search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forest fire"

    • இன்று பிரதோஷத்திற்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது.
    • பவுர்ணமி உள்ளிட்ட மீதமுள்ள 3 நாட்களுக்கான அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷ வழிபாட்டுக்காக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நாளிலேயே காட்டு தீ பரவியதால் அதன் பின்னர் மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று பிரதோஷ வழிபாட்டிற்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறையில் திரண்டனர். ஆனால் அனுமதி வழங்கப்படாததால் அடிவாரத்தில் காத்திருந்தனர்.

    இந்நிலையில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட 5 மற்றும் 6 பீட் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டு தீ பரவியது. தொடர்ந்து இரண்டு நாட்களாக எரிந்து வந்த தீ இன்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தபோதிலும் பக்தர்கள் பாதுகாப்பு காரணமாக பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்காக 4 நாட்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இன்று பிரதோஷத்திற்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது என்றும் பவுர்ணமி உள்ளிட்ட மீதமுள்ள 3 நாட்களுக்கான அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றுடன் அனுமதி முடிவடைந்ததால் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதனால் தணிப்பாறை அடிவார பகுதியிலேயே முடி காணிக்கை எடுத்தல் பொங்கல் வைத்தல் தேங்காய் பாலம் உடைத்தல் உள்ளிட்ட தங்களது நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தி விட்டு ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

    • உப்பாற்று ஓடையில் காய்ந்து கிடக்கும் உடை மரங்களும், புற்களும் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் முத்தையா உள்ளிட்ட 8 வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அத்திமரப்பட்டி வழியாக செல்லும் ஒப்பாற்று ஓடையில் தாமிரபரணி ஆற்றின் கடைசி குளமான கோரம்பள்ளம் குளத்தில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் உப்பாற்று ஓடையில் சென்று கடலில் சென்று சேரும். தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் இல்லாமல் சீமை உடை மரங்களும், புல் வகைகளும் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன.

    இந்நிலையில் அத்திமரப்பட்டி ஊரில் இருந்து காலாங்கரை கிராமத்திற்கு செல்லும் தாம்போதி பாலம் அருகே உப்பாற்று ஓடையில் காய்ந்து கிடக்கும் உடை மரங்களும், புற்களும் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த நேரத்தில் காற்றும் பலமாக வீசியதால் தீ மேலும் வேகமாக பரவி, கொளுந்து விட்டு எரிந்தன.

    கரைகளின் மறு பக்கங்களில் வாழைத் தோட்டங்கள் இருந்ததால் அவை சேதமாகும் நிலை இருந்தது. இதனையடுத்து பற்றி எரிந்த தீ குறித்து விவசாயிகள், அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக முத்தையாபுரம் போலீசாருக்கும், தெர்மல்நகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் முத்தையா உள்ளிட்ட 8 வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்தனர். வாகனம் விரைந்து செல்ல முடியாத நிலையில் சாலைகளில் ஏராளமான கிடங்குகள் இருந்தது. மேலும் தீயணைப்பு வாகனம் அந்த கரைகளில் செல்ல முடியாததால், தீயை கட்டுக்குள் கொண்டு வர மாற்று யோசனையில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில் நள்ளிரவில் தீயின் வேகம் குறைந்ததால் தீ கட்டுக்குள் கொண்டு வந்து நள்ளிரவில் தீயை அணைத்தனர். இந்த திடீர் காட்டு தீயினால் அப்பகுதியில் பெரும் புகை மூட்டத்துடன் சுமார் 10 மீட்டர் உயரத்துக்கு நெருப்பு எழுந்ததால் பரபரப்பு நிலவியது.

    • கருங்கல்கசம் பீட் ஆனை கல் பொடவு வனப்பகுதியில் நேற்று மாலை திடீர் என காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது.
    • இது குறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது. மழை பெய்யாததால் அருவி-நீரோடைகள் வறண்டு வருகின்றன. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது.

    இந்நிலையில் கருங்கல்கசம் பீட் ஆனை கல் பொடவு வனப்பகுதியில் நேற்று மாலை திடீர் என காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. மலையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மள, மளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து காட்டுத் தீ கட்டுக்குள் வந்தது.

    • வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
    • படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கஜகஸ்தான் நாட்டின் அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

    வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு, ராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் என பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 14 உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • மலைப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது.
    • மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆய்க்குடி செல்லும் சாலையில் மைனாபேரி மலைப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல், பறவைகள், பாம்புகள் என பல்வேறு இயற்கை உயிரினங்கள் மற்றும் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் என அதிக அளவில் இம்மலைப்பகுதி முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.

    இந்த மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் புகை மூட்டத்துடன் லேசாக தீப்பிடித்த நிலையில் தற்போது வீசி வரும் காற்றால் மலை பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வருகிறது.

