search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode Accident"

    • கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
    • பின்னர் ஏரியில் சிக்கி தவித்த மணி, ஜானகியை மீட்க போராடினர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து இன்று அதிகாலை 3:30 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிக்கு செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கிளம்பியது. லாரியை சுப்பிரமணி என்பவர் ஓட்டினார்.

    லாரியில் செங்கல் சூலை தொழிலாளர்கள் மணி மற்றும் ஜானகி பயணம் செய்தனர். லாரி ஆப்பக்கூடல் அடுத்த கூத்தம்பூண்டி ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கிய லாரி கட்டுப்பாட்டை இழந்து கூத்தம்பூண்டி ஏரிக்குள் கவிழ்ந்தது.

    இதில் லாரி டிரைவர் சுப்பிரமணி நீச்சல் அடித்து கொண்டு ஏரியிலிருந்து கரை ஏறினார். பின்னர் சுப்பிரமணி அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் ஏரியில் சிக்கி தவித்த மணி, ஜானகியை மீட்க போராடினர். எனினும் முடியவில்லை இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பரிசல் ஓட்டிகளை உதவியுடன் மணி, ஜானகி 2 பேரையும் பத்திரமாக ஏரியில் இருந்து மீட்கப்பட்டனர்.

    இதனையடுத்து அங்கு தயாராக இருந்த 108 மருத்துவ உதவியாளர்கள் கோகுலப்பிரியன், தாமோதரன் ஆகியோர் மணி மற்றும் ஜானகிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • ஈரோடு-காங்கேயம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் கல்லூரி மாணவர் ஜோஸ்வா சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜோஸ்வா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள குப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை ஜோஸ்வா ஈரோடு-காங்கேயம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜோஸ்வா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். எதிரே மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் ஜோஸ்வாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோஸ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இன்று மதியம் ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஈரோடு-கரூர் ரோட்டில் எல்லக்குட்டை குமாரவலசு என்ற பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் மதியம் 12.45 மணி அளவில் முத்தக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே அந்த வழியாக வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது.

    இதில் வேனில் இருந்த 3 பெண்கள், 2 ஆண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் சிவகிரி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்களின் பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக ஈரோடு-கரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காரும், மோட்டார் சைக்கிளும் கடம்பூர் மலைப்பகுதி 12-வது வளைவில் வந்தபோது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் குன்றி மலைப்பகுதியில் இருந்து நேற்று மாலை கோவை நோக்கி ஒரு கார் சென்றது.

    இதேபோல் குன்றி மலைப்பகுதி அருகே உள்ள இருடிப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பழனிச்சாமி, சதீஸ் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் கடம்பூரில் இருந்து இருடிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    காரும், மோட்டார் சைக்கிளும் கடம்பூர் மலைப்பகுதி 12-வது வளைவில் வந்தபோது நேருக்குநேர் மோதி விபத்தானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பழனிச்சாமி, சதீஷ் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கோவையில் சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி, சதீஷ் ஆகியோர் இன்று காலை பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் தேவபிரசாந்த் (வயது 17). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று தனது அத்தை வீட்டிற்கு சென்று பால் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அலுச்சாம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக எதிரே வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக தேவ பிரசாந்த் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தேவ பிரசாந்த் தலையில் காயமடைந்து உயிருக்காக போராடினார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேவ பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தேவ பிரசாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. தேவ பிரசாந்த் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஈரோடு அருகே இன்று அதிகாலை 2 ஆம்னி பஸ்கள் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர்.
    ஈரோடு:

    சென்னையில் இருந்து கோவை நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15 பேர் பயணம் செய்தனர். பஸ்சை வேலூரை சேர்ந்த கன்னியப்பன் (வயது 48) என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் பவானி லட்சுமிபுரத்தில் 2 பயணிகளை இறக்கி விட்டு பஸ் மீண்டும் புறப்பட்டது.

    அப்போது பின்னால் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி மற்றொரு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 25 பேர் இருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த சென்னை ஆம்னி பஸ் மீது பெங்களூரில் இருந்து வந்த ஆம்னி பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.

