என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி கூலித்தொழிலாளி பலி
    X

    அன்னூர் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி கூலித்தொழிலாளி பலி

    • பேக்கரி கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார்
    • தூக்கி வீசப்பட்டதில் லாரியிலும் சிக்கி தலை நசுங்கிய பரிதாபம்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் புதுகாலனியை சேர்ந்தவர் சின்னமுத்தான் (வயது63).

    இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சின்னமுத்தான், தனது நண்பரான குட்டாரபாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடன் அங்குள்ள மின் மயானம் அருகே பேசி கொண்டிரு ந்தனர்.அப்போது சின்னமுத்தான் அருகே உள்ள பேக்கரி கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார்.

    அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் எதிர்பாராதவிதமாக சின்னமுத்தான் மீது மோதியது. இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டது.

    அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இறந்த சின்னமுத்தானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×