search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Died"

    • திருச்சி தா.பேட்டை அருகே வாலிபர் மர்மான முறையில் உயிரிழந்தார்
    • போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி

    தா.பேட்டை, 

    திருச்சி தா.பேட்டை அடுத்த வாளசிராமணி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவருக்கு திருமணம் ஆகி கீதா என்ற மனைவியும், ஹாசினி (11), ஹரிணி (10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    மேலும் இவருக்கு மனநிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கீதா தனது இளைய மகளுடன் புத்தனாம்பட்டியில் வசித்து வருகிறார். மேலும் அப்பகுதியில் சத்துணவு உதவியாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.

    மற்றொரு மகள் ஹாசினி தந்தை வீட்டில் தாத்தா, பாட்டியுடன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணேசன் அதிக மது போதையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டு வாசலில் தடுக்கி கதவில் மோதியதில் முகம், தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இந்தார்.

    இதையடுத்து அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதுகுறித்து போலீஸ் அவசர உதவி 100 என்ற எண்ணிற்கு தகவல் சென்றுள்ளது. பின்னர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அதனைதொடர்ந்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து கணேசன் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆம்பூர்பட்டி நால்ரோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்திடில் மாநகராட்சி ஊழியர் பலியானார்
    • உடலை கைப்பற்றி மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பாத்திமா மலை ஊரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது 31).இவர் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் இன்று காலை அலுவலக பணி வேலையாக ஒரு ஸ்கூட்டரில் தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். பின்னர் அதே ஸ்கூட்டரில் இன்று மாலை மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விராலிமலை-கீரனூர் சாலையில் ஆம்பூர்பட்டி நால்ரோடு அருகே சென்றபோது எதிரே மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் பாசர்சலால் (27) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் தலையில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பாசர்சலாலை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருப்பெயர் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி கதண்டு கடித்து பலியானார்
    • காட்டில் கட்டியிருந்த மாட்டை அவிழ்க்க சென்ற போது கதண்டு கடித்துள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே திருப்பெயர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 73), விவசாயி. நேற்று காலை பெருமாள் தனது காட்டில் கட்டியிருந்த மாட்டை கதண்டு கடித்தது. இதனால் அவர் மாட்டை அவிழ்த்து வேறு இடத்தில் கட்ட சென்றார். அப்போது பெருமாளையும் கதண்டு கடித்தது. இதுகுறித்து தகவலறிந்த பெருமாளின் மகன் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

    • தொழிலாளி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள புத்த ம்ப ட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இன்று காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சீப்பா லக்கோட்டை அடுத்துள்ள கருப்புசாமி கோவில் பிரிவில் சென்றபோது எதிரில் வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜபாண்டி உயிரிழந்தார்.

    இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூரில் லாரி மோதி தனியார் நிறுவன மேலாளர் பலியானார்
    • அரியலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்

    அரியலூர், 

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, குழிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்(வயது 62). இவர் தற்போது அரியலூர், வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், ஓட்டக்கோவிலுள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஆலைக்கு இருசக்கர வாகனத்தி ல்  பெரம்ப லூர்-தஞ்சாவூர் புறவழி சாலையோரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் ஏற்றிக் கொண்டு வந்த 2  லாரிகளில் ஒன்று, மோதியதில் சம்பவ இடத்திலேயே கதிரேசன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் அரியலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம், அடுத்த ஆனாபுரியை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • பணியில் இருந்த சதீஷ்குமார் திடீரென மயங்கி விழுந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சதிஷ்குமார் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் அருகே திருவாமதூரை சேர்ந்தவர் சதீஷ் குமார் வயது 32. திருமணமாக இவர் புதுவை சின்னக்காலாப்பட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் (ரிசார்ட்) தங்கி ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில்  பணியில் இருந்த சதீஷ்குமார் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த மற்ற ஊழியர்கள் சதீஷ்குமாரை மீட்டு ஆட்டோவில் கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியி லேயே சதிஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து விடுதி கேஷியர் தினகரன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சதிஷ்குமார் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேய்ச்சலுக்கு சென்ற 3 பசுக்கள் மின்சாரம் தாக்கி செத்தன
    • பசுக்கள் இறந்ததை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்

    திருவெறும்பூர்,

    திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கூத்தைப்பாரை சேர்ந்த விவசாயி சேகர் ( வயது 53 ). இவர் சொந்தமாக பால் கறந்து வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 சீமை கறவை மாடுகளும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கறவைமாடும் மேய்ச்சலுக்கு சென்றன.இந்த நிலையில் மாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையில் அந்த பகுதியில் இருந்த மின்சார கம்பிகள் கீழே அறுந்து கிடப்பது தெரியாமல் 3 கறவை மாடுகளும் கம்பியில் உரசின. இதில் சம்பவ இடத்திலேயே 3 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.இன்று காலை மாட்டை தேடி மாட்டின் உரிமையாளர்கள் சென்று பார்த்த பொழுது தான் மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. இறந்த மாடுகளை பார்த்து அதன் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டனர். உடனடியாக அப்பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்வாரிய அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது.

    அந்த பகுதியில் சம்பா ஒருபோக நடவு பயிருக்காக நாற்றங்கால்கள் உளவு ஒட்டி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தற்போது விவசாயப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் சென்று வரும் வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த மின்கம்பி அருந்து விழுந்ததில் விவசாயிகள் எந்தவித அசம்பாவிதமும் தப்பி உள்ளனர். இறந்து போன கறவை மாடு தலா75 ஆயிரம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. 

    • பேக்கரி கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார்
    • தூக்கி வீசப்பட்டதில் லாரியிலும் சிக்கி தலை நசுங்கிய பரிதாபம்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் புதுகாலனியை சேர்ந்தவர் சின்னமுத்தான் (வயது63).

    இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சின்னமுத்தான், தனது நண்பரான குட்டாரபாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடன் அங்குள்ள மின் மயானம் அருகே பேசி கொண்டிரு ந்தனர்.அப்போது சின்னமுத்தான் அருகே உள்ள பேக்கரி கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார்.

    அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் எதிர்பாராதவிதமாக சின்னமுத்தான் மீது மோதியது. இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டது.

    அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இறந்த சின்னமுத்தானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துறையூர் அருகே கோழிப்பண்ணையில் வேலை செய்த வட மாநில வாலிபர் மர்ம சாவு
    • வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் தியாகி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் மதன் (45). இவர் விசாலாட்சி அம்மாள் சமுத்திரம் கிராமத்தில் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஒரிசா மாநிலத்தை ஹேமராஜ் தருவா (43) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் பணியாளர்கள், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் அங்கு சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஹேமராஜ் தருவாவை பரிசோதித்துவிட்டு ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதை அறிந்த துறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று, பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் ஹேமராஜ் தருவா வலிப்பு நோயின் காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர் அருகே கோழி பண்ணையில் பணிபுரிந்த வட மாநில இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • துறையூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்
    • துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது43). இவருக்கு அதே கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று இவரது விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டாரில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கிருஷ்ணன் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், தானே மின்கம்பத்தில் ஏறி மின் தடையினை சரி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.அப்பொழுது கிருஷ்ணனை மின்சாரம் தாக்கியது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிருஷ்ணனை உடனடியாக துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவத்தை அறிந்த துறையூர் போலீசார், கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தற்போது வேலையில் இருப்பதால் வேலை முடிந்து மாலையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.
    • தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி துளசியம்மாள்(79). நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து துளசியம்மாள் தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதுபற்றி அபிஷேகப்பாக்கத்தில் வசிக்கும் தனது பேரன் விமல்ராஜிக்கு தகவல் தெரிவித்தார். அப்போது விமல்ராஜ் தற்போது வேலையில் இருப்பதால் வேலை முடிந்து மாலையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

    அதன்படி விமல்ராஜ் வேலை முடிந்ததும் துளசியம்மாளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்து கொண்டு சென்றார். அப்போது வீட்டில் துளிசியம்மான் தலைகுப்புற விழுந்து தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு விமல்ராஜ் அதிர்ச்சியடைந்தார்.

    ரத்த அழுத்தம் காரணமாக துளசியம்மாள் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து விமல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நின்று கொண்டிருந்த பஸ் மீது சரக்கு வேன் மோதியதில், அதில் பயணித்த ஒருவர் பலியானார்
    • க கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    கந்தர்வகோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தெத்துவாசல் பட்டி பேருந்து நிறுத்தத்தில் தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணிகள் இறங்கி கொண்டிருந்த பொழுது,  புதுக்கோட்டை பாலன் நகரை சேர்ந்த முத்து மகன் ஐயப்பன்(வயது 23) ஓட்டி வந்த சரக்கு வேன் பேருந்தின் பின்புறம் மோதியது.  இந்த விபத்தில்  சரக்கு வேனில் அமர்ந்திருந்த ஆட்டங்குடி கருப்பையா மகன் பாண்டியன் (வயது 40) தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் பாண்டியன் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சரக்கு வேன் ஓட்டி வந்த ஐயப்பன் படுகாயம் அடைந்தார்.இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    ×