என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கடம்பூர் மலைப்பாதையில் கார் மோதி 2 வாலிபர்கள் பலி

    காரும், மோட்டார் சைக்கிளும் கடம்பூர் மலைப்பகுதி 12-வது வளைவில் வந்தபோது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் குன்றி மலைப்பகுதியில் இருந்து நேற்று மாலை கோவை நோக்கி ஒரு கார் சென்றது.

    இதேபோல் குன்றி மலைப்பகுதி அருகே உள்ள இருடிப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பழனிச்சாமி, சதீஸ் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் கடம்பூரில் இருந்து இருடிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    காரும், மோட்டார் சைக்கிளும் கடம்பூர் மலைப்பகுதி 12-வது வளைவில் வந்தபோது நேருக்குநேர் மோதி விபத்தானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பழனிச்சாமி, சதீஷ் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கோவையில் சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி, சதீஷ் ஆகியோர் இன்று காலை பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×