    அதில் முன்னால் சென்ற ஆம்னி பஸ் தடுமாறியது. ரோட்டோரம் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டின்மீது மோதாமல் இருக்க டிரைவர் வண்டியை ஒடித்து ஓட்டினார். இதில் பஸ் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை.

    அதே சமயம் அந்த பஸ் மீது மோதிய பெங்களூர் ஆம்னி பஸ்சில் வந்த கோவையை சேர்ந்த விஷ்ணு (27) மற்றும் சோனா (23) கலையரசு (28) லட்சுமணன் (60) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

    இவர்கள் ஈரோடு மற்றும் பவானி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்திலிருந்து 2 ஆம்னி பஸ்களின் பயணிகள் தப்பினர்.

    விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சித்தோடு போலீசார் விரைந்து சென்றனர்.

    இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தலையில் காயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாமரத்துபாளையம் புது காலனியைச் சேர்ந்தவர் பாலு (வயது 27). தனியார் மில்லில் கேஷியராக உள்ளார். திருமணமாகவில்லை.

    இந்த நிலையில் பாலு சம்பவத்தன்று இரவு காரை வாய்க்கால் சொக்கலிங்கம் வீதியை சேர்ந்த செல்வராஜ (46) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    மூலப்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த கார் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பாலு செல்வராஜ் இருவரும் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வராஜை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே இன்று காலை அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு இன்று காலை அரசு டவுன்பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் பயணிகள், மாணவர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

    இந்த பஸ் இன்று காலை 9.15 மணியளவில் ஆப்பக்கூடல் அருகே கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ஒருவளைவில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே ஒரு மொபட்வந்தது. அதே சமயம் ஒரு நாய் குறுக்கே செல்ல மொபட்டில் சென்றவர் மொபட்டை திருப்பி ஓட்டினார்.

    இதைகண்ட பஸ் டிரைவர் மொபட் மீது மோதாமல் இருக்க திருப்பி வளைத்து ஓட்டினார். இதில் மண்பாதையில் சறுக்கிய பஸ் ரோட்டோரபள்ளத்தில் கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் பயணிகள் கூக்குரலிட்டனர். இந்த விபத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. இதில் 15 மாணவர்கள் மற்றும் ஒரு பெண் பயணியும் லேசான காயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி சென்று இடிபாட்டுக்குள் சிக்கிய மணவர்கள்மற்றும் பயணிகளை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு, வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது60). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

    நல்லமுத்து நேற்று இரவு தனது மொபட்டியில் பெருந்துறை ரோடு, புதுகாலனி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். பின்னர் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் நல்லசாமி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நல்லமுத்துவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நல்லமுத்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம், விவேகானந்தர் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 43). கணவன், மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு முத்துலட்சுமி வழக்கம் போல் வேலையை முடித்து கொண்டு ஈரோடு வெட்டு காட்டு வலசு பிரிவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் முத்துலட்சுமி பலத்த காயம் அடைந்தார்.

    இதை கண்ட அந்த வழியாக வந்தவர்கள் முத்து லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முத்து லட்சுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே ரோட்டோர பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வனப்பகுதி காடகநல்லிக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    காடகநல்லிக்கு பஸ் சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தது.

    பசுவணாபுரம் அருகே ஒரு வளைவில் பஸ் திரும்பிய போது எதிர்பாராத வகையில் டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ரோட்டோர பள்ளத்தில் பஸ் திடீரென கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ... அம்மா.. என அபாய குரலிட்டனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி சென்று இடிபாட்டுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டனர்.

    சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்து வந்தனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் பெயர் ஊர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

    மேலும் இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் இருந்து ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. படுகாயத்துடன் துடித்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு சோலார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு சோலார் அருகே பூந்துறை ரோட்டில் 60 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.

    அந்த பெண் பெயர் லட்சுமி என்றும் பல ஆண்டாக குடும்பத்தை பிரிந்து அந்த பகுதியில் பிச்சை எடுத்த பிழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    ரோட்டில் லட்சுமி சம்பவத்தன்று நடந்து வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதி படுகாயத்துடன் கிடந்தார். பிறகு 108 ஆம்புலன்சு மூலம் அந்த பெண்ணை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேரத்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 25-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பெண்ணின் உறவினர்கள் யார்? என்று தெரியவில்லை. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×