஆவணங்களை வைத்து பத்திர பதிவு செய்து இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார்.

    இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். இதற்கு இடையே அந்த பத்திரபதிவு குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய சகோதரி சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் சங்கீதாவுக்கும் 1.1/2 வருடங்களாக நட்பாக பழகி வந்தனர். . இது பற்றி கணவனுக்கு தெரிய வந்தது. இதனால் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோடு கிராமத்தில் தங்கி வசித்து வந்தனர்.

    கடந்த 24- ந் தேதி அன்று சங்கீதாவை பார்க்க மணி சென்றுள்ளார். இது பற்றி கணவனுக்கு தெரிந்ததால் சங்கீதா நேற்று எலிபேஸ்ட் சாப்பிட்டார். பின்னர் அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் கோபமடைந்த சங்கரும் கல்லாநத்தம் சென்று கேட்டார். அப்போது மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ். காலனி, நேரு தெருவை சேர்ந்தவர் சிவராஜன் (49). இவர் மதுரை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார்.

    அந்த மனுவில், மதுரை ஒத்தக்கடை, அரசரடியை சேர்ந்த ஜெயச்சந்திரன், பைபாஸ் ரோடு அந்தோணிராஜ், அரசரடி ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் எனக்கு சொந்தமான இடத்துக்கு போலி ஆவணம் தயார் செய்து அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

    எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் போலி ஆவணம் தயார் செய்து பெண்ணிடம் நிலம் மோசடி செய்தனர்.
    • இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கர்நாடக மாநிலம் பெங்களூரு, சி.வி. ராமன் நகரை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி சாந்தி ஷீலா. இவர் மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகமலை புதுக்கோட்டை யில் எனது கணவர் ராஜசேகரன் மற்றும் சென்னை கொளத்துரை சேர்ந்த அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேருக்கும் 11 சென்ட் மனை மற்றும் வீடு உள்ளது.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணன், அவரது மகன் ஸ்ரீதர் ஆகியோர் திருப்பரங்குன்றம் பத்திர எழுத்தர் மாரியப்பன் என்பவர் மூலம், போலி ஆவணம் தயார் செய்துள்ளனர். அதற்கான விற்பனை உரிமை, திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த பழனிகுமார் என்பவருக்கு தரப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர்கள் மேலபொ ன்னகரம், சண்முகானந்தா புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் இளங்கோ பாக்யராஜ் என்பவருக்கு அந்த நிலத்தை விற்றுள்ளனர். இதற்கு நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி என்பவர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நிலத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை கொளத்தூர், காவேரி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தி, இவர்களது மகன் ஸ்ரீதர், திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் பழனிகுமார், நாகமலை புதுக்கோட்டை சிவபாண்டி, திருப்பரங்குன்றம் பத்திர எழுத்தர் மாரியப்பன், நாகமலை புதுக்கோட்டை ஆதிமூலம், இளங்கோ பாக்யராஜ் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
    • தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலை யார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அவருக்கும், அதே மில்லில் வேைல பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டி னுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்ைத அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.

    அவர் தான் பாண்டி யம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்ற தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தபபட்டது.

    பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆணும், பெண்ணும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருப்பாதிரிபுலியூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • வனிதா கட்டிடவேலைக்கு சென்று வந்தார். அப்போது கடலூர் அருகே உள்ள பில்லாலி தொட்டியை சேர்ந்த ராம தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் கூத்தப்பா க்கத்தில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை ஆணும், பெண்ணும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருப்பாதிரிபுலியூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்ட 2 பேரும் கள்ளக்கா தல்ஜோடி என்பது தெரியவந்தது. கடலூர் அருகே பல்லவ ராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். அவரது மனைவி வனிதா. இவர்க ளுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு சேகர் இறந்து போனார். எனவே வனிதா கட்டிடவேலைக்கு சென்று வந்தார். அப்போது கடலூர் அருகே உள்ள பில்லாலி தொட்டியை சேர்ந்த ராம தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராமதாஸ் பெயிண்டராக உள்ளார்.