    இது குறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறைக்கும் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மலை அடிவாரத்தில் வாழும் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

    இந்நிலையில் தற்போது மலைப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது. மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த பகுதி மக்கள் வனத்துறையினர் வராத நிலையில் தென்காசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைப்பகுதியில் பச்சை மரக்கிளைகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மலை அடிவாரத்தில் அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வீடுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் மான்கள், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

    எனவே இந்த மலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மலைப் பகுதியாக அறிவித்து மலையை சுற்றி வேலிகள் அமைக்க வேண்டும். உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றனர். மேலும் இன்று காலையிலும் தொடர்ந்து மலைப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் ஊத்துமலை ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது.
    • இரவு திடீரென காட்டுத் தீ பற்றியது. தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் ஊத்துமலை ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள கரட்டில் நேற்று இரவு திடீரென காட்டுத் தீ பற்றியது. தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது.

    இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீ விபத்திற்கு காரணம் என்ன? மலைப் பகுதியில் ஆடு , மாடு மேய்ப்பவர்கள் பீடி, சிகரெட் துண்டுகளை வீசி சென்றனரா? அல்லது சமூக விரோதிகள் செயலா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மலையில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகள் பற்றி எரிந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்தீ பரவலால் வனம் மற்றும் வன விலங்குகள் பாதிக்கும்.
    • மரங்களின் இலைகள் சேமித்து வைத்துள்ள கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து நோய்களை ஏற்படுத்தும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தில் வனத்தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடி க்கை குறித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் கூறியதாவது :- திருப்பூர் வனக்கோட்ட த்தில் திருப்பூர் நகரம், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட திருப்பூர் சார்ந்த நகர, ஊரகப் பகுதிகளில் வனப்பரப்பு இல்லை. அங்கு வனத்தீ ஏற்படவும் வாய்ப்பும் இல்லை. அதே நேரம் உடுமலை சார்ந்த பகுதி களில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கோடந்தூர், பொருப்பாறு உள்ளிட்ட இடங்களில் 17 செட்டில்மென்ட் உள்ளன.அங்கு வாழும் மக்களிடம் வனத் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.வனத்தீ பரவலால் வனம் மற்றும் வன விலங்குகள் பாதிக்கும். சுற்றுச்சூழல் மாசுபடும். சோலைக்கா டுகள், புல்வெளிகளில் உள்ள இயற்கை நீரூற்றுகள் அடைபடும்.தண்ணீர் வழிந்தோடி செல்வது தடைபடும். வனத்தீயால் மரங்களின் இலைகள் சேமித்து வைத்துள்ள கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து மக்களுக்கு பலவித நோய்களை ஏற்படுத்தும். புழு பூச்சிகள் உட்பட பல்வேறு உயிரினங்கள் பாதிக்கும்.பல்லுயிர் பெருக்கம் தடைபடும்.

    இது வனப்பகுதி சார்ந்த பகுதிகளுக்கு மட்டுமின்றி வனப்பரப்பு இல்லாத புல், புதர், செடி, கொடிகள் நிறைந்த பகுதிகளுக்கும் பொருந்தும். எனவே ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைக்கு தீ வைப்பது, புகைப்பிடித்து, தீயை, புல்வெளிகள் மீது வீசுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 11-ந் தேதி மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
    • பயர் டிரேசிங் முறையிலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தது

    கோவை,

    கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்தில் உள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே உள்ள மலையில் கடந்த 11-ந் தேதி மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரக ஊழியர்கள் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயை அணைக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

    இதன்மூலம் தீ கட்டுப்படுத்த நிலையில் 2 மண்டலங்களில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி90 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.

    நேற்று 7-வது நாளாக தீயை அணைக்கும் பணி நடந்தது. இப்பணியில்வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உள்பட சுமார் 200 பேர் ஈடுபட்டனர்.

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், புற்கள் அதிகளவில் இருந்ததாலும் காட்டு தீ நேற்று காருண்யா பின்புறம் உள்ள மலைப்பகுதி வரை பரவியது. இதையடுத்து, தீ தடுப்பு கோடுகள் அமைத்தும், பயர் டிரேசிங் முறையிலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தது.தீயை அணைக்கும் பணியில் கோவை வனத்துறையினர் மட்டுமின்றி நீலகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர்.

    7 நாட்களாக வனத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையால் காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    • தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் காட்டு தீயானது அருகே உள்ள வனப்பகுதிகளில் பரவியது.
    • தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேலும் அடர்ந்த வனப்பகுதியான இங்கு அரிய வகை மரங்கள் உள்பட செடி, கொடிகள் நிறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் 107, 109 டிகிரி என வெயில் பதிவாகி வருகிறது.

