search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காட்டுத்தீ பரவுவதால் தடை: சதுரகிரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் மலையேற முடியாததால் ஏமாற்றம்
    X

    மலையடிவாரத்தில் காத்திருக்கும் பக்தர்கள்.

    காட்டுத்தீ பரவுவதால் தடை: சதுரகிரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் மலையேற முடியாததால் ஏமாற்றம்

    • இன்று பிரதோஷத்திற்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது.
    • பவுர்ணமி உள்ளிட்ட மீதமுள்ள 3 நாட்களுக்கான அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷ வழிபாட்டுக்காக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நாளிலேயே காட்டு தீ பரவியதால் அதன் பின்னர் மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று பிரதோஷ வழிபாட்டிற்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறையில் திரண்டனர். ஆனால் அனுமதி வழங்கப்படாததால் அடிவாரத்தில் காத்திருந்தனர்.

    இந்நிலையில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட 5 மற்றும் 6 பீட் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டு தீ பரவியது. தொடர்ந்து இரண்டு நாட்களாக எரிந்து வந்த தீ இன்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தபோதிலும் பக்தர்கள் பாதுகாப்பு காரணமாக பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்காக 4 நாட்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இன்று பிரதோஷத்திற்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது என்றும் பவுர்ணமி உள்ளிட்ட மீதமுள்ள 3 நாட்களுக்கான அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றுடன் அனுமதி முடிவடைந்ததால் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதனால் தணிப்பாறை அடிவார பகுதியிலேயே முடி காணிக்கை எடுத்தல் பொங்கல் வைத்தல் தேங்காய் பாலம் உடைத்தல் உள்ளிட்ட தங்களது நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தி விட்டு ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

    Next Story
    ×