கள்ளக்காதல் கணவனுக்கு தெரிந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர்.
கள்ளக்காதல் கணவனுக்கு தெரிந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்
Published on

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய சகோதரி சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் சங்கீதாவுக்கும் 1.1/2 வருடங்களாக நட்பாக பழகி வந்தனர். . இது பற்றி கணவனுக்கு தெரிய வந்தது. இதனால் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோடு கிராமத்தில் தங்கி வசித்து வந்தனர்.

கடந்த 24- ந் தேதி அன்று சங்கீதாவை பார்க்க மணி சென்றுள்ளார். இது பற்றி கணவனுக்கு தெரிந்ததால் சங்கீதா நேற்று எலிபேஸ்ட் சாப்பிட்டார். பின்னர் அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் கோபமடைந்த சங்கரும் கல்லாநத்தம் சென்று கேட்டார். அப்போது மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com