    இந்த பழக்கம் நாளடை வில் இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமை யில் சந்தித்துவந்தனர். இவரது தாய் பாலூரில் உள்ள காய்கறி ஆராய்ச்சி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு வனிதாவின் தாய் இறந்தார். எனவே வாரிசு அடிப்படையில் வனிதா வுக்கு காய்கறி ஆராய்ச்சி பண்ணையில் வேலை கிடைத்தது. அங்கு வேலை பார்த்ததால் ராமதாசை அடிக்கடி சந்திக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்துள்ளனர். என்றாலும் வனிதா அடிக்கடி வெளியூறுக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். உடனே உறவினர்கள் அவரை தேடினர். அப்போது அவர் பாதிரிகுப்பத்தில் இருப்பது தெரியவந்தது.

    உடனே உறவினர்கள் கண்டித்ததால் சொந்த ஊரான பல்லவராய நத்தம் கிராமத்தில் தனது மகன்களுடன் வசித்து வந்தார். இதனிடையே காய்கறி ஆராய்ச்சி நிலையத்துக்கு வனிதா வேலைக்கு செல்லவில்லை. எனவே அங்குள்ள அதிகாரிகள் வனிதாவை கேள்விகேட்டனர். இதனால் மனமுடைந்த வனிதா வீட்டை விட்டு திடீரென வெளியேறினார். உடனே உறவினர்கள் தேடினர். அப்போது வனிதா கூத்தப்பாக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் வனிதாவும், ராமதாசும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக உறவின ர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராமதாஸ் மனைவி சென்னையில் உள்ளார். அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கெங்கவல்லி போலீசார் சோதனை செய்தனர்.
    • இதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி, இந்திராநகர் காலனியில் வசித்து வருபவர் விஜய்.

    இவரது வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கெங்கவல்லி போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் வீட்டின் பின்புறம் வழியாக விஜய், சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் வீட்டில் நாலாபுறமும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார், விஜயை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    அதேபோல் வீரகனூர் அருகே வேப்பம்பூண்டி ஏரிக்கரையில் சாக்குமுட்டையில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்த கணேசன் (52) என்பவரை, வீரகனூர் போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தனது மனைவி மல்லிகா தன்னை விட்டு பிரிந்து செல்ல முருகேசன்தான் காரணம் என எண்ணிய மாணிக்கம், முருகேசனை கண்டித்தார்.
    • இருப்பினும் முருகேசன் தொடர்ந்து மல்லிகாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பூலாவரி அக்ரஹாரம் சின்ன ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 48). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (45).

    கள்ளக்காதல்

    இந்தநிலையில் மல்லிகா, கணவரை பிரிந்து ராஜபாளையம் அரிமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி சோலைகவுண்டர்காடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் முருகேசன் (45) என்பவருக்கும் மல்லிகாவுக்கு இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனிடையே தனது மனைவி மல்லிகா தன்னை விட்டு பிரிந்து செல்ல முருகேசன்தான் காரணம் என எண்ணிய மாணிக்கம், முருகேசனை கண்டித்தார். இருப்பினும் முருகேசன் தொடர்ந்து மல்லிகாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகேசன் நைனாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாணிக்கம், முருகேசனை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் அரிவாளால் முருகேசனின் தலையில் வெட்டினார். இதை பார்த்த பொதுமக்கள் சண்டையை விலக்கிவிட்டு, முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ெஜயிலில் அடைப்பு

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். பின்னர் போலீசார், அவரை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • பள்ளி தோழியான ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
    • இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருேக உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45), எலக்ட்ரீசியன்.

    கள்ளக்காதல்

    இவருக்கு பூலவாரியை சேர்ந்த பள்ளி தோழியான ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அணுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கணவர் மற்றும் 2 மகன்களை தவிக்க விட்டு அந்த பெண் தனியாக வசித்து வந்தார். இதனால் அந்த பெண்ணின் கணவர் மாணிக்கம், முருகேசன் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

    இதையடுத்து நேற்று நைனாம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த முருகேசனை வழி மறித்த மாணிக்கம் அரிவாளால் வெட்டினார். அப்போது தலை மற்றும் கையில் ரத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து முருகேசன், மாணிக்கத்தை மீண்டும் வெ ட்ட முடியாமல் கட்டி பிடித்து கொண்டார்.