    இதனால் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் வறட்சி நிலகிறது. மேலும் செடி, கொடி, மரங்கள் காய்ந்து ஒன்றோடு ஒன்று உரசி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கமும் காற்றின் மாறுபாடும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பத்து ராயன் கிரிமலைப்பகுதியில் திடீரென தீ விபத்து தீப்பற்றி எரிந்தது. காட்டுத்தீயானது தொடர்ந்து மளமளவென பரவியதால் சுமார் 20 ஏக்கருக்கு மேல் காட்டு மரங்கள் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரகர் பழனிச்சாமி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவுடன் சென்று கம்பத்து ராயன்கிரி மலையில் ஏற்பட்ட தீயை அனைத்தனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் காட்டு தீயானது அருகே உள்ள வனப்பகுதிகளில் பரவியது. இதையடுத்து தீ மெல்ல மெல்ல பரவி சத்தியமங்கலம் புளியங்கொம்பை மேல் பகுதியிலும் பெரியகுளம் மேல் உள்ள மலைப்பகுதியிலும் நேற்று காட்டுத்தீ பரவியது.

    இதில் பல விதமான விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகியது. காட்டு தீ பரவுவதால் அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் சத்தம் போட்டப்படியே அங்கும், இங்கும் திரிகிறது. வன விலங்குகளின் சத்தம் அதிகமாக உள்ளது என அடிவாரத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதிகளில் காட்டு தீ பரவி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
    • மாவட்ட நிர்வாகம் மூலம் விமான படைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதேகவுண்டன் புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.

    அங்குள்ள காய்ந்த புற்கள், சருகுகளில் தீ பற்றி எரிந்து வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இருந்த போதிலும் தீ வனம் முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    இன்று 5-வது நாளாக வனத்தில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

    தீயை கட்டுப்படுத்தும் பணியில் உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த வன பணியாளர்கள், மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனசரக பணியாளர்கள் என மொத்தம் 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அவர்களில் சிலருக்கு கண், கால்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கு உடனடியாக சிகிச்சையும் எடுத்து கொண்டு, தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே 5 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினர் விமானப்படையின் உதவியை கோரியுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது:-

    தரைப்பகுதியில் உள்ள புற்கள், காய்ந்த சருகுகளில் தீ பரவி வருகிறது. வனத்தில் உள்ள சில மூங்கில் மரங்கள் தீயில் எரிந்துள்ளன.

    குறிப்பிட்ட இடங்களில் தீ தடுப்பு கோடுகளை அமைத்து, எதிர் தீ வைத்து தீ மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

    காட்டுத்தீ காரணமாக வனவிலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

    தற்போது ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து தீயை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் விமான படைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    ஹெலிகாப்டர் வந்தால் பக்கெட் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல வசதியாக அருகிலேயே ஒரு குட்டையும், நீச்சல் குளமும் உள்ளது. நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளோம்.

    அனுமதி கிடைத்தால் இன்று அல்லது நாளைக்குள் தீயை அணைக்கும் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படலாம். வன எல்லைப்பகுதியை தாண்டி தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.
    • கோடை காலங்களில் மலையில் ஏறும் சமூக விரோதிகள் அடிக்கடி இதுபோல் மலைகளுக்கு தீ வைப்பதால் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமாகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.

    இந்த மலையில் யானை, மான், சிறுத்தை, மயில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மரங்களின் இலைகள் உதிர்ந்தும், புற்கள் காய்ந்தும் சருகாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை கைலாசகிரி மலை, பரத்வாஜ் தீர்த்தம், முக்கந்தி கோவில் அருகே சமூக விரோதிகள் மது குடித்துள்ளனர். பின்னர் மழையில் இருந்த சருகுகளுக்கு தீ வைத்து உள்ளனர்.

    தீ மளமளவென மலை முழுவதும் பரவியது. இதனைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தனர். இரவு முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் பல ஏக்கரில் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் கருகி நாசமானது.

    தீயணைப்பு துறையினர் விடிய விடிய போராடி தீயை கட்டுப்படுத்தினர். கோடை காலங்களில் மலையில் ஏறும் சமூக விரோதிகள் அடிக்கடி இதுபோல் மலைகளுக்கு தீ வைப்பதால் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமாகிறது.

    எனவே சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஏணிக்கல் வனப்பகுதியில் சாலைக்கு மேல் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
    • வனக்காப்பாளர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் அங்கு சென்று 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெரும்பாறை;

    கொடைக்கானல் கீழ்மலை பெரும்பாறை, தடியன்குடிசை, கொங்கப்பட்டி, மஞ்சள்ப ரப்பு, புல்லாவெளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள புல்வெளிகள் கருகி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. கோடைக்காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி அதனை வனத்துறையினர் போராடி அணைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பெரும்பாறை, சித்தரேவு மலைப்பாதையில் உள்ள ஏணிக்கல் வனப்பகுதியில் சாலைக்கு மேல் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனவர் சுரேஸ் தலைமையில் வனக்காப்பாளர் கணேசன் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் அங்கு சென்று 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இருந்தபோதும் வனப்பகுதியில் இருந்த அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது. மேலும் காட்டெருமை, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டது. அவை உணவு மற்றும் குடிநீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.

    ×