search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வரும் நத்திங் போன் 2 - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வரும் நத்திங் போன் 2 - விலை எவ்வளவு தெரியுமா?

    • நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • நத்திங் போன் 2 மாடல் ஒன்பிளஸ் 11R மற்றும் பிக்சல் 7a மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.

    நத்திங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக நத்திங் போன் 2 அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மூலம் நத்திங் நிறுவனம் அமெரிக்க சந்தையில் களமிறங்குகிறது. நத்திங் போன் 2 சர்வதேச வெளியீட்டின் போதே இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மாடலின் அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் சில விவரங்களை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    எதிர்பார்க்கப்படும் விலை:

    நத்திங் போன் 2 மாடல் ஒன்பிளஸ் 11R மற்றும் பிக்சல் 7a மாடல்களுக்கு போட்டியாக அமையும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி புதிய நத்திங் போன் 2 துவக்க விலை ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். கடந்த ஆண்டு மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தப்பட்ட நத்திங் போன் 1 விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    முந்தைய நத்தங் போன் 1 மாடலுடன் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை. இதே போன்றே புதிய நத்தங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்றே தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய நத்திங் ஒஎஸ் பயனர்களுக்கு அதிவேக அனுபவம் மற்றும் புதிய அம்சங்களை வழங்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×