search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனி மனித ஒழுக்கம், கற்றல் திறனை மேம்படுத்த உதவும்-கலெக்டர் பேச்சு
    X

    ராமநாதபுரத்தில் மாணவ-மாணவிகளுக்கான நலக்குழு இலச்சினையை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டர்.

    தனி மனித ஒழுக்கம், கற்றல் திறனை மேம்படுத்த உதவும்-கலெக்டர் பேச்சு

    • தனி மனித ஒழுக்கம், கற்றல் திறனை மேம்படுத்த உதவும் என ராமநாதபுரம் கலெக்டர் பேசினார்.
    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாணவ நல அமைப்பு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி கூட்ட ரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வி துறையின் மூலம் இணைந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவி களுக்கான மாணவ நல அமைப்பு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு மாணவ நல அமைப்பு சங்கத்திற்கான இலச்சினை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் அறிவுத்திறனை மேம்பாடுத்துவதற்காக மாணவ நல அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 293 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ- மாணவிகளை முறையே அந்தந்த வகுப்பில் உள்ள மாணவ- மாணவிகளை 4வகையாக பிரித்து அவர்கள் எளிதில் அறியும் வண்ணம் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா குழு பிரித்து அவர்களின் செயல்பாடு கள் குறித்து கண்காணிக்கப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதில் மாணவ-மாணவிகளை குழு தலைவராக நியமித்து அவர்களும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள் வார்கள். இக்குழுவில் உள்ள மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.

    ஒரு மாணவனின் அன்றாட செயல்பாடு என்பது இக்குழு தொடங்கியதற்கு பின் நல்ல மாற்றத்தை கண்டு அவர்களுடைய வளர்ச்சி ஏற்ற தக்கதாக அமையும். அதுபோல் ஒவ்வொரு நாளும் வகுப்பில் அவர்களுடைய தனிமனித ஒழுக்கம் மற்றும் வகுப்பில் பாட முறைகளை கவனித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன் நாள்தோறும் புத்தகங்கள் வாசிப்பு திறனை மேம் படுத்துதல், விளையாட்டில் ஆர்வமுள்ள விளை யாட்டுகளை தேர்வு செய்து அதில் பங்கேற்று திறமையே மேம்படுத்துதல். இலக்கிய போட்டிகளில் பங்கேற்றல் என கல்வியுடன் சேர்த்து அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்று திறனை மேம்படுத்துதலே இந்த அமைப்பின் சிறப்பு தன்மையாகும்.

    மேலும் கல்வியில் பின் தங்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளை வழங்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஆசிரியர் பயிற்சி மைய பேராசிரியர் டேவிட், முகவை சங்கமம் செயலாளர் வான்தமிழ் இளம் பரிதி, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×