search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flush"

    • சேலம் மாவட்டம் எடப்பாடி ஆசிரியர் காலனியில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நகையை பறித்து சென்றனர்.
    • 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நாகம்மாள் கழுத்தில் அணிதிருந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியை நாகம்மாள் (வயது 64). நேற்று இவர் தனது மகள் வசந்தம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் தாவாந்தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் படித்து வரும் தனது பேரனுக்கு மதிய உணவு கொடுக்க சென்று கொண்டிருந்தார்.

    நகை பறிப்பு

    அப்போது தாவாந் தெரு காளியம்மன் கோவில் முன்பு உள்ள வேகதடையில் மெதுவாக செல்லும் பொழுது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நாகம்மாள் கழுத்தில் அணிதிருந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.

    இதனால் நாகம்மாளின் மகள் வசந்தம்மாள் கூச்சலிட்டவாறு அந்த வாலிபரை விரட்டிச் சென்றார். ஆனால் எடப்பாடி பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார்.

    சி.சி.டி.வி.யில் பதிவான கொள்ளையன் உருவம்

    இது குறித்து நாகம்மாள் எடப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனியார் மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் நீண்ட நேரமாக காத்திருந்த வாலிபர் ஒருவர் நாகம்மாள் சென்ற ஸ்கூட்டரை பார்த்து பின் தொடர்ந்து சென்று, நகையை பறித்த காட்சி பதிவாகி இருந்தது.

    எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்த சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    • நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
    • வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் சென்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). இவர் பெங்களூரில் ரிக் வண்டியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நவீனா (26). இவர் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நவீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர். அதேபோல் போதுப்பட்டி சரவணன் நகரை சேர்ந்தவர் அருண்குமார். இவர் முட்டை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (32). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் சென்றனர்.

    கண்காணிப்பு கேமரா

    இந்த தொடர் திருட்டு குறித்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ.க்கள் முருகன், சங்கீதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அதில் பதிவாகியுள்ள உருவங்களை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஓரீரு நாளில் கொள்ளை யர்கள் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 4-வது வார்டு எல்லப்பா தெரு பகுதியில் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பட்ட பகலில் பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 4-வது வார்டு எல்லப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவரது மனைவி வளர்மதி (வயது 54). இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று பகல் நேரத்தில் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வளர்மதியிடம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியை கேட்டு சென்றார். பின்னர் அந்த நபர் மீண்டும் திரும்பி வந்தார். அப்போது வளர்மதி செல்போன் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து அந்த நபர், வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ராசி புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்ட பகலில் பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவரிடம் செல்போனை பறித்தனர்.
    • தாதகாப்பட்டி உழவர் சந்தை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    சேலம்:

    திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ஹரிஹரன் (வயது 23). இவர் சேலம் தாதகாப்பட்டி சௌந்தர் நகர் பகுதியில் தங்கி தாதகாப்பட்டி கேட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.ஹரிஹரன் நேற்று இரவு ஓட்டலில் வேலை முடிந்து தனது அறைக்கு செல்ல தாதகாப்பட்டி உழவர் சந்தை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஹரிஹரன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

    • சேலத்தில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
    • பஸ்சில் வரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், நகையை பறித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் உடல் நல ஆலோசராக பணியாற்றி வருபவர் தமிழரசி (வயது 45). இவர் இன்று காலை மேட்டூரில் இருந்து ஒரு பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறிய அவர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அவர் தான் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமானது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதனால் கதறியஅவர் சம்ப வம் குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல 60 வயது மூதாட்டி ராணி சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் பஸ்சில் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    பஸ்சில் வரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், நகையை பறித்துள்ளனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வ தற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறினார்.
    • இதையடுத்து மூதாட்டி பாப்பாயி, தண்ணீர் மற்றும் வாழை இலை எடுத்து வந்து கொடுத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகில் உள்ள புலவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.இவரது மனைவி பாப்பாயி (வயது 65). ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.இவரது மகன் ரவி நாமக்கல்லில் வசித்து வருவதால் பாப்பாயி மட்டும் புலவர்பாளையம் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பாப்பாயி வீட்டிற்கு காரில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு அவரிடம் தண்ணீர் கொடுக்கும்படி கேட்டுள்ளார். மேலும் தான், அருகில் உள்ள கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வ தற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறினார்.

    இதையடுத்து மூதாட்டி பாப்பாயி, தண்ணீர் மற்றும் வாழை இலை எடுத்து வந்து கொடுத்தார். இதனை தொடர்ந்து மூதாட்டியின் வீட்டில் உள்ளவர்கள் நலமாக இருக்க வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவிக்கவே கட்டாயப்படுத்தி அந்த பெண் பூஜை நடத்தினார்.