    இதனை பார்த்த அந்த பகுதியினர் முருகேசனை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொழிலாளி கைது

    இது குறித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். 

    • போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.36 லட்சம் மோசடி செய்த மனைவியுடன் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
    • இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இதுகுறித்து மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை பொன்மேனி பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் பாபு (வயது 46). இவர் ரெடிமேட் ஆடைகள் தொடர்புடைய வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடல்புதூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரெயிலார் காலனியை சேர்ந்த எபி ஸ்டான்லி , அவரது மனைவி சகிலா ஆகியோர் பாபுவுக்கு அறிமுகம் ஆனார்கள்.

    அப்போது ஒப்பந்த அடிப்படையில் பாபு ரெடிமேட் தொடர்பான உபபொருட்களை எபி ஸ்டான்லி-சகிலா கார்மெண்ட்ஸ் நிறுவத்திற்கு சப்ளை செய்தார். இதன் மூலம் பாபுவுக்கு அந்த தம்பதி ரூ.36 லட்சம் தர வேண்டி இருந்தது. அவர் பணத்தை பல முறை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தராமல் இழுத்தடித்தனர். இந்த நிலையில் எபி ஸ்டான்லி-சகிலா தம்பதியினர் பாபுவுக்கு பணம் கொடுத்தது போல் போலி ஆவணங்களை தயாரித்து ரூ.36 லட்சத்தை மோசடி செய்ய முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இதுகுறித்து மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது எபி ஸ்டான்லி-சகிலா ஆகியோர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ய முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    • செந்தில்குமார், அழகுமதி தனியாக இருப்பதை பயன்படுத்தி, பழக்கத்தை ஏற்படுத்தினார்.
    • இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள தெத்திகிரிபட்டி கச்சராயனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    விவாகரத்து

    இதில் 3-வது மகன் சின்னதம்பி. இவருடைய மனைவி அழகுமதி. இவர்கள் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். இவர்களது எதிர்வீட்டில் செந்தில்குமார் (வயது 40) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.காளிப்பட்டியில் தபால்காரராக உள்ளார்.

    இந்த நிலையில் சின்னதம்பிக்கும், அழகுமதிக்கும் இடைேய ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அழகுமதி விவாகரத்து பெற்றார். தற்போது அவர் தனியாக வசித்து வருகிறார்.

    கள்ளத்தொடர்பு

    இந்த நிலையில் செந்தில்குமார், அழகுமதி தனியாக இருப்பதை பயன்படுத்தி, பழக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் முதலில் அழகுமதி, அவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார். இதனால் செந்தில்குமார் தொடர்ந்து ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டு, அவரை தன்வசப்படுத்தினார். பின்னர் கள்ளத்தொடர்பாக மாறியது.

    இதை அறிந்த மாமனார் கிருஷ்ணன், பலமுறை கண்டித்தார். ஆனால் தபால்காரர் செந்தில்குமார் கேட்கவில்லை. அதுபோல் தனக்கு குழந்தை உள்ளது, அதனால் தன்னுடன் பழக வேண்டாம் என அழகுமதி தெரிவித்தும், அவர் கேட்கவில்லை.

    கத்திக்குத்து

    இதனிடையே சம்பவத்தன்று செந்தில்குமார், அழகுமதியிடம் பேசிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த கிருஷ்ணன், செந்தில்குமாரை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    இதில் குடல் வெளியே வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தபால்காரர் கைது

    இது குறித்த புகாரின்பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செந்தில்குமாரை தேடி வந்தனர். மேலும், மத்திய அரசு ஊழியர் என்பதால் அவர் பணியாற்றி வந்த எம்.காளிப்பட்டியில் உள்ள தபால் நிலையத்தில் இது பற்றி போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் தபால் நிலையத்துக்கு வந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தபால்காரர் செந்தில்குமார் இன்று போலீசாரிடம் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவடைந்ததும், அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு உட்படுத்தி, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ெஜயிலில் அடைக்க உள்ளனர்.

    ×