search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flipkart"

    • ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பண்டிகை காலத்தை ஒட்டி மொபைல் போன் மாடல்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (நவம்பர் 2) துவங்க இருக்கும் பிக் தீபாவளி சேல்-இல் ஐபோன் மாடல்களுக்கு விசேஷ சலுகைகளை வழங்குகிறது.

    அதன்படி ஐபோன் 14 மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் வங்கி சலுகைகள் மற்றும் இதர தள்ளுபடி உள்ளிட்டவை அடங்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஃபார் அவுட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் ஐபோன் 14 பேஸ் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    ப்ளிப்கார்ட் சலுகை விவரம்:

    தீபாவளி விற்பனையை ஒட்டி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்த டீசர் வலைபக்கத்தில் ஐபோன் 14 (128 ஜி.பி.) மாடல் ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ஐபோன் 14 குறைந்தபட்ச சலுகை விலை ரூ. 54 ஆயிரத்து 999 ஆகும். இத்துடன் வங்கி சலுகையாக ரூ. 4 ஆயிரமும், எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவற்றை சேர்த்தால், ஐபோன் 14 (128 ஜி.பி.) மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 விலையிலேயே கிடைக்கும்.

    மாத தவணையில் வாங்க விரும்பும் பயனர்கள் முதலில் ரூ. 19 ஆயிரத்து 999 மட்டும் செலுத்தி, மீதமுள்ள ரூ. 35 ஆயிரத்தை வட்டியில்லா மாத தவணை முறையில் திருப்பி செலுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு தள்ளுபடி விலை நவம்பர் 2-ம் தேதி அமலுக்கு வருகிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • அதிகபட்சம் 18 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பல்வேறு பொருட்களுக்கும் அதிக சலுகைகள் வழங்கிய "பிக் பில்லியன் டேஸ்" சிறப்பு விற்பனை சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், "பிக் தசரா சேல்" என்ற பெயரில் மற்றொரு சிறப்பு விற்பனையை ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது. இதிலும் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    அதன்படி ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. தற்போது ரூ. 56 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், தற்போதைய விற்பனையில் ஐபோன் 14 மாடலுக்கு அதிகபட்சம் 18 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஐபோன் 14 மாடலின் முந்தைய விலையை விட ரூ. 12 ஆயிரத்து 901 வரை குறைவு ஆகும்.

     

    தள்ளுபடி மட்டுமின்றி கோடக் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய சாதனத்தை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 31 ஆயிரத்து 150 வரை தள்ளுபடி பெற முடியும். ஐபோன் 14 மாடலின் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 66 ஆயிரத்து 999 மற்றும் 86 ஆயிரத்து 999 விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இவற்றின் முந்தைய விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 99 ஆயிரத்து 900 என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஐபோன் 14 மாடல் பிராடக்ட் ரெட், புளூ, மிட்நைட், பர்பில் மற்றும் ஸ்டார்லைட் என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    • பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • கூகுள் பிக்சல் 7a மாடல் மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி விரைவில் துவங்க இருக்கும் பிக் பில்லியன் டே சேல்-இல் பிக்சல் 7a புதிய நிற வேரியண்ட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்போது கூகுள் பிக்சல் 7a மாடல் சீ, சார்கோல் மற்றும் ஸ்னோ என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இவற்றுடன் கோரல் நிற வேரியண்ட் விரைவில் இணைய இருக்கிறது. கோரல் நிற வேரியண்ட் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிற வேரியண்டிற்கான டீசர் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

     

    இந்திய சந்தையில் கூகுள் பிக்சல் 7a மாடல் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்-இல் இதன் விலை சற்று குறைக்கப்படவோ அல்லது அதிக சலுகைகள் வழங்கப்படவோ வாய்ப்புகள் உண்டு.

    அக்டோபர் 5-ம் தேதி கூகுள் பிக்சல் மாடல்களுக்கான சலுகை விவரங்களை ப்ளிப்கார்ட் அறிவிக்க இருக்கிறது. இதுதவிர கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 4-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு அக்டோபர் 4-ம் தேதி துவங்குகிறது.

    • சேவை மையத்தை மீண்டும் அணுகிய போது அங்கிருந்த ஊழியர்கள், எங்களிடம் ரிட்டர்ன் பாலிசி இல்லை என கைவிரித்துள்ளனர்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பிளிப்கார்ட்டின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    சமீபகாலமாக பெரும்பாலான பொருட்களை ஆன்-லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவரான அதர்வா கண்டேல்வால் என்பவர் பிளிப்கார்ட்டில் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள லேப்-டாப் ஆர்டர் செய்திருந்தார். கடந்த 13-ந் தேதி டெலிவரி செய்யப்பட வேண்டிய அந்த ஆர்டர் 15-ந் தேதி வந்துள்ளது. உடனே மாணவர் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சேவை மையத்தை அணுகிய போது அவரது செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. எண் வரும் என கூறி உள்ளனர். அதன்படி அந்த எண்ணை கொடுத்து டெலிவரி பெற்றுக் கொண்ட மாணவர் அதர்வா தனது ஆர்டரை திறந்து பார்த்த போது அதில் லேப்-டாப்புக்கு பதில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கர்கள் மட்டும் இருந்துள்ளது.

    இதுதொடர்பாக அவர் சேவை மையத்தை மீண்டும் அணுகிய போது அங்கிருந்த ஊழியர்கள், எங்களிடம் ரிட்டர்ன் பாலிசி இல்லை என கைவிரித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த மாணவர் அதர்வா தனது வலைதள பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்தார். அதில், என்னிடத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் என எல்லா ஆதாரங்களும் இருப்பதாக கூறி இருந்தார். இதை பார்த்த பயனர்கள் பிளிப்கார்ட்டின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
    • கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி மாடல் நான்கு விதமான நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை ரூ. 13 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட கிரிடெிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி பெறலாம்.

    கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் ஃபார் கேலக்ஸி பிராசஸர் கொண்டிருக்கிறது. சாம்சங் இந்தியா வலைதளம் மற்றும் அமேசான் வலைதளத்தில் புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட பேஸ் வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 990 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு எவ்வித எக்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி அம்சங்கள்:

    6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே

    120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ GPU

    அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

    அதிகபட்சம் 1 டிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1

    IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

    200MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    10MP டெலிபோட்டோ லென்ஸ்

    10MP டெலிபோட்டோ லென்ஸ்

    12MP செல்ஃபி கேமரா

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    குறிப்பு: கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு எவ்வளவு காலம் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. அந்த வகையில், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். 

    • சந்தையில் நத்திங் போன் 2 மாடலின் விற்பனை ஜூலை 21-ம் தேதி துவங்க இருக்கிறது.
    • புதிய நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.

    லண்டனை சேர்ந்த நுகர்வோர் மின்சாதன பிரான்டு, நத்திங் தனது நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக "Notify Me" கோரிக்கைகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்பதிவு விற்பனையில் நத்திங் போன் 2 மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    இந்தியாவில் முதல் முறையாக நத்திங் போன் 2 டிராப்ஸ் நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 500-க்கும் அதிக வாடிக்கையாளர்கள் பொருமையுடன் வரிசையில் காத்திருந்து நத்திங் போன் 2 மாடலை அனுபவித்தனர். பலர் இந்த போனினை வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.

     

    இந்திய சந்தையில் நத்திங் போன் 2 மாடலின் விற்பனை வெள்ளி கிழமை, ஜூலை 21-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய நத்திங் போன் 2 மாடலின் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

    நத்திங் போன் 2 அம்சங்கள்:

    6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ OLED 1-120 Hz LTPO ஸ்கிரீன்

    அதிகபட்சம் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

    அதிகபட்சம் 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    50MP 114 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 4cm மேக்ரோ ஆப்ஷன்

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

    4700 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே உள்ளது.
    • ஐபோன் 14 பிளஸ் மாடல் மூன்று வித மெமரி மாடல் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சிறப்பு விற்பனையில் அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன், ஏ15 பயோனிக் சிப்செட், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி, டூயல் 12MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    இந்திய சந்தையில் ஐபோன் 14 பிளஸ் மாடலின் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 99 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    தற்போதைய ப்ளிப்கார்ட் சலுகையின் கீழ் ஐபோன் 14 பிளஸ் பேஸ் மாடலின் விலை ரூ. 73 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 83 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

    தள்ளுபடி மட்டுமின்றி ஐபோன் 14 பிளஸ் மாடலை வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் பெற முடியும். இத்துடன் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், HDR, ட்ரூ டோன், ஏ15 பயோனிக் சிப்செட் 5-கோர் GPU, 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லைட்னிங் போர்ட் உள்ளது.

    • ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங் டேஸ் சலுகை விரைவில் துவங்க இருக்கிறது. ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இதில் ஸ்மார்ட்போன், மின்சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    நாளை (ஜூலை 15) துவங்க இருக்கும் ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமேசான் பிரைம் டே சேல் நடைபெற இருக்கும் அதே வேளையில், ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் நடைபெறுகிறது. அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15 மற்றும் ஜூலை 16-ம் தேதி நடைபெற இருக்கிறது.

     

    சிறப்பு விற்பனையின் போது தள்ளுபடி மட்டுமின்றி ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் உடனடி தள்ளுபடி, ப்ளிப்கார்ட் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அழகுசாதன பொருட்கள், மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் ஒரிஜினல்ஸ்-க்கு 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வழக்கமான சலுகைகள் தவிர, நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணிக்கு ஸ்பிலாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு பொருட்களை வாங்கும் போது பத்து சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்ப்படுகிறது.

    • நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • நத்திங் போன் 2 மாடல் ஒன்பிளஸ் 11R மற்றும் பிக்சல் 7a மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.

    நத்திங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக நத்திங் போன் 2 அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மூலம் நத்திங் நிறுவனம் அமெரிக்க சந்தையில் களமிறங்குகிறது. நத்திங் போன் 2 சர்வதேச வெளியீட்டின் போதே இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மாடலின் அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் சில விவரங்களை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    எதிர்பார்க்கப்படும் விலை:

    நத்திங் போன் 2 மாடல் ஒன்பிளஸ் 11R மற்றும் பிக்சல் 7a மாடல்களுக்கு போட்டியாக அமையும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி புதிய நத்திங் போன் 2 துவக்க விலை ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். கடந்த ஆண்டு மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தப்பட்ட நத்திங் போன் 1 விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    முந்தைய நத்தங் போன் 1 மாடலுடன் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை. இதே போன்றே புதிய நத்தங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்றே தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய நத்திங் ஒஎஸ் பயனர்களுக்கு அதிவேக அனுபவம் மற்றும் புதிய அம்சங்களை வழங்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • ஐபோன் 13 மாடலுக்கு எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் புதிய ஐபோன் 13 மாடலை ரூ. 58 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 58 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 901 குறைந்துள்ளது.

    இத்துடன் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் (அதிகபட்சம் ரூ. 750) வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ஐபோன் 13 மாடலை மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும். இதில் எக்சேன்ஜ் தொகை, பயனர்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் நிலையை பொருத்து வேறுப்படும்.

    ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு குறுகிய கால சலுகையா அல்லது நீண்ட காலத்திற்கு வழங்கப்படுமா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இது ஐபோன் வாங்க சரியான காலம் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 12MP+12MP பிரைமரி கேமரா, 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி, வைபை 6, ப்ளூடூத் 5 போன்ற வசதிகள் உள்ளன.

    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதிதாக எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S வாங்க இது சரியான தருணம் ஆகும்.


    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டது. சமீபத்திய விலை குறைப்பின் படி எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S விலை தற்போது ரூ. 31 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகள் மற்றும் கூடுதல் தள்ளுபடிகளை சேர்க்கும் போது எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் S விலை மேலும் குறைய வாய்ப்புகள் உண்டு.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடல் தற்போது ரூ. 31 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உண்மை விலை ரூ. 34 ஆயிரத்து 990 என்ற நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     எக்ஸ்பாக்ஸ்

    இதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சம் ரூ. 1,500 வரை கூடுதல் தள்ளுபடி, 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி மற்றும் 5 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடலில் மெல்லிய பாடி, வெலாசிட்டி ஆர்கிடெக்ச்சர் உள்ளது. இதில் 512GB NVMe SSD வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடலுடன் எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் கண்ட்ரோலர் ஒன்றும் வழங்கப்படுகிறது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.


    இந்தியாவில் ஐபோன் 12 மினி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம். அந்த வகையில் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை.

     ஐபோன் 12 மினி
     
    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 12 மினி 64GB விலை ரூ. 49 ஆயிரத்து 999 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மினி மாடலுக்கு வங்கி சலுகையாக ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர ஐபோன் 12 மினி மாடலுக்கு வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை.

    ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் புதிய ஐபோன் 12 மினி 64GB மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 12 மினி 64GB மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 12 மினி 256GB மாடல் ரூ. 64 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது பத்து சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். 
    ×