    அப்போது வீட்டில் உள்ள தங்க நகைகளை பூஜையில் வைக்கவேண்டும் என கூறியதை அடுத்து மூதாட்டி தனது 4 பவுன் தங்க சங்கிலியை பூஜையில் வைத்துள்ளார். பூஜை முடிந்ததும் பூஜையில் வைத்த எலுமிச்சம்பழங்களை வீட்டின் 4 மூலைகளிலும் போட்டுவிட்டு வருமாறு பாப்பாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து பாப்பாயி எலுமிச்சம் பழத்தை வீட்டின் 4 மூலைகளிலும் போடுவதற்காக வெளியே சென்றார். இதை பயன்படுத்தி பூைஜயில் வைத்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு அந்த பெண் காரில் ஏறி தப்பி சென்றார். இதனை பார்த்த பாப்பாயி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அதற்குள் அந்த மர்ம பெண் காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் பாப்பாயி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் மூதாட்டியிடம் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் இருந்து நூதன முறையில் தங்க நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரிசி வியாபாரி மனைவியிடம் 7 பவுன் செயின் பறிப்பு
    • கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், அரிசி வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 50). இவர் இரவு திண்டுக்கல் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது.

    அதில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது தொடர்பாக விஜயலட்சுமி, கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஏற்காட்டில் தங்க சங்கிலி வாங்கிய மர்ம நபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
    • இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அம்மாள் இதுகுறித்து ஏற்காடு போலீசில் புகார் செய்தார்.

    ஏற்காடு:

    ஏற்காடு டவுன் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் மூதாட்டி லட்சுமி அம்மாள் . இவரது கடைக்கு நேற்று சிக்கன் வாங்க மர்ம நபர் வந்தார். அப்போது அவர் லட்சுமியிடம் நீங்கள் அணிந்திருக்கும் தங்க நகை மாடல் நன்றாக உள்ளது. பக்கத்து கடையில் காய் வாங்கி கொண்டிருக்கும் என் மனைவியிடம் இதை காண்பித்து தருகிறேன் என கூறியுள்ளார்.

    இதை நம்பிய லட்சுமி தங்க நகையை கழட்டி கொடுத்தார். தங்க சங்கிலி வாங்கி மர்ம நபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அம்மாள் இதுகுறித்து ஏற்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் பக்கத்து கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடி வருகிறார்.

    • வாலிபரை தாக்கி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
    • இது குறித்து தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி தெருவை சேர்ந்த முருகேஷ் மகன் ராஜேஷ் (வயது27). இவர் திருப்பத்தூர் சாலையில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிள் சென்று செல்வது வழக்கம். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது செவரக்கோட்டையார் வீதியில் 30 வயது வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்து ராஜேஷ் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஷ் எழுந்தபோது மீண்டும் இவர் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் கீழே விழுந்தார்.

    அப்போது அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் திருடி சென்று விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேசை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சமீப காலமாக வெள்ளையன் ஊரணி பகுதியில் மர்ம நபர்கள் முதியவர்களிடம் நகை பறிப்பு ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது நடந்த வழிப்பறி சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • சேலம், வீராணம் அருகே இன்று அதிகாலை உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி , தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    • இதில் சின்னதாயிக்கு , கழுத்தில் காயம் ஏற்பட்டது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் வீராணம் அருகே உள்ள சின்னமனூர் அடுத்த வீமனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைகவுண்டர்.இவரது மனைவி சின்னத்தாயி (வயது 95) இந்த தம்பதிகளுக்கு 7 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.மேலும் 12 பேரன்களும் 9 பேத்திகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் குழந்தை கவுண்டர் ஏற்கனவே இறந்துவிட்டார். சின்னத்தாயி காற்றுக்காக நேற்று இரவு கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டு இருந்தார்.இன்று அதிகாலை உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சின்னத்தாயின் காலைப் பிடித்துக் கொண்டு வாயை பொத்தி கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி , தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதில் சின்னதாயிக்கு , கழுத்தில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்த தகவலின்பேரில் வீராணம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சின்னத்தாய்ன் பேரன்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம்
    • இதுகுறித்து மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேச்சேரி ஒர்க்‌ஷாப் காலனியை சேர்ந்தவர் மோகனபிரியா (வயது 39). இவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ரவி (42).

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மோகனபிரியா, அவரது கணவர் ரவி ஆகியோர் வீட்டில தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பின்புற கதவு திறந்து இருந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து மோகனபிரியா அணிந்திருந்த 2 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.

    உடனே விழித்து ெகாண்ட அவர் திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். உடனே கணவர் ரவியும் எழுந்து வந்தபோது மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து ரவி மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். வீட்டின் வெளியே தாலி கிடந்தது. அதை மீட்டு போலீசார் மோகனபிரியாவிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று அமரத்தானூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பூஜை அறையில் இருந்த ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர். அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள ராஜா என்பவரின் வீட்டிலும் கொள்ளைடிக்க முயன்றபோது சத்தம் கேட்டு ராஜா வெளியே வந்தபோது மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டை பையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் பணத்தையும் பறித்துவிட்டு தப்பி சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை மாவட்டம் வி.கே.புரம் தாமிரபரணி நகரை சேர்ந்தவர் சைமன் ராபர்ட்(வயது 53). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது பாளை கிருஷ்ணாபுரத்தில் இருந்து செய்துங்கநல்லூர் செல்லும் காட்டுப்பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் சைமன் ராபர்ட்டை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்தனர். மேலும் அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் பணத்தையும் பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து சைமன் ராபர்ட் சிவந்திபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    ×