search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டில் சாதிக்க சுய ஒழுக்கம் வேண்டும்-கிரிக்கெட் அணி கேப்டன் அறிவுரை
    X

    சாம்பியன் பட்டம் வென்ற ரெட்ஹவுஸ் அணிக்கு கோப்பையை தாளாளர் அய்யப்பன் வழங்கினார்.

    விளையாட்டில் சாதிக்க சுய ஒழுக்கம் வேண்டும்-கிரிக்கெட் அணி கேப்டன் அறிவுரை

    • விளையாட்டில் சாதிக்க சுய ஒழுக்கம் வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அறிவுரை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி ராஜ வித்ய விகாஸ். சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளியில் 5-வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் அய்யப்பன் தலைமை தாங்கி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவர் பேசுகையில், இந்த பள்ளியில் விளை யாட்டுத்துறைக்கு தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.

    மாணவர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இங்கு திரளாக கலந்து கொண்டுள்ள பெற்றோ ருக்கு நான் சொல்வ தெல்லாம் உங்கள் குழந்தை களை விளையாட்டு துறையிலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்க வேண்டும். மாநில அளவில் சிறந்த பள்ளியாக உருவெடுக்க விளையாட்டு மிக முக்கியம் என்றார்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடை பெற்றது. மாற்றுத்திறனாளி களுக்கான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த கிரிக்கெட் அணியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இன்றைய சூழ்நிலையில் கிரிக்கெட் என்பது மிகப் பெரிய பொழுது போக்கு என்பது மட்டுமல்லாமல் வீரர்களுக்கு பெயர், புகழ் மற்றும் பணம் பெற்றுத் தருகிறது. ஒரு துறையில் சாதிக்க ஒரு வருடம் 2 வருடம் போதாது. எனது 14 ஆண்டு கால கடின உழைப்பிற்கு பிறகு தான் நான் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய முடிந்தது.

    உடல் குறைபாடு உள்ள நாங்கள் சாதிக்கும்போது மாணவர்களாகிய நீங்கள் எளிதில் சாதிக்க முடியும். ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை விளையாட்டின் மூலம் கிடைக்கபெற செய்ய முடியும். சுய ஒழுக்கம் விளையாட்டில் சாதிப்ப தற்கு முக்கிய காரணி என்றார்.

    முன்னதாக பள்ளி முதல்வர் டாக்டர் ஐஸ்வர்யா தேவி வரவேற்றார். ஓட்ட பந்தயம், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு பயிற்சி கலை நிகழ்ச்சிகளுடன் சிலம்பம், டேக்வாண்டோ உள்ளிட்ட வீர விளையாட்டுகளின் செயல் வடிவமும் இடம் பெற்றது. ஒட்டு மொத்த சாம்பிய னாக சிகப்பு இல்ல அணி தேர்வு செய்யப்பட்டது. நீல இல்ல அணி இரண்டாம் இடம் பிடித்தது. டிரஸ்டி பிரியதர்ஷினி அய்யப்பன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    காரைக்குடி கிட் அண்ட் கிம் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெயராஜா, அகாடமிக் இயக்குநர் டாக்டர் நிக்சன் அசரியா கல்லூரி முதல்வர் டாக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் பழனியப்பன், மனோஜ் மற்றும் ஆசிரி யர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×