search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female suicide"

    • பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது.
    • தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அந்தக் குட்டை பகுதியில் ஒரு பெண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார். தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார். அது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், தீக்குளித்த அந்த பெண், பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி கலா(47) என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டுக்கு கட்டட வேலை செய்ய வந்த பெரும்பாலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(46) என்ற தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சிறிது காலம் பேசிப் பழகிய பாலசுப்பிரமணியன் கடந்த சில மாதங்களாக கலாவுடன் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் வசிக்கும் பெரும்பாலி வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயன்றுள்ளார். அப்போது எனக்கு குடும்பம் உள்ளது. இனிமேல் நீ என்னை சந்திக்க வர வேண்டாம் என பாலசுப்பிரமணியன் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த கலா தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியனை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • திருமணமான 2 ஆண்டில் பரிதாபம்
    • தாய் இல்லாமல் குழந்தை கதறல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ெரயில் நிலையம் அருகே உள்ள பரசுராமன்பட்டி வைஷ்ணவி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் மருத்துவ பிரதிநிதியாக உள்ளார்.

    இவரது மனைவி இளவரசி (வயது 24). 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இன்று அதிகாலையில் வீட்டில் இளவரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து சென்ற டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் - இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் இளவரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆகி 2 ஆண்டுகள் மட்டும் ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தி வருகிறார்.

    காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது.

    அவரது ஆண் குழந்தை தாயைக் காணாது அழுதபடி இருப்பது காண்போரின் மனதை கலங்கச் செய்தது.

    • கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • விஜயா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் சாணா திக்கல் மேட்டை சேர்ந்தவர் சித்தையன் (36).

    இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பவானி தொட்டி பாளையத்தை சேர்ந்த மாதப்பன் மகள் விஜயா (32) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதை த்தொடர்ந்து கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று விஜயா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து விஜயாவின் தந்தை மாதப்பன் அம்மா பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் கைது
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் நூர் அகமது (வயது 38). இவரது மனைவி பாபிதா பேகம் (35). கணவன், மனைவி இருவரும் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 22 -ந் தேதி கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாபிதா பேகம் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக பாபிதா பேகம் இறந்தார்.

    பாபிதா பேகம் சாவுக்கு, நூர் அகமதுதான் காரணம். அவரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் புகார் அளித்தனர். உடலை வாங்க மறுத்தனர்.

    இது சம்பந்தமாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நூர் அகமதுவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை.
    • அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கோபுராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்.

    இவரது மனைவி சித்ரா (வயது 36). இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா இறந்தார்.

    இதுகுறித்து சித்ராவின் தாயார் பூங்கோதை ( 66) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு
    • உதவி கலெக்டர் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமாலம் அடுத்த புதூர் கொல்ல மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கவிதா (வயது 28). இவளுக்கு கவின் (2½)என்ற மகன் உள்ளார்.

    கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கவிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவிதாவின் தாயார் அம்பிகா கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கவிதாவுக்கு திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகளே ஆவதால் வேலூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

    • அம்மா வீட்டிற்கு நீ செல்லக்கூடாது என கணவன் தடுத்ததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே உள்ள துரிஞ்சிகுப்பத்தை சேர்ந்த ராஜா கவுண்டர் மனைவி சாந்தி (வயது 48).

    இவருடைய மகள் சாரதா (வயது 27) கடந்த 9 வருடங்களுக்கு முன் ஓகூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சத்தியமூர்த்திக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சரிதா தன் கணவரிடம் என் அம்மாவை பார்க்க அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு கணவர் அம்மா வீட்டிற்கு நீ செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

    உடனே சாரதா மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து உள்ளார் உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார் அங்கிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்து விட்டார்.

    போளூர் போலீசார் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பெண் தற்கொலை வழக்கில் கணவர் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
    • இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சமையன் (வயது 27). இவரது மனைவி வைரலட்சுமி (27). இவர்களுக்கு 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சமையன், அவரது தந்தை நாகராஜ்(52), தாய் யசோதை (45) ஆகிய 3 பேரும் சேர்ந்து வைரலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இதனால் விரக்தியடைந்த வைர லட்சுமி கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சமையன், அவரது தந்தை நாகராஜ், தாய் யசோதை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.

    அதில் சமையன், அவரது தந்தை நாகராஜ், தாய் யசோதை ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த அனந் தலை கிராமம் கணபதி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கீதா (வயது 48). இவர் வாகனத்தில் சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆனந்தன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

      பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 31).இவரது மனைவி நந்தினி (26). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஆனந்தன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரின் குடிப்பழக்கம் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19.9.2022 அன்று ஆனந்தன் வீட்டிற்கு குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கணவன்- மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

    இதில் மன வேதனை அடைந்த நந்தினி வீட்டில் இருந்த திரவத்தை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து நந்தினியின் தாயார் விஜயா, தனது மகள் சாவிற்கு மருமகன் ஆனந்தன் கொடுமைப்படுத்தியது தான் காரணம் என்று புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் தீவிர விசாரணை
    • இரவில் பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக பொதுமக்கள் தகவல்

    வேலூர்:

    வேலூர் பாலாற்றில் தற்போது ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காட்பாடியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் வரக்கூடிய பழைய பாலாற்றின் பாலத்தின் மேலிருந்து நேற்று இரவு பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக விருதம்ட்டு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடனடியாக விரைந்து சென்று பாலத்தின் மேலிருந்து பார்வையிட்டனர். மேலும் ஆற்றின் தண்ணீரில் பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இருள் சூழ்ந்து காணப்பட்டது. அங்கு எதுவும் தெரியவில்லை.

    ஆற்றில் குதித்த பெண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாரா? அவரது கதி என்ன அல்லது வேண்டுமென்று யாராவது போலீசாரை அலைக்கழித்தார்களா என்பது தெரியவில்லை.

    இன்று காலையில் மீண்டும் போலீசார் பாலாற்று பகுதியில் பார்வையிட்டனர். மேலும் விருதம்பட்டு பகுதியிலிருந்து பெண் யாராவது காணாமல் போனார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை எந்த ஒரு பெண்ணும் காணாமல் போனதாக தகவல் வரவில்லை. ஆற்றில் பெண் உண்மையிலேயே குதித்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

    • கணவன்- மனைவி சண்டையால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்து பெரிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மனைவி லட்சுமி ( வயது 46 ). இருவரும் கூலி தொழிலாளர்கள் . இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது

    இதில் மனமுடைந்த லட்சுமி நிலத்தில் இருந்த ஒட்டன் தழையை ( விஷம் ) அரைத்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தார் . உடனடியாக அவரை , அவரது கணவர் சுந்தரேசன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார் . ஆனால் சிகிச்சை பலன் இன்றி லட்சுமி நேற்று இறந்து விட்டார் .

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர் .

    ×