search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Discipline"

    • தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
    • சிறு சிறு தவறுகளை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை.

    குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயலாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்ற குழந்தைகளும் வளர வேண்டும் என்று அவசியமில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

    பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது.

    தான் நினைக்கும் படி தான் தன் குழந்தை நடக்க வேண்டும். தான் சொல்வதை தான் குழந்தை கேட்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது. பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உறவு மிகவும் தனித்துவமானது என்றாலும்கூட அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் வளரும் சூழல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

    பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறு அல்ல. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை அவர்களிடம் எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பல நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பார்கள்.

    கண்டிப்பு தவறல்ல கண்டிக்கும் முறை தான் முக்கியம். உங்களின் கண்டிப்பு வரும் காலங்களில் உங்கள் குழந்தைக்கு மோசமான சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிமுறைகளை பார்க்கலாம் மிகவும் கண்டிப்பான பெற்றோர்கள் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையில் இருந்து தப்பிக்க பொய் சொல்பவர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு.

    இந்த பழக்கவழக்கங்களால் நாளடைவில் குழந்தைகள் பெரியவர்களை மதிக்காமல் நடப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல நேரங்களில் உங்கள் குழந்தை பெற்றோரை போலவே தன்னுடன் பயிலும் சக மாணவர்களிடமும் அதிகார தனத்துடன் நடந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.

    தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும். நீ இதை செய்தால் உனக்கு இது கிடைக்கும், நீ அதை செய்தால் உனக்கு அது கிடைக்கும் என்று குழந்தைகளுக்கான கோல்களை ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். சில நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களை குறைசொல்லாமல், அடிக்காமல் அதற்கான மாற்று வழியை சிந்திக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளின் மீது மதிப்பும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இதனால் பெற்றோர்கள்-குழந்தைகள் உறவில் நல்ல உறவு ஏற்படும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி மற்றும் இதர விஷயங்களிலும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டாக, துணையாக இருக்க வேண்டும்.

    ஒரு நண்பனை போல் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் முன் கடுமையான வார்த்தைகளையோ அல்லது தகாத வார்த்தைகளையோ பேசுதல், நடந்து கொள்வது கூடாது. குழந்தைகளுக்கு தேவையான அளவு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு சில வேலைகளை கொடுத்து அவர்கள் அதை செய்வதற்கும், செய்யும் வேலைகளில் அவர்களை துணைக்கு அழைத்து கற்றுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.

    அவர்களே அவர்களுயைய வேலைகள செய்வதற்கு கற்றுக் கொடுப்பதற்கும், அதனை குறையேதும் சொல்லாமலும், நன்றாக செய்தால் பாராட்டுவதற்கும் தயங்க கூடாது. ஒவ்வொரு செயலின்போதும் பாராட்டுவதும், பரிசு பொருட்கள் அளிப்பதும் அவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்கு உதவும்.

    சில பெற்றோர்கள் குழந்தைக்கு அதிகமான சுதந்திரத்தை அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது அவர்களை கண்டு கொள்வதும் இல்லை. இதுபோன்ற நிலையில் குழந்தைகள் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பன போன்ற அடிப்படை விஷயங்களையும் கண்டுகொள்வதில்லை.

    இதனால் குழந்தைகள் வளர்ந்து போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை சின்னாபின்னமாக மாற்றிக் கொள்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக அமைகின்றனர். (உதாரணத்திற்கு அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் அல்லது சொந்த தொழில் செய்பவர்கள், வெளியூரில் இருப்பவர்கள், தாத்தா, பாட்டி வீட்டில் வளரும் குழந்தைகள்) குழந்தைகளின் செயல்பாட்டில் இன்னும் முயற்சி எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தைகளை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருப்பது, அறிவுரை கூறிக்கொண்டிருப்பது, குழந்தைகளை தண்டிப்பது, குழந்தைகளிடம் அன்பான முகத்தை காட்டாமல் எப்பொழுதும் கோபத்துடனும் எரிச்சலுடன் நடந்துகொள்வது, குழந்தை கேட்கும் கேள்விகளை மதிக்காமல் இருப்பது, தன் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்தக்கூடாது.

    இதனால் குழந்தைகள் வருங்காலத்தில் ஆளுமை இல்லாத நபர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம் அதற்கேற்ப குழந்தைகளை நாம் நல்லமுறையில் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு உங்கள் குழந்தையை சரியான வழியில் வருங்காலத்தில் ஆளுமை மிக்க நபர்களாக மாற்ற இப்போதே முயற்சி செய்யுங்கள்.

    அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தைகளை கூட்டி சென்று ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம்.

    சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் சிறந்த குழந்தையாகவும், நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். அந்த மாதிரி குழந்தைகளை அவர்களது விருப்பத்தை பொறுத்து அதில் சிறந்த பயிற்சி கொடுக்க வேண்டும்.

    • தனி மனித ஒழுக்கம், கற்றல் திறனை மேம்படுத்த உதவும் என ராமநாதபுரம் கலெக்டர் பேசினார்.
    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாணவ நல அமைப்பு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி கூட்ட ரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வி துறையின் மூலம் இணைந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவி களுக்கான மாணவ நல அமைப்பு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு மாணவ நல அமைப்பு சங்கத்திற்கான இலச்சினை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் அறிவுத்திறனை மேம்பாடுத்துவதற்காக மாணவ நல அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 293 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ- மாணவிகளை முறையே அந்தந்த வகுப்பில் உள்ள மாணவ- மாணவிகளை 4வகையாக பிரித்து அவர்கள் எளிதில் அறியும் வண்ணம் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா குழு பிரித்து அவர்களின் செயல்பாடு கள் குறித்து கண்காணிக்கப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதில் மாணவ-மாணவிகளை குழு தலைவராக நியமித்து அவர்களும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள் வார்கள். இக்குழுவில் உள்ள மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.

    ஒரு மாணவனின் அன்றாட செயல்பாடு என்பது இக்குழு தொடங்கியதற்கு பின் நல்ல மாற்றத்தை கண்டு அவர்களுடைய வளர்ச்சி ஏற்ற தக்கதாக அமையும். அதுபோல் ஒவ்வொரு நாளும் வகுப்பில் அவர்களுடைய தனிமனித ஒழுக்கம் மற்றும் வகுப்பில் பாட முறைகளை கவனித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன் நாள்தோறும் புத்தகங்கள் வாசிப்பு திறனை மேம் படுத்துதல், விளையாட்டில் ஆர்வமுள்ள விளை யாட்டுகளை தேர்வு செய்து அதில் பங்கேற்று திறமையே மேம்படுத்துதல். இலக்கிய போட்டிகளில் பங்கேற்றல் என கல்வியுடன் சேர்த்து அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்று திறனை மேம்படுத்துதலே இந்த அமைப்பின் சிறப்பு தன்மையாகும்.

    மேலும் கல்வியில் பின் தங்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளை வழங்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஆசிரியர் பயிற்சி மைய பேராசிரியர் டேவிட், முகவை சங்கமம் செயலாளர் வான்தமிழ் இளம் பரிதி, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டில் சாதிக்க சுய ஒழுக்கம் வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அறிவுரை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி ராஜ வித்ய விகாஸ். சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளியில் 5-வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் அய்யப்பன் தலைமை தாங்கி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவர் பேசுகையில், இந்த பள்ளியில் விளை யாட்டுத்துறைக்கு தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.

    மாணவர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இங்கு திரளாக கலந்து கொண்டுள்ள பெற்றோ ருக்கு நான் சொல்வ தெல்லாம் உங்கள் குழந்தை களை விளையாட்டு துறையிலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்க வேண்டும். மாநில அளவில் சிறந்த பள்ளியாக உருவெடுக்க விளையாட்டு மிக முக்கியம் என்றார்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடை பெற்றது. மாற்றுத்திறனாளி களுக்கான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த கிரிக்கெட் அணியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இன்றைய சூழ்நிலையில் கிரிக்கெட் என்பது மிகப் பெரிய பொழுது போக்கு என்பது மட்டுமல்லாமல் வீரர்களுக்கு பெயர், புகழ் மற்றும் பணம் பெற்றுத் தருகிறது. ஒரு துறையில் சாதிக்க ஒரு வருடம் 2 வருடம் போதாது. எனது 14 ஆண்டு கால கடின உழைப்பிற்கு பிறகு தான் நான் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய முடிந்தது.

    உடல் குறைபாடு உள்ள நாங்கள் சாதிக்கும்போது மாணவர்களாகிய நீங்கள் எளிதில் சாதிக்க முடியும். ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை விளையாட்டின் மூலம் கிடைக்கபெற செய்ய முடியும். சுய ஒழுக்கம் விளையாட்டில் சாதிப்ப தற்கு முக்கிய காரணி என்றார்.

    முன்னதாக பள்ளி முதல்வர் டாக்டர் ஐஸ்வர்யா தேவி வரவேற்றார். ஓட்ட பந்தயம், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு பயிற்சி கலை நிகழ்ச்சிகளுடன் சிலம்பம், டேக்வாண்டோ உள்ளிட்ட வீர விளையாட்டுகளின் செயல் வடிவமும் இடம் பெற்றது. ஒட்டு மொத்த சாம்பிய னாக சிகப்பு இல்ல அணி தேர்வு செய்யப்பட்டது. நீல இல்ல அணி இரண்டாம் இடம் பிடித்தது. டிரஸ்டி பிரியதர்ஷினி அய்யப்பன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    காரைக்குடி கிட் அண்ட் கிம் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெயராஜா, அகாடமிக் இயக்குநர் டாக்டர் நிக்சன் அசரியா கல்லூரி முதல்வர் டாக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் பழனியப்பன், மனோஜ் மற்றும் ஆசிரி யர்கள் செய்திருந்தனர். 

    • சுத்தமான சூழ்நிலையை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர் சத்திய தர்மசாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.

    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும், ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 5.10.1823-ல் பிறந்தார். கருணை ஒன்றே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்தார்.

    அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன் மார்க்கத்தை நிறுவினார்.

    இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினர்.

    வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன், என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்திய தர்ம சாலையை நிறுவினார்.

    அவர் ஏற்றிய அடுப்பு நான்கு நூற்றாண்டுகள் கடந்தும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

    மனு முறை கண்ட வாசகம், ஜீவ காருண்ய ஒழுக்கம் ஆகிய உரை நடைகளை எழுதினார். இவர் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.

    இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர் சத்திய தர்மசாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.

    பசிப்பினி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார்.

    ஆன்ம நேய ஒருமைபாட்டு "ஒளி" இன்றும் அறியாமையை நீக்கி "அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி, தனிப் பெருங்கருணை, அருட்பெரும் ஜோதி" அன்பை ஊட்டி வருகின்றது.

    அவர் பிறந்த நாளான அக்டோபர் 5-ம் நாள் (இன்று ) இனி ஆண்டு தோறும், தருபெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும், என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

    மேலும் தமிழக அரசானது வடலூர் சத்தியஞான சபைை பக்தர்கள் வந்து செல்வதற்கான உள் கட்டமைப்புகளை அதிகபடுத்தியும், சுத்தமான சூழ்நிலையை உருவாக்கவும் தமிழக் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் மகான் வள்ளலார் பெயரை புதுச்சேரி விமான நிலையத்திற்கு சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×