search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kailasagiri Hills"

    • காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.
    • கோடை காலங்களில் மலையில் ஏறும் சமூக விரோதிகள் அடிக்கடி இதுபோல் மலைகளுக்கு தீ வைப்பதால் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமாகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.

    இந்த மலையில் யானை, மான், சிறுத்தை, மயில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மரங்களின் இலைகள் உதிர்ந்தும், புற்கள் காய்ந்தும் சருகாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை கைலாசகிரி மலை, பரத்வாஜ் தீர்த்தம், முக்கந்தி கோவில் அருகே சமூக விரோதிகள் மது குடித்துள்ளனர். பின்னர் மழையில் இருந்த சருகுகளுக்கு தீ வைத்து உள்ளனர்.

    தீ மளமளவென மலை முழுவதும் பரவியது. இதனைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தனர். இரவு முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் பல ஏக்கரில் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் கருகி நாசமானது.

    தீயணைப்பு துறையினர் விடிய விடிய போராடி தீயை கட்டுப்படுத்தினர். கோடை காலங்களில் மலையில் ஏறும் சமூக விரோதிகள் அடிக்கடி இதுபோல் மலைகளுக்கு தீ வைப்பதால் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமாகிறது.

    எனவே